புதிய மனிதா
அந்த electronics சர்வீஸ் கம்பெனியில் சர்வீஸ் மேன் ஆக வேலை செய்யும் ராஜாஎன்பவன் மேனேஜர் அழைப்பதாக தகவல் வந்தவுடன் பார்த்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு மேனேஜர் அறையில் நுழைந்தான்
அவனை பார்த்த மேனேஜர் "என்னப்பா உன்னை பற்றி கம்ப்ளைன்ட் வருது" என்றார்
ராஜா குழப்பமாய் "என்னை பற்றியா இருக்காதே சார்" என்றான்
"நேற்றைக்கு நீ டிவி சர்வீஸ் செய்ய போன இடத்திலே சர்வீஸ் பண்ணி தர மாட்டேன் னு சொல்லிட்டு வந்துட்டியாமே"
"சார் அந்த வீட்டு ஓனர் கிட்டே 1500 ரூபாய் பில் ஆகும்னு சொன்னேன் அவர் பில் போடாமே வேலையை முடிச்சு கொடு 750 ரூபாய் தரேன்னு சொன்னார் சார்
அதான் முடியாதுன்னுட்டேன்"
"நீ கம்பெனிக்கு தெரிஞ்சா என்னாகுமோன்னு பயந்துட்டு வந்துட்டேன்னு நினைக்கிறேன்"
"அந்த வீட்டு ஓனர் ஏற்கனவே இருந்த சர்வீஸ் மேன் இப்படிதான் பில் போடாமே காசு வாங்கினதா சொன்னார் சார்"
"அப்புறமென்ன செஞ்சு தர வேண்டியது தானே கம்பெனியிலே இதெல்லாம் சகஜம்"
"சார் அது கம்பெனிக்கு செய்யற துரோகம் இல்லையா ,பில் மூலமா முறைப்படி காசு வந்தா தானே சார் கம்பெனிக்கு லாபம்"
"நீ வேறே ,நம்ம கம்பெனி ஓனர் பல கோடிக்கு அதிபதி இந்தியாலே எங்கியோ மூலையிலே இருக்கார் சுகபோகமா. பதினைந்துக்கு மேல் கம்பெனி நடத்தறார் அவருக்கு கொள்ளை லாபம் தான் அதனாலே இந்த மாதிரி செய்யறதாலே கம்பெனிக்கு ஒன்னும் நஷ்டம் வந்துடாது நம்ம முதலாளிக்கும் தெரிய போறதும் இல்லை ஆகவே நீ செய்யலாம்"
என்று நீண்ட விளக்கம் கொடுத்த பார்த்த மேனேஜரை யோசனையாய் பார்த்த ராஜா
"இல்லை சார் என்னாலே முடியாது "என்றான்
"ஏன் முதலாளிக்கு தெரிஞ்சுடும்னு பயமா சர்வீஸ் பண்ணி 750 ரூபாய் வாங்கிக்க எனக்கு 250ரூபாய் கொடுத்துடு ஏற்கனவே இருந்த ஆள் இப்படி தான் எனக்கு கொடுப்பான்" என்றார்
"என்னாலே முடியாது"
"உன்கிட்டே நிறைய காசு இருக்குனு நினைக்கிறேன்"
"சம்பளம் பத்தாமே கஷ்டப்படறேன் சார்"
"அப்புறம் ஏன் தயங்கறே"
"தயங்கலே சார் உறுதியா தான் சொல்றேன்"
"நான் முதலாளிக்கு பயப்படலே என் மனசாட்சிக்கும் கடவுளுக்கும் நான் பயப்படறேன்"
"முப்பது நாள் உழைச்சு வியர்வை சிந்தி நான் கஷ்டபட்ட காசை தான் நான் சம்பளமா வாங்கறேன் அந்த சம்பளத்துக்கு நான் கொடுக்கிற மரியாதை சார் இது"
"இந்த மாதிரி வர்ற காசு சம்பளத்தை அவமானபடுத்தற மாதிரி
அந்த சம்பளத்துக்கு துரோகம் பண்ண நான் என்னிக்கும் விரும்பினதில்லை "
என்று சொல்லி விட்டு செல்லும் அவனை அதிசயமாய் பார்த்தார் அந்த மேனேஜர்
படம் நன்றி கூகுள்
ஆர்.வி.சரவணன்
உழைக்கத் தயங்கக்கூடாது;
பதிலளிநீக்குநேர்மை தவறக்கூடாது.
-இதுவே கதையின் கரு(த்து)
இது ஒரு நல்(வழி காட்டும்) முத்து!
உங்க கதை நல்ல மெசேஜ், "கஸ்டப்பட்டு உழைச்சு முன்னேற பாரு இஸ்டப்பட்டு எல்லோரும் பின்னால் வருவார்" இது தலைவர் பட பாடல் வரிகள்.
பதிலளிநீக்குநல்ல கருத்துள்ள கதை சரவணன், இப்படியான ஆளுகளை நிஜத்தில் தேட தான் வேண்டியிருக்கு.. :)
பதிலளிநீக்குநல்ல கதை.
பதிலளிநீக்குNalla karuththulla kuttik kathai saravana.
பதிலளிநீக்குvazhththukkal.
நல்லாயிருக்கு சரவணன்..
பதிலளிநீக்கு