கவுண்டமணி செந்தில் ஜாலி மீட்டிங்
கவுண்டமணி செந்தில் இருவரும் சந்தித்து கொண்டால் எப்படி பேசுவார்கள் என்பதை அவங்க ஸ்டைல்ல (அவர்கள் படங்களில் பேசிய வார்த்தைகளை வச்சே தின்க் பண்ணி பார்த்தேன். ஒரு ஜாலி கட்டுரை ரெடியாகிடுச்சு
கவுண்டமணி கம்ப்யூட்டரில் அமர்ந்து முக நூல் பார்வையிட்டு கொண்டிருக்கிறார். உள்ளே நுழைகிறார் செந்தில்
"அண்ணே வணக்கம்ணே"
கவுண்டமணி திரும்பாமலே கை கூப்பி வணக்கம் வைத்து விட்டு
பின் திரும்பி செந்திலை பார்த்தவுடன் "அடச்சீ நீ தானா, உன்னை
கும்பிட்ட கையை பன்னீர் ஊற்றி கழுவணும் " என்கிறார் நக்கலாய்
"போங்கண்ணே உங்களுக்கு எப்பவும் குசும்பு தான்"
"அதுக்கு ஏன்டா முகத்தை தார் பூசின மாதிரி வச்சிட்டு சொல்றே உட்காரு" என்றவர்,
செந்தில் கையில் இருக்கும் இலையை பார்த்து விட்டு "என்னடா வீட்டுக்கு இலை வாங்கிட்டு போறியா" என்கிறார்
"இல்லண்ணே போற இடத்தில எங்கியாவது சாப்பாடு போட்டா
சாப்பிடலாம் னு இலையோடயே வந்துட்டேன். இலை செலவையாவது அவங்களுக்கு மிச்சம் வைக்கணுமில்ல"
சாப்பிடலாம் னு இலையோடயே வந்துட்டேன். இலை செலவையாவது அவங்களுக்கு மிச்சம் வைக்கணுமில்ல"
"ஆமாமாம். நீ தான் இலையை தவிர வேற எதையும் மிச்சம் வைக்க மாட்டியே. ஏண்டா மட்கார்ட் மண்டையா. அவ்வளவு செலவு பண்ணி சாப்பாடு போடறவன் இலைக்கு செலவு பண்ண மாட்டானா "
"சரி சரி டென்சன் ஆகாதீங்க. டிவி ல என்ன பார்த்துகிட்டு இருக்கீங்க"
"டேய் இது டிவி இல்லடா. இங்க்லீஷ் ல கம்ப்யூட்டர் னு சொல்வாங்க தமிழ்ல கணினின்னு சொல்வாங்க"
"என் மூளைக்கே இப்ப குழப்பம் வந்துருச்சிண்ணே"
"பரவாயில்லியே.உன் மூளைக்கு கூட அப்பப்ப வேலை கொடுக்கறே போலிருக்கு"
" சும்மாருங்க.எப்ப பாரு காமெடி பண்ணிட்டு. ஏழாவது பாஸ்
பண்ண எனக்கு தெரியாதது பத்தாவது பெயிலான உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது னு நானே யோசிச்சிட்டிருக்கேன் "
கவுண்டமணி முறைத்து "பிச்சிபுடுவேன் பிச்சு. நீ இன்னிக்கு
என் கிட்டே அடி வாங்காம கிளம்ப மாட்டியா"
" ஒரு படத்துல கம்ப்யூட்டர்ல வேலை பார்க்கிறவனை பார்த்து என்னடா டிவி பார்க்கிறேனு நீங்க தான் அண்ணே சொன்னீங்க."
"டேய் அது அப்படா. இப்ப நான் ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் லெவல்ல கலக்கறேன் தெரியுமா"
"எப்படி கண்டதை சாப்பிட்டா வயித்தை கலக்குமே அப்படியா"
கவுண்டமணி "டேய் நீ முதல்ல கிளம்பு. பி.பி னா என்னனு
தெரியாதவனுக்கு கூட அதை வர வச்சிடுவே "என்கிறார்
செந்தில் " ஐ அம் வெரி சோரி ண்ணே" என்று தன் வாயை மூடி கொள்கிறார்
மணி மீண்டும் படிக்க ஆரம்பிக்க
"என்னண்ணே இப்படி சுவாரஸ்யமா படிக்கறீங்க"
"அது ஒண்ணுல்லடா.முக நூல்ல நிறைய பேர் எழுதறாங்க. படிக்க
செம இண்டரெஸ்டா இருக்கு. நேரம் போறதே தெரியல"
"அப்படி என்னத்தை பெரிசா எழுதி கிழிச்சிட்டாங்க "
"நீ முதல்ல கையில் வச்சிருக்கிற இலையை கிழிச்சிடாதே"
"சரி நாலஞ்சு எடுத்து விடுங்கண்ணே"
"எடுத்து விடறதுக்கு இதென்ன பாம்பா"
"எனக்கும் கொஞ்சம் பொழுது போகணும்ல"
"நீ சும்மாவே உட்கார்ந்திருந்தால் கூட பொழுது போகும்டா. பொழுது வந்து உன் கிட்டே சொல்லிச்சா. நீ எதுனா படி அப்ப தான் நான் போவேன் னு "
"இந்த கவுன்ட்டர் கொடுக்கிறது உங்க கிட்டே இன்னிக்கும் அப்படியே இருக்குண்ணே "
"சரி சரி கண்ணு வைக்காதே"
"அண்ணே என் கண் பட்டால் நல்லது னு எங்க ஊருல சொல்வாங்க"
"எங்க கொஞ்சம் கண்ணை காட்டு" பார்த்து விட்டு
