திங்கள், ஆகஸ்ட் 27, 2012

பதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி


பதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி

பதிவர் திருவிழாவை பற்றி ருபத்து ஐந்து குறிப்புகளாக கொடுத்து விடுகிறேன் படிக்க கொஞ்சம் ஈஸியா இருக்கும் லே உங்களுக்கு (தலைப்புக்கு காரணம் கொடுத்திட்டேன்)

1. பதிவர் திருவிழாவுக்கு முதல் நாளே வந்து விடுங்கள் என்று நண்பர்கள் அரசனும், மோகன் குமாரும் அன்பான ஆர்டர் போட்டதால் நான் அலுவலகத்திலிருந்து கிளம்பி நேராக மண்டபத்தில் ஆஜர். வருண பகவானும் தன் வேலையை ஆரம்பித்தார் மழையில் நனைய சிறு சலிப்பு ஏற்பட்டாலும் ஒரு வேளை அவரும் விழாவுக்காக அவரும் தனது வருகையை பதிவு செய்ய வந்து விட்டாரோ என்றே தோன்றியது அவரது தூரலை திருவிழாவுக்கு கிடைத்த அட்சதையா எடுத்துக்க வேண்டியது தான் ( ஆகா என்ன ஒரு பாசிடிவ் சிந்தனை )

2. இரவு நான் சென்ற நிமிடத்திலிருந்து வீடு திரும்பல் மோகன்குமார், திண்டுக்கல் தனபாலன் , சர்புதீன் ,பாலகணேஷ் ,மெட்ராஸ்பாவன் சிவகுமார், கோகுல்,ஜெயக்குமார் சங்கவி, என்று பலருடன் பேசி மகிழ்ந்தது ஒரு சுவையான அனுபவமாய் இருந்தது

3. நான் சென்றதிலிருந்து விழா முடிந்து திரும்பும் வரை திண்டுக்கல் தனபாலன் சார் கூடவே இருக்கும் வாய்ப்பு அமைந்தது. அவர் ஊருக்கு சென்று சேர்ந்து விட்டதை நலம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரோ,எனக்கு போன் செய்து தான் நலமுடன் வந்து சேர்ந்து விட்டதை தெரிவித்தார் ( பின்னூட்டத்தில் மட்டுமல்லாமல் இதிலும் முன்னோடியை இருக்கிறார் )

4. காலை பதிவர் அறிமுகம் நிகழ்ச்சியை கேபிள் சங்கர் , சி.பி.செந்தில்குமார் நகைச்சுவை இழையோட தொகுத்து வழங்கினர்

5. பதிவர் அறிமுகத்தில் பங்கு பெற்றோரில் சிலர் மிக சுருக்க
மாகவும் சிலர் விளக்கமாகவும் இன்னும் சிலர் கவரும் விதமாகவும் பேசினார்கள்

6. எனக்கு பொதுவாக மேடையில் ஏறி பேசுவது என்றாலே உதறல் உண்டு நன்றாக பேச வேண்டும் என்று நான் தயார் செய்தாலும் உதறல் காரணமாக பல வாய்ப்புகளை நான் இழந்திருக்கிறேன். இருந்தும் ஏதோ ஒருவாறு பேசி சமாளித்தேன்( நான் எனது அறிமுகத்தில் ஒரு நிமிடம் பேசுவதற்காக மனதிற்குள் ஒரு மணி நேரம் ஒத்திகை பார்த்தேன்)

7. மதிய சாப்பாட்டிற்கு பின் தொடர்ந்த திருவிழாவில் பட்டுகோட்டை பிரபாகர் சிறப்பு விருந்தினர் ஆக பங்கேற்றார் அவர் எனக்கு பிடித்த எழுத்தாளர் எனவே அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள விரும்பினேன். பாலகணேஷ் அறிமுகம் செய்து வைத்தார்அவரது தொட்டால் தொடரும் நாவல் எனது விருப்பமான ஒன்று என்பதை அவரிடம் சொன்னேன். ( அந்த பரபரப்பான சூழலிலும் அவர் என்ன பண்றீங்க என்று அக்கறையுடன் விசாரித்தது என்னை சந்தோசபடுத்தியது)

8. அவரது உரையில் பதிவர்கள் எப்படி வலிமை உள்ளவர்களாய் இருக்கிறார்கள் எனபதையும் பதிவர்கள் பொறுப்புடன் எழுத்து பணியை செய்ய வேண்டும் என்றும் அவரது உரையில் எடுத்துரைத்தார்

