வியாழன், ஜூன் 05, 2014

ஸ்வீட் காரம் காபி







கும்பகோணம் அருள்மிகு  ஸ்ரீ சாரங்கபாணி கோவில் தேர் 

ஸ்வீட் காரம் காபி



இந்த தலைப்புல பதிவெழுதி ரொம்ப நாளாச்சு. அதுக்கு காரணம் நேரமில்ல னு எல்லாம் கதை விட மாட்டேன். இன்னும் சிறப்பா
எழுதலாமேனு தோணுச்சு .அதனாலே கொஞ்சம் கேப் விட்டேன். 
தொடர்ந்து டீ குடிக்கும் போது இல்லாத டேஸ்ட் கொஞ்ச நாள் நிறுத்திட்டு பின் சாப்பிடும் போது  டேஸ்ட்டா இருக்கும். 
அது போல் தான் இதுவும் 

இந்த தலைப்புக்கு ஒரு சிறப்பு இருக்குது. இந்த தலைப்புல நான் எழுதிய பதிவில் தான் எனது குறும் பட ஆசையை பற்றி சொல்லியிருந்தேன். அதை படித்து தான்  நண்பர் துளசிதரன் தன் குறும்படத்தில் பணியாற்ற  அழைத்தார். என்பது இங்கே கூடுதல் தகவல் 




நண்பர் எழுத்தாளர் ஜாக்கி சேகர், இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா பற்றி தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.நான்  பார்க்கவில்லை என்றவுடன் முதல்ல பாருங்க சரவணன் கேரக்டரைசேஷன்   நல்லாருக்கும் என்று சொல்லியிருந்தார்.  நாளைக்கு டெஸ்ட் இருக்கு படிக்கனும்னால் ஒத்தி போட்டுடலாம். படம் பார்க்காமல் ஒத்தி போடுவதாவது நெவர் என்று முதல் வேலையாய் (அன்றாட வேலைகளை முடித்த பின் தான்) படம் பார்த்தேன்.பசுபதி காமெடி ஆக்டிங் ரொம்ப பிடிச்சிருந்தது. விஜய் சேதுபதி அந்த கேரக்டர்ல இறங்கி அடிச்சிருக்கார் சீ நடிச்சிருக்கார்  உடல் மொழி அவ்வளவு சூப்பரா இருக்கு.  நாயகி நந்திதா எப்போதும் முறைப்புடனும் சுவாதி லொட லொட என்று அஸ்வினை (இன்னொரு ஹீரோ) சந்தேகம் கொண்டு காதல் கொள்பவராகவும் வருகிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் கவனம் ஈர்க்கிறார். இருவேறு கதைகள் வெவ்வேறு திசையிலிருந்து புறப்பட்டு ஒன்றாய் இணையும் திரைக்கதை. இடைவேளைக்கு முன் பிளாஷ் பேக்கிலேயே கதை நகர்த்தபடுகிறது. ஒரே நாளில் நடக்கும் கதையில் அந்த கொலை தான் மைய புள்ளி எனும்  போது  அதை இன்னும் அழுத்தமாக வைத்திருக்கலாம். ரத்த தானம் மற்றும் குடி கூடாது என்ற இரு நல்ல விஷயங்களை முன் வைக்கிறது படம்.பாடல்கள் மூன்றுமே செமையா இருக்கு. எம்.எஸ் பாஸ்கரிடம் மாட்டி கொள்ளாமல் போனிலேயே அவரது ஊழியர்கள் பேசுவது போலீஸ் ஸ்டேசன் காட்சிகள் எனக்கு பிடித்திருந்தது (படம் பார்த்ததில் ஐ யாம்  ஹாப்பி இயக்குனர் கோகுல்) 





 எனை ஈர்த்த இன்னொரு படம் 
தெகிடி.  சஸ்பென்ஸ் த்ரில்லர் (சில இடங்களை தவிர மற்ற இடங்களில்) நன்றாக வேலை செய்திருக்கிறது. ஹீரோ அசோக் செல்வன்  த்ரில்லர் படத்தில் துருதுருப்பு இல்லாமல் இருக்கிறார். ஹீரோயின் ஜனனி சினிமாஸ்கோப்
கண்களால் ஈர்க்கிறார்.இதில் வரும் ஒரு பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல் காட்சியில் ஹீரோயின் ஓவியம் வரைய அவர் வரைந்த ஓவியம் போலவே  அதே போஸில் ஹீரோ வந்து அமர்வது  கவிதை  காட்சி 


எப்போதுமே என்னோட சாய்ஸ் இளையராஜா பாட்டு தான். இது ஒரு ட்ராக்கில் போய்கிட்டு இருந்தாலும் சில மாதங்களா எனக்கு புது பாடல்கள் நிறைய பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. இமான் பட்டைய கிளப்பிய பாடல்களில் ஜில்லாவில் கண்டாங்கியும் கூடை மேல கூடை வச்சி கூடலூறு போற புள்ளே என் விருப்ப ரகம் (ராகம்)  ஒரு முறை குமுதம் அரசுவிடம் ஒருவர் எனக்கு புது பாட்டு எதுவும் பிடிக்க மாட்டேங்குது பழைய பாட்டு தான் பிடிக்கிறது ஏன் என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அரசு உங்களுக்கு வயதாகி கொண்டிருக்கிறது என்று அர்த்தம் என்று பதிலளித்து இருந்தார். இதை ஏன் இங்கே சொல்கிறேன் மனசு எப்போதும் இளமையாக வைத்து கொண்டால் புதிய பாடல்களும் பிடித்து விட கூடிய வாய்ப்பிருக்கிறது 


இந்த முறை புத்தக கண்காட்சியில் வாங்கிய சுஜாதா புத்தகங்கள் அனைத்தும் படித்து விட்டேன் இதில் கொலையுதிர்காலம் எனக்கு மிக முக்கியமானது. இது தொடராக குமுதத்தில் வந்த போது நான் படித்த சுஜாதாவின் முதல் கதை இது தான். அப்போது படித்து புரிந்து கொண்டதற்கும் இப்போது புரிந்து கொண்டதற்கும் நிறைய வித்தியாசங்கள். அந்த தொடரில் ஜெயராஜ் வரைந்த ஓவியங்கள் சில என் மன கண்ணில் இன்னும் இருக