புதன், மே 28, 2014

கோச்சடையான் ஒரு பார்வை




கோச்சடையான் ஒரு பார்வை 

கோச்சடையான் அனிமேசன்  படமாக  உருவாகிறது என்ற போது ரஜினி ரசிகனுக்கு ஒரு சுவாரசியம் வந்தது. அதுவும் தலைவர்  நலமான பின் வரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக ஆரம்பித்தது. இருந்தும் படம் வெளி 
வர  தாமதமாகவே டென்சனில் நகம் கடிக்க ஆரம்பித்தான். ஆடியோ ரீலீஸ் டென்சனை குறைத்தாலும், அடுத்து வந்த ட்ரைலர்  அவ்வளவாக 
நம்பிக்கை ஊட்டவில்லை. அதற்காக  அவன் கலங்கவில்லை இருந்தும் 
கேலியும் கிண்டலும்  அவனை சுற்றலில் விட்டிருந்தன.மௌனமாக அனைத்தையும் கிரகித்து கொண்டு மிகுந்த பொறுமையுடன் 
காத்திருந்தான். 

இப் படத்தில்  சூப்பர் ஸ்டார் சொல்லும், "தண்ணீரே ஆனாலும் அது 
பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால் சல்லடையில் அள்ளலாம்" 
என்ற வார்த்தை அவனுக்கு மெய்யானது. கோச்சடையான் மூலம் ரஜினி ரசிகன் காத்திருந்ததற்கு பலனாய், உற்சாகத்தை  வட்டியும் முதலுமாக பெற்று கொண்டு விட்டான் 

ஒரு படத்துக்கு மிக பெரிய எதிரியே அதிகமாக அதன் மேல் கொள்ளும் எதிர்பார்ப்பு  தான். அந்த படம் சரியாக வந்திருந்தாலும் கூட, அதையும் 

தாண்டி நிற்கும் எதிர்பார்ப்பு  படத்தை டேமேஜ் செய்து விடும் வாய்ப்பிருக்கிறது. இது அதிக அளவு விளம்பரம் செய்யப்படும் படங்களுக்கு மட்டும் இல்லாமல் பெரிய நடிகர், நடிகை, இயக்குனர் என்ற புதிய 
பிரபலமான கூட்டணி சேரும் போது கூட எதிர்பார்ப்பு எகிறி விடும் வாய்ப்பிருக்கிறது. சூப்பர் ஸ்டாரை  பொறுத்தவரை அவர் 
நின்றால் செய்தி நடந்தால் செய்தி  (அவர் எது செய்தாலும் ஆதரிப்போரும் உண்டு எதிர்ப்போரும் உண்டு) என்ற நிலையில் அவரது படங்களுக்கு எப்போதும் உச்சகட்ட  எதிர்பார்ப்பு உண்டு.அதில் கோச்சடையான் இன்னும் ஒரு படி மேலே போய் ரஜினி ரசிகனை தலை கிறுகிறுக்க வைத்து விட்டது 

கிண்டலும் கேலியும் டிராபிக் ஜாம் போல் ஆகி விட்டாலும், சீறி பாயும் குதிரையில் எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும் என்றவாறு எதிர்மறை விமர்சனங்களின் மேல் ராஜ பாட்டை போட்டு கொண்டு தலைவர் வருகையில்,
 எதிர்மறை விமர்சனங்கள் படம் வெளி வருவதில் தாமதம் இதெல்லாம் படத்தை எதிர்பார்ப்பில்லாமல் செய்து விட்டிருந்தாலும்
அந்த மைனஸ் இங்கே பிளஸ் ஆகி போனது. விளைவு தியேட்டர்களில் கோச்சடையான் ஆட்சி.




 டைட்டிலை 3Dயில் பார்க்க நன்றாக இருக்கிறது.  படைகள் பின் தொடர பாய்ந்து வரும் குதிரையின் முகம் கீழே இறங்க அறிமுகமாகும் 
ரஜினி எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் 
நாமும் என்று பாடிய படி அறிமுகமாகிறார். அனிமேசன் என்பதால் கேரக்டர்களுக்குள் ஒன்ற கொஞ்ச நேரம் ஆகிறது. தளபதியாய் களிங்கபுரி நாட்டின் பதவி ஏற்ற ராணா தந்திரமாக  கோட்டைபட்டினம் வந்து சேர்ந்து சரத்குமாருடன் நண்பா என்று கை கோர்ப்பதும் கூடவே இளவரசி மீதும் 
காதல் பார்வை கோர்ப்பதும் ,என்று ராணா செய்யும் அதிரடிகள் ஏன் 
எதற்காக என்ற கேள்விகளை எழுப்புகிறது. மன்னனை கொல்ல 
முயற்சிக்கும் போது  சிறையில் அடைபடுகிறான்.இடைவேளைக்கு 
முன் எழுந்த  கேள்விகளுக்கெல்லாம் பின் பாதியில்
சுவாரஸ்யமான திரைக்கதையில்  பதில் தருகிறார்கள்.
கோச்சடையான் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் செம விறுவிறுப்பு 


