ஞாயிறு, அக்டோபர் 10, 2010

திரு வெண் காடு

திரு வெண் காடு


சென்ற வாரம் மயிலாடுதுறை சென்றிருந்தோம் .அங்கிருந்து அரை மணி நேர பயணத்தில் சீர்காழி க்கு அருகே திரு வெண் காடு என்ற ஊர் உள்ளது அங்கே அருள் மிகு சுவேதாரண்ய சுவாமி திருகோயில் உள்ளது அங்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம்

ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த ஆலயம் நவகிரகங்களில் புதனுக்குரிய ஸ்தலமாகும் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக சுவேதாரண்ய சுவாமி என்ற பெயருடனும் அம்பாள் பிரம வித்யா நாயகி என்ற பெயருடனும் அருள் பாலிக்கிறார்கள் அகோர முர்த்தி சன்னதி இங்கு தனி சிறப்பு
புதனுக்கு தனி சன்னதி உள்ளது

கல்வி தொழிலுக்கு அதிபதியான புதன் சன்னதியில் பதினேழு தீபமேற்றி பதினேழு முறை வலம் வந்து வழி பட வேண்டும் நரம்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும் கல்வியில் மேன்மை , நா வன்மை கிடைக்கும்

இதோ நான் எடுத்த சில படங்கள்


கோயில் நுழைவாயில்

நந்தி

புதன் சன்னதி
மூன்று தீர்த்தங்களில் ஒன்று

நடராஜர் சன்னதி
உள் பிரகாரம்
வெளி பிரகாரம்
புதன் சிவ பெருமானை வழிபட்ட தலம் இது

ஆலயத்தில் நாங்கள் இருந்த இரண்டு மணி நேரம் எங்களுக்கு நல்ல மன நிறைவு கிடைத்தது

ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

  1. புகைப்படங்கள் அருமையாக இருக்கிறது.. அந்த கோவிலுக்கு நேரில் வந்தது போன்றொரு உணர்வு.. பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  2. திருவெண்காடுவரை செல்லும் டவுன் பஸ்ஸில் பூம்புகார்
    பேரவைக் கல்லூரிக்குச் சென்று மற்றும் திரும்பியதும்
    பூம்புகார் மற்றும் மணிகிராமம் ஆகிய ஊர்களுக்கு
    அடிக்கடி சென்று வந்ததும் தங்கள் இந்த 'திருவெண்காடு'
    இடுகை படித்து கண்முன் நிழலாடின.

    திருவெண்காடு - பெயர்க் காரணமும் குறிப்பிட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. போட்டோஸ் எல்லாம் ந‌ல்லா வ‌ந்திருக்கு ச‌ர‌வ‌ண‌ன்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்