"யப்பா ஒரு வருஷத்துக்கு தாங்கும் " என்றவர் மீண்டும் கம்ப்யூட்டர் பார்க்க ஆரம்பிக்கிறார் ஒரு ஸ்டேடஸ் படித்து விட்டு அவர் சிரிக்க செந்திலும் சேர்ந்து சிரிக்கிறார்
"ஏண்டா நான் ஜோக் படிச்சேன் சிரிச்சேன். நீ என்னத்துக்குடா சிரிச்சே"
"நீங்க படிச்சிட்டு சிரிச்சீங்க. நான் படிக்காமையே சிரிச்சிட்டேன்.புரியலையா படிச்சும் அறிவை வளர்க்கலாம் படிக்காமையும் வளர்க்கலாம்"
"எப்படிடா உனக்கு இப்படிலாம் பேச வருது" என்று பரிதாபமாய் கேட்கிறார்
"அதுவா வருதுண்ணே"
"என்னை டென்சன் பண்ணாதே. நானே டென்சன்ல இருக்கேன்"
"என்ன டென்சன் சொல்லுங்கண்ணே"
"ம்.ஒரு பொண்ணு குட் மார்னிங் னு ஒரு வரில ஸ்டேடஸ் போட்டிருக்கு அதுக்கு நூறு லைக் விழுந்திருக்கு " கதிரவன் தன் கிரணங்களால் தட்டி எழுப்பும் வரை தூங்காமல் முடிந்தால் சூரியனை வரவேற்க தயாராய் இரு. காலை வணக்கம்" னு ஒரு பையன் ஸ்டேடஸ் போட்டிருக்கான் "
"அதுக்கு ஒரு ஐநூறு லைக் விழுந்திருக்குமே"
" க்கும்.ஒருத்தர் கூட லைக் பண்ணலடா. முக நூல்க்கு வந்த
சோதனையை பார்த்தியா"
சோதனையை பார்த்தியா"
"யாரோ எழுதினதுக்கு இவ்வளவு பீல் பண்றீங்களே. உங்க தம்பி நான் உங்க கிட்டே ஒரு கேள்வி கேட்டேன். நீங்க இன்னும் பதில் சொல்லல. இவ்வளவு ஏன் ஒரு பீல் கூட பண்ணல. இது நியாயமாண்ணே " என்று அழுகைக்கு தயாராகிறார்
"இதுக்கு ஏண்டா தரையில விழுந்து புரள்ற மாதிரி அழுகறே"
"ரொம்ப முக்கியமான கேள்வி அண்ணே அது.
தமிழ்நாடே ரசிச்சு சிரிச்ச கேள்வி அது"
கவுண்டமணி தலையில் கைகளை வைத்து சொரிந்து கொண்டே
"எனக்கு ஒரே குழப்பமா இருக்குடா. அப்படி என்னத்த நீ கேட்டு நான்
பதில் சொல்லாமே விட்டேன் "
"கார் வச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சிருக்காங்க னு கேட்டேனே இது வரைக்கும் சொன்னீங்களா"
கவுண்டமணி எழுகிறார். அவர் முகத்தில் தெரிந்த முறைப்பை
பார்த்து செந்தில் கிளம்ப முற்படுகிறார்
" ஒன் மினிட் ப்ளீஸ்" என்கிறார் கவுண்டமணி அமைதியாய்
செந்தில் பதற்றதுடன் நிற்க
"நீ கூட என்னோட கேள்வி ஒன்றுக்கு இன்னும் பதில் சொல்லாம
பெண்டிங் வச்சிருக்கே மேன் "
"அண்ணே எங்க ஊருல என்னை அறிவு கொழுந்துனு சொல்வாங்க.
எனக்கு எதையும் மிச்சம் வச்சு பழக்கம் கிடையாது"
"எங்க இந்த கேள்வி ஞாபகம் இருக்கா பாரு"
"ஒரு பழம் இங்கிருக்கு அந்த இன்னொரு பழம் எங்க இருக்கு? "
"அதாண்ணே இது" என்று செந்தில் சொல்லி விட்டு அவசரமாய்
வெளியில் பாய்கிறார்
"இதோ வரேண்டா" என்று கவுண்டமணியும் கூடவே விரைகிறார்
ஆர்.வி.சரவணன்
FINAL PUNCH
இந்த ஜாலி கட்டுரை நான் ஆறு மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். இது வரை ஒன்றும் பதிலில்லை.எனவே நமது
தளத்தில் வெளியிட்டு விட்டேன்.உங்களின் விருப்பத்தை பொறுத்து கவுண்டமணி செந்தில் தங்கள் சந்திப்பை தொடர்வார்கள்
மீண்டும் கவுண்டமணி - செந்தில் காமெடி.....
பதிலளிநீக்குகலக்கல் சரவணன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அடிக்கடி சந்திக்கட்டும்.. களை கட்டுகிறது..
பதிலளிநீக்குசூப்பர் ரசித்து சிரித்தேன்.
பதிலளிநீக்குநல்லா கல, கலன்னு பேசி, படிக்க, படிக்க...
பதிலளிநீக்குபொழுது போகுது. (படிக்காமலும் பொழுது போகுமே?)
ஹாஹாஹாஹாஅ செம கற்பனை சரவணன் சார்! சூப்பர்! மிகவும் ரசித்தோம்! சிரித்தோம்! அவர்கள் குரலிலேயே கேட்பது போல இருந்தது!
பதிலளிநீக்குமறுபடியும் முதல்லே இருந்தா...
பதிலளிநீக்குரசித்தேன்
பதிலளிநீக்கு