9. கையெழுத்து பிரதி தான் இப்போது வலைத்தளம் ஆக உருமாறி இருப்பதை அவர் குறிப்பிட்டு பேசினார் ( நான் கல்லுரி நாட்களில் நடத்திய கையெழுத்து பத்திரிகை அந்த சமயம் என்னுள் நிழலாடியது )

10. மதியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேகா அவர்கள் பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது அவர் சாப்பாட்டுக்கு பின் வரும் தூக்கத்தை இப்போது வரும் கவியரங்கம் வர விடாமல் செய்து விடும் என்றார் அது உண்மைதான் கவியரங்கம் நன்றாக இருந்தது. தூக்கமும் யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்தது என்றாலும் சுரேகா அவர்களின் பேச்சால் அது விரட்டியடிக்கபட்டது . சில பேரை பார்க்கிறப்ப பொறமை வரும் இவர் பேசுவதை பார்க்கையில் எனக்கு கொஞ்சம் லைட்டா வந்தது (சார் இது ஆரோக்கியமான பொறாமை )

11. கவியரங்கத்தில் கவிதை வாசித்த மயிலன் வார்த்தைகளை வலை போல் வீசி மொத்தமா எல்லோரது பாராட்டுக்களையும் அள்ளிட்டார் (ரொம்ப நல்லா இருந்துச்சு மயிலன் வாழ்த்துக்கள்)

12. திருமதி சசிகலா சங்கர் அவர்கள் எழுதிய தென்றலின் கனவு நூலை பட்டுகோட்டை பிரபாகர் வெளியிட சேட்டைக்காரன் பெற்று கொண்டார். (வாழ்த்துக்கள் )

13. சேட்டைக்காரன் தான் எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் அப்படியே என்பதை அவர் பேச்சில் தெளிவுபடுத்தினார். (அவரது தளத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் வாசகம் "உட்கார்ந்து யோசிப்போம்லே" ஆனால் அவர் பேசும் போது உட்கார்
ந்து யோசிச்சு பேசற மாதிரிலாம் தெரியலை )

14. மூத்த பதிவர்களுக்கு சக பதிவர்கள் பொன்னாடை போற்ற, பட்டுகோட்டை பிரபாகர் நினைவு பரிசுகள் வழங்கினார்(அவர்கள் முகங்களில் தென்பட்ட அந்த உற்சாகத்தை பார்க்க கண் கோடி வேண்டும்)

15. சில பதிவர்களுடன் பேசும் போது இவர் ப்ளாகை இன்னும் படிக்காமே இருக்கோமே என்ற ஆதங்கம் இருந்தது

16.திடம் கொண்டு போராடு சீனு (வாட் எ டைட்டில் ) விழாவில் திடம் கொண்டவராய்சுறுசுறுப்பாய் செயல்பட்டு கொண்டிருந்தார்

17. மதுமதியை மண்டபத்தில் வைத்து கொண்டே நான் மதுமதி எங்கே என்று கேட்க நினைத்தேன் ஏனெனில் அவரை போட்டோ வில் தாடியுடன் பார்த்திருந்ததால் அவரை எனக்கு தெரியவில்லை பின்பு அவர் தான் மதுமதி என்று அறிந்த போது ஒரே சிரிப்பலை எங்களுக்குள்பதிவர் அறிமுகத்தை தொகுத்து வழங்கும் ஜாக்கி சேகர், சி.பி.செந்தில்குமார், கேபிள் சங்கர்

பட்டுகோட்டை பிரபாகர் புலவர் சா.ராமானுஜம், சுரேகா இவர்களுடன்
கவியரங்கத்தில் கரை சேரா அலை அரசன்
18. வீடு திரும்பல் மோகன்குமார் என்னிடம் ஏன் இன்னும் நீங்கள் உங்கள் ப்ளாக் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை என்று அக்கறையுடன் விசாரித்தார்

19. வலைச்சரம் சீனா ஐயா அவர்களிடம் வலைச்சரம் பற்றி ஆர்வமாய் குறிப்புகள் கேட்டேன்

20. ஜாக்கி சேகருடன் பேசிய போது ஈரோடு பதிவர் சந்திப்புலே பார்த்தது அடுத்து இப்ப தான் பார்க்கிறோம் இல்லே என்றார் தொடர்ந்த சிநேகத்துடன்