கோச்சடையானாக வரும் ரஜினி முகத்தில் தோன்றும்
அந்த தெய்வீகமான அமைதி  சண்டையில் வெளிப்படும் வீரம், ராணா ரஜினியிடம் வெளிப்படும் குறும்பு அதிரடியாய்  கத்தியை உருவும் லாவகம் என்று கேரக்டர் வடிவமைப்புடன் முக வடிவமைப்பும்  
அசத்தலாக  இருக்கிறது.ரஜினியின் அந்த காந்த குரல் இது அனிமேசன் தானே என்ற எண்ணத்தை ஓரமாக ஒதுங்கி போ என்று  சொல்ல 
வைத்து விட்டு தன்னுடன் ஒன்றி  விட  சொல்கிறது  

இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்,கோச்சடையானுக்கு தண்டனை நிறைவேற்ற படும் போது மகன் வந்து அப்பா நீங்க உங்க கடமையை முடிச்சுட்டீங்களா என்று கேட்க, இல்லப்பா என்று சொன்னவுடன் நான் நிறைவேத்தறேன் அப்பா என்று கூறி அவன் 
அப்பாவை முத்தமிடும் போது பார்ப்பவர்கள் கண்கள் கலங்கி போகும்  
அளவு படத்துடன் ஒன்ற முடிகிறது 

வசனங்கள் அவருக்கென்று தனியாக  அமைந்து விடுவது ஆச்சரியம் தான். அவர் பேசும் ஒவ்வௌரு வசனமும் வாள் வீச்சு போல் தான்"வேஷம் என்று வந்து விட்டால் பகலென்ன இரவென்ன,  நாடகத்தை நடத்தியது நீங்கள்  முடித்து வைக்க போவது நான்" "வாய்ப்புகள் தானே அமையாது.நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும் " என்று தொடரும்  வசனங்கள்
பார்வையாளருக்கு இணையாக கை தட்டல்களையும் தியேட்டரில் முண்டியடிக்க வைக்கிறது.  

அடுத்து இதே போல் முக வடிவமைப்பில் ஈர்ப்பவர்கள்  நாசர்,சோபனா, மற்றும் ஆதி.அதிலும் நாசர் முகபாவத்தில் கொண்டு வரபட்டிருக்கும் நயவஞ்சகம் மற்றும் வெறுப்பு பாராட்டதக்கது.
திரு .நாகேஷ் அவர்களை உடல்மொழி மற்றும் குரலில் உயிர்ப்பித்து மரியாதை செய்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட கலைஞன் அவர் என்று 
மனது மீண்டும் சிலாகிக்கிறது.

ஜாக்கிசெராப் சரத்குமார் ருக்மணி என்ற கேரக்டர்களின் முக அமைப்பை 

கூட விட்டு விடலாம்.ஆனால் தீபிகா படத்தின் ஹீரோயின் எனும் போது ரஜினிக்கு நிகராக அவரையும் அனிமேசனில் கொண்டு வந்திருக்க வேண்டும். இதனால் தீபிகா ரஜினி மேல் கொள்ளும் காதலில் நம்மால் ஒன்ற முடியவில்லை. 

இருவருக்கும் வரும்  டூயட் பாடல் காட்சியும்  நடனமும் வெகு அழகு.
இடைவேளைக்கு பின் வரும் அந்த சோக பாடல்  தேவை தானா. ஏனெனில் (பாடல் காட்சியும் தீபிகா நடனமும் நன்றாக இருப்பினும்)
பரபரப்பான சாலையில் இடர்படும் ஸ்பீட் ப்ரேகர் போல் ஆகி விடுகிறது 

ரஜினி தீபிகா மோதும் சண்டை காட்சி,  கப்பல் சண்டை, கிளைமாக்ஸ் போர்க்கள காட்சிகள்,ருத்ர தண்டவ நடனம் இதெல்லாம் அனிமேசனில் சிறப்பு.

ராணா  அதிரடியானவர் எனும் போது கோட்டை பட்டினம் வந்தவுடன் மன்னரை போட்டு தள்ள வேண்டியது தானே.  மறைந்திருந்து தாக்க வேண்டிய அவசியம் என்ன. அண்ணன் சேனா வை பற்றி ஒரு முறை விசாரிப்பதோடு விட்டு விடுகிறார் ஏன் அண்ணனை தேட முயற்சி மேற் கொள்ளவில்லை. தேடி கொண்டிருக்கிறார் என்பதற்கு ஒரு காட்சி யாவது  வைத்திருக்கலாமே. கேரக்டர்களின் நடை மற்றும் கண்களில் தேவையான உயிர்ப்பு இல்லாதது இதெல்லாம் இன்னும் கவனம் எடுத்து மெனக்கெட்டிருக்க வேண்டிய அம்சங்கள்.

கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதை வசனம் என்ற மேடையில்  
ஏ .ஆர்.ரகுமான் என்ற குடையின் கீழ் சூப்பர் ஸ்டாரை (தான் ஒரு 
ரசிகையாக இருந்து) கம்பீரமாய் உலவ விட்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் செய்திருக்கும் இந்த மோஷன் கேப்சரிங் அனிமேஷன் 
முயற்சிக்கு பாராட்டுக்கள் 





நான் 25 வருடங்களுக்கு முன்  கும்பகோணம் பரணிகா தியேட்டரில் ராஜாதிராஜா படத்தை ரீலீஸ் ஆனஅன்று பார்த்தேன். அதற்கு பின் 
இத்தனை வருடங்களாக மற்ற  படங்கள் அனைத்தையும்  சென்னையில் 
தான் பார்த்திருக்கிறேன். இப்போது கோச்சடையான் அங்கே தான் 2D யில் பார்த்தேன்.அடுத்து 3D  சத்யம் தியேட்டரில் பார்த்தேன். இரு முறை பார்க்கும் போதும் படம் முடிந்த பின்னும், படத்தின் மேக்கிங்  பற்றி காட்டும் போது மக்கள் அமர்ந்து அதை முழுக்க பார்த்து வீட்டு தான் நகர்கிறார்கள் 

FINAL PUNCH 

மற்ற படங்களோடு ஒப்பிடுவது எல்லாம் அனாவசியம். 
படம் முழுக்க மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவான ஒரு 
இந்திய படம் (இனி வர போகும் அனிமேசன் படங்களுக்கு ஒரு ஆரம்பத்தை தந்திருக்கிறது ) என்ற வகையில் இந்த கோச்சடையான் திரைப்படம் 
அவசியமான (முக்கியமான) ஒன்று 

ஆர்.வி.சரவணன் 





13 கருத்துகள்:

  1. நல்ல விமர்சனம் நண்பா!!

    பதிலளிநீக்கு
  2. கிட்டத்தட்ட நான் எழுதியிருந்தாலும் இதையேதான் எழுதியிருப்பேன் சரவணன் சார்... மற்றவர்கள் இப்படம் குறித்து அதிகம் எதிர்பார்த்தார்களா தெரியவில்லை எனக்கு இம்மியளவும் எதிர்பார்ப்பு இல்லை, படம் என்னை வெகுவாய்க் கவர்ந்திருந்தது

    பதிலளிநீக்கு
  3. நல்ல நியாயமான விமர்சனம்

    பதிலளிநீக்கு
  4. மிக விரிவான விமர்சனம்! சிறப்பு! நானும் படத்தை பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  5. நன்றி சீனு

    நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்

    நன்றி சுரேஷ்

    நன்றி கும்மாச்சி

    நன்றி வெங்கட் நாகராஜ் சார்

    நன்றி தனபாலன் சார்

    பதிலளிநீக்கு
  6. அருமையான விமர்சனம் சார் நன்று..

    படம் வெளியாவதற்கு முன்பு இருந்த கேலியும் கிண்டலையும் பற்றி நீங்கள் குடுத்திருக்கும் விளக்கம் மிக நன்று..
    படத்தை பார்காமலே சிலர் விமர்சனம் செய்கிறார்கள் அவர்களை என்னவென்று சொல்வது?
    கேலி செய்பவர்கள் படத்தை பார்த்தல் கண்டிப்பாக அவர்களுக்கும் பிடிக்கும்...
    அவர்கள் என்ன சொன்னால் என்ன?
    தியேட்டர்களில் எங்கள் தெய்வம் கோச்சடையான் ஆட்சி.

    படம் மிக மிக பிரம்மாதம்...

    பதிலளிநீக்கு
  7. நான் இந்த வாரம் மூன்றாவது முறையாக செல்லப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. இந்தப் படமே காமிக்ஸ் வடிவில் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று கார்த்திக் சோமலிங்கா குறிப்பிட்டிருந்தார்.
    இதோ இணைப்பு:

    http://www.bladepedia.com/2014/05/Kochadaiiyaan-Tamil-2014-Movie-Review.html#comment-form

    பதிலளிநீக்கு
  9. சபாஷ் நண்பரே! நல்ல ஒரு விமர்சனம்! தலைவர் படம்! எதிர்பார்ப்புகள் இல்லை...ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டும்! படம் முழுக்க மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவான ஒரு
    இந்திய படம் என்பதற்காக......நாங்களும் ஆர்வமாகத்தான் இருக்கின்றோம்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்