சனி, அக்டோபர் 02, 2010

எந்திர ஜாலம்



எந்திர ஜாலம்

எல்லோரும் எழுதியாச்சு நீ என்னத்தை எழுதிட போறேன்னு தானே கேட்கறீங்க
இல்லை சொல்ல வந்ததை சொல்லலேன்னா தலை வெடிச்சுடும் எனக்கு

எந்திரன் படத்தை இன்று காலை என் நண்பர்களுடன் 8 மணி ஷோ பார்த்தேன் சத்யம் எஸ்கேப் தியேட்டரில்

வைரமுத்து புதிய மனிதா பாடலில் எழுதியுள்ளது போல்
கருவில் பிறந்தால் மரிக்கும் அறிவில் பிறந்தால் மரிப்பதே இல்லை
என்பது போல் இயக்குனர் சங்கரின் இந்த படைப்புக்கு அழிவில்லை எனலாம்
சங்கரின் இந்த கனவு உழைப்பு படம் முழுக்க விரவியிருக்கிறது
ஷங்கரின் கனவு வெற்றி கண்டிருக்கிறது ரஜினி யின் துணையோடு

அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த வயதிலும் இப்படி யா என்று கை தட்ட வைக்கிறார் scientist ரஜினி அமைதியின் வடிவம் என்றால் சிட்டி ரஜினி தென்றலாய் மனதில் நுழைகிறார் எங்கும் நிறைகிறார். வில்லன் ரஜினி புயல் இல்லை இல்லை சுனாமி யாய் சுழன்றடிக்கிறார்

அதே அரிமா பாடலில் வரும் வரிகள் ரஜினிக்கு பொருத்தம் என்றால் அது மிகையில்லை
இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய உயரம்தனை நிலவும் நிலவும் தலை முட்டும்

அடுத்து ஐஸ்வர்யா ராய்
இப்பவும் இன்னிக்கு பூத்த ரோஜா போல இருக்கிற இவங்களை பத்தி எழுதறது ஐஸுக்கு ஐஸை வைத்த கதையாகி விடும் இந்த படத்துக்கு அந்த கேரக்டர்க்கு அவங்க தான் பொருத்தம்

இசை ரகுமான் பாடல்களில் பின்னியிருந்தார் என்றால் பின்னணி இசையில் பட்டையை கிளப்பியிருக்கார் அவருக்கு என் சார்பாக ஒரு ஸ்பெஷல் பொக்கே

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பெயருக்கேற்றார் போல் ஒவ்வொரு ஷாட் டையும் ரத்னமாய் ஜொலிக்க வைத்திருக்கார்

அதே போல் வசனங்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது சுஜாதா சுஜாதா தான்

காதல் அணுக்கள் கிளிமஞ்சாரோ அரிமா பாடல்கள் அசத்தலா இருக்கு


என்னடா இவன் நிறையை பத்தி மட்டும் சொல்றான் குறை பத்தி ஒன்னும் சொல்லமாட்டேன்குறான் அப்படின்னு தானே நினைகிறீங்க
சின்ன சின்ன குறைகளே தெரியாத அளவுக்கு

கிளைமாக்ஸ் மிரட்டல் விட்டிருக்கு

பிரமிப்பின் உச்சம் அது

படம் பார்க்கிறப்ப அதை உணர்வீங்க


குடும்பத்தோடு போய் பார்க்கமே விட்டுட்டோம்னு ரொம்ப பீல் பண்ணேன்
(அடுத்த வாரம் போறோம்லே )
நீங்களும் போய் பார்த்துட்டு வாங்க குடும்பத்தோடு

முடிவா சொல்லனும்னா ஏற்கனவே நான் எந்திரன் பற்றிய இடுகையில் குறிப்பிட்டிருந்தது போல் ஒவ்வொரு துறையிலும் உச்சம் தொட்ட சாதனையாளர்கள் இனைந்து உருவாகும் எந்திரன் இந்திய திரையுலகின் உச்சம் தொட வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன்

உச்சம் தொட்டிருக்கிறது

எந்திரன் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்

ஆர்.வி .சரவணன்

அவசரமா எழுதியிருக்கேன் முதல் முறையா விமர்சனம் (சரி அனுபவம் )எழுதியிருக்கேன் ஏதேனும் குறையிருந்தால் பொறுத்துக்குங்கோ


15 கருத்துகள்:

  1. //உச்சம் தொட்டிருக்கிறது//

    தொடாம விட்டிருவமா?