21. கேபிள் சங்கர் சிரித்த முகமாய் அனைவரையும் அணுகியது என்னை அவரிடம் அணுக வைத்தது அறிமுகம் செய்து கொண்டு பேசினேன்

22. சா.ராமானுஜம் ஐயா ,அவர்கள் பேசும் போது விழாவின் வெற்றியை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்

23. தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி சார், சென்னை பித்தன்,வேடந்தாங்கள் கருண்,கவிதை வீதி சௌந்தர் முதல் முறையாய் நேரில் சந்தித்தது மகிழ்ச்சியை தந்தது

24. ஒரு சில பதிவர்கள் குடந்தையூர் என்றவுடன் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள் பலர் அப்படியா என்றார்கள்
(ஒரு வேலை ஆளில்லாத கடையில் டீ ஆத்திட்டிருக்கோம் போலிருக்கு )

25. நண்பர் கரைசேரா அலை அரசன் அவர்கள் இந்த விழாவுக்கும் எனக்கும் ஒரு பாலமாய் (பலமாய்) இருந்தார் அவருக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்பட்டுகோட்டை பிரபாகர் அவர்களுடன் நானும்

எல்லோரையும் ஒரே இடத்தில பார்த்ததில் ரொம்ப சந்தோசமாய் இருந்தது ஒவ்வொருவர் தளத்தின் பெயரை பற்றி கேள்விப்படும் போது எவ்வளவு தளங்கள் எவ்வளவு வித்தியாசமான பெயர்கள் என்று ஆச்சரியம் தோன்றியது .எல்லோரது தளங்களுக்கும் சென்று படிக்கும் ஆவல் இப்போது வந்திருக்கிறது கூடவே இவங்க எல்லோரும் வந்து நம்ம தளத்தை படிக்கிற அளவுக்கு நாம இன்னும் நல்லா எழுதணும் னு அக்கறையும் வந்திருக்கு அதாவது ஒரு உத்வேகம் வந்திருக்கு (பார்க்கலாம்)

விடா முயற்சி விஸ்வரூப வெற்றின்னு ஒரு famous டைலாக் இருக்கு அந்த டைலாக் இந்த பதிவர் திருவிழாவுக்கு பொருந்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல

ஆர். வி.சரவணன்


11 கருத்துகள்:

 1. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

  சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 2. உங்களை சந்தித்ததில் எனக்கு மிக மகிழ்ச்சி எங்கள் ஊரை சேர்ந்த சரவணன் என்கிற ஒரு நண்பர் எனக்கு கிடைத்துள்ளார் நன்றி

  25 விஷயங்கள் தொகுத்து சொன்னது மிக அருமை !

  பதிலளிநீக்கு
 3. மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. அமர்க்களமாக ரசித்து எழுதி உள்ளீர்கள் சார்...

  /// விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ///

  ரசிக்க வைத்தது... நன்றி...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. கலக்கல் தொகுப்புகள் சார் ...
  பல பதிவர்களை கை குலுக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்வு ...
  ஒரு நாள் சென்றதே தெரியவில்லை அவ்வளவு இனிமையான சந்திப்பு ...

  பதிலளிநீக்கு
 6. மிக்க நன்றி சார்... சமீபத்தில்தான் உங்களின் அறிமுகம் எனக்கு.. நேரில் சந்தித்த பொழுதிற்கும் நன்றி....

  பதிலளிநீக்கு
 7. என்னைக் குறிப்பிட்டு எழுதியமைக்கு நன்றி நண்பரே! உங்கள் முகம் மலர்ந்த சிரிப்பு...உங்கள் வெள்ளை உள்ளத்தை வெளிக்கொணர்ந்தது. எப்போதும் மகிழ்வாய் வாழ வாழ்த்துக்களும்..வணக்கங்களும்..!!

  பதிலளிநீக்கு
 8. விழாவில் கலந்து கொள்ளாத குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் சுவையாகத் தொகுத்தளித்தீர்கள்.

  இன்னும் படங்கள் போடலாமே? எனக்காக!

  பதிலளிநீக்கு
 9. நல்ல தொகுப்பு நன்றி சார்...

  பதிலளிநீக்கு
 10. அழகிய கவிதை வாசித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்