செவ்வாய், அக்டோபர் 05, 2010

கற்கை நன்றே கற்கை நன்றே


கற்கை நன்றே கற்கை நன்றே

என் கல்லூரி தோழி ஒருவர் வெளியூரில் இருக்கிறார் அவர் ஒரு நாள் காலை எனக்கு போன் செய்து என் பையனுக்கு பள்ளியில் கல்வி பற்றி கவிதை கேட்டுள்ளார்கள் இன்னைக்கே வேண்டும் நீ எழுதி கொடு என்றார். கவிதை எழுதுவதில் நான் பெரிய ஆள் இல்லை உடனே எப்படிப்பா என்றேன் . என் பையன் கிட்டே நீ நல்லா கவிதை எழுதுவேன்னு சொல்லிட்டேன் எனக்கு எழுதி கொடு என்றார்.சரி என்று சொல்லிவிட்டு இரவு வீடு வந்தவுடன் அமர்ந்து எழுதி அவரிடம் நான் போனிலேயே சொல்ல சொல்ல அவர் எழுதி கொண்டார். அவரும் அவர் பையனும் நல்லாருக்கு என்று சொன்னார்கள்
இந்த கவிதை எப்படியிருக்கு என்று நீங்கள் சொல்லுங்களேன்


கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

இது சான்றோர் மொழி


கற்கை நன்றே கற்கை நன்றே


மரிக்கும் தருவாயினும் கற்கை நன்றே


இது எம் மொழி

கல்வியை ஐந்திலும் படிக்கலாம்


ஐம்பதிலும் படிக்கலாம்


வாழ்க்கையில் உயர


இதுவே படிக்கற்கலாம்


மனிதா நீ சேர்த்த செல்வத்தை செலவிடு


கற்ற கல்வியை அனைவர்க்கும் சொல்லி கொடு


இப்போது அளவிடு


செல்வம் காணாது போயிருக்கும்


கல்வியறிவோ குறையாது நிறைந்திருக்கும்


கல்லாதவன் கண்ணிருந்தும் குருடனாகிறான்


கற்றவன் குருடனாயினும் ஆயிரம் கண்ணுடையவனாகிறான்


கல்லாத செல்வந்தனுக்கும் தேவை ஒரு கற்றவன்


கற்ற ஏழைக்கு தேவையில்லை மற்றவன்


கற்றது கையளவு


கல்லாதது உலகளவு


ஆம்


கற்றோம்


கற்போம்


கற்பிப்போம்


இதையே நம் வேத வாக்காய் ஏற்போம்


இன்று ராமலிங்க அடிகள் வள்ளலார் அவர்கள் பிறந்த நாள் நான் நான்காம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை நான்கு வருடங்கள் கும்பகோணம் வள்ளலார் மேனிலை பள்ளியில் படித்தேன்.

இன்று அவரது இந்த பிறந்த நாளில் கல்வி பற்றிய இடுகை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்


ஆர்.வி.சரவணன்

10 கருத்துகள்:

  1. நல்லாயிருக்குங்க சரவணன். மனிதனை மனிதனாக்கக்கூடிய ஆகாரமும், ஆதாரமும் இதே கல்விதான்..

    பதிலளிநீக்கு
  2. //கற்றோம்


    கற்போம்


    கற்பிப்போம்


    இதையே நம் வேத வாக்காய் ஏற்போம்
    //

    சரியா சொல்லி இருக்கிங்க.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தேவதர்ஷன்

    நன்றி பாலாசி

    நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  4. சூப்பரா எழுதியிருக்கிறீங்க. நானும் கவிதை வேணுமெனில் உங்களிடம் தான் கேட்பேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. க‌ல்வியின் சிற‌ப்பை ஆழ‌கா சொல்லியிருக்கீங்க‌.. ந‌ல்லா இருக்கு ச‌ர‌வ‌ண‌ன்.

    பதிலளிநீக்கு
  6. என்னைக் கேட்டால்...
    இந்தக் கவிதை நன்றாக உள்ளது என்பேன்.
    என்னைக் கேட்காவிட்டால்...
    இந்தக் கவிதை மிக நன்றாக உள்ளது என்பேன்.

    பதிலளிநீக்கு
  7. யப்பா யாருப்பா அங்க ? பஸ்ட்டு சரவணன் வீட்டு போன கட்பன்னிவிடு , யாரு போன் பண்ணினாலும் நமக்கும் சேந்து ஆப்பு கிடைக்குது .

    சார் சும்மா ஜாலிக்கு சொன்னேன் , நல்ல கவிதை .(சே.... எப்படியெல்லாம் பொய் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு )

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்