    விமர்சனம் நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. //சொல்ல வந்ததை சொல்லலேன்னா தலை வெடிச்சுடும் எனக்கு//

    :-))

    பதிலளிநீக்கு
  3. ந‌ல்லா எழுதியிருக்கீங்க‌.. அப்ப‌ப்ப‌ சினிமா விம‌ர்ச‌ன‌ங்க‌ளும் எழுதுங்க‌ள்..

    பதிலளிநீக்கு
  4. /உச்சம் தொட்டிருக்கிறது//

    தொடாம விட்டிருவமா? eppoodi says

    நன்றி எப்பூடி தொடாம விட்டுருவமா என்பதில் நானும் ஒருவன்


    நன்றி கிரி


    நன்றி ஸ்டீபன் அவசரத்தில் எழுதியதால் இன்னும் சில விசயங்களை பற்றி குறிப்பிட நினைத்தது முடியவில்லை நன்றி

    பதிலளிநீக்கு
  5. Good attempt. My wishes...

    -Vino

    பதிலளிநீக்கு
  6. "சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த வயதிலும் இப்படி யா என்று கை தட்ட வைக்கிறார் scientist ரஜினி அமைதியின் வடிவம் என்றால் சிட்டி ரஜினி தென்றலாய் மனதில் நுழைகிறார் எங்கும் நிறைகிறார். வில்லன் ரஜினி புயல் இல்லை இல்லை சுனாமி யாய் சுழன்றடிக்கிறார்"

    -மொத்தப் படமே தலைவர்தான்... ஷங்கருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியல போங்க.

    -Vino
    Envazhi

    பதிலளிநீக்கு
  7. நன்றி வினோ உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

    பதிலளிநீக்கு
  8. விமர்சனம் நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. விமர்சனம் நல்லாயிருக்கு சரவணன்..படம் இன்னொரு தடவை பார்க்கனும் போல் இருக்கிறது என்பதே உண்மை..

    பதிலளிநீக்கு
  10. விமர்சனம் நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் சரவணன்.

    பதிலளிநீக்கு
  11. படம் பார்த்து முடிச்சதுன்தான் படத்தை பத்தி யோசிக்க முடிஞ்சது. சில சில லாஜிக் மீறல்கள் தெரிகின்றன. இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் ஒற்றை ஆளாய் ரஜினியின் நடிப்பே சரிசெய்துவிடுகிறது. கமல் நடிக்க வேண்டிய படம் என்று சொன்னார்கள். சாத்தியப்பட்டிருக்குமா இத்தனை விதமான நடிப்பு என ஆச்சிரியம் கொள்ள வைக்கிறார் ரஜினி.

    அடுத்த படம் ரஜினிக்கு என்ன என இப்போதே கேட்க தொடங்கிவிட்டோம்.

    பதிலளிநீக்கு
  12. எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை

    பதிலளிநீக்கு
  13. எந்திரன் அனைவரின் மனம் கவர்ந்த மந்திரன்...

    ரஜினி அவர்களின் டாப்-20 படங்களின் பட்டியல் இங்கே வந்து பாருங்கள்...

    சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)
    http://jokkiri.blogspot.com/2010/02/2020.html

    சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 – (பாகம்-2)
    http://jokkiri.blogspot.com/2010/02/2020_09.html

    சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்
    http://jokkiri.blogspot.com/2010/02/2020_14.html

    பதிலளிநீக்கு
  14. Sigaram thotta padangal niraya irukku! Konjam yosichu parthu sollungal saravanan!

    Thiraiyulaga Nayagan MGR saiyyatha sathanaigala.

    Any way... Good ! Super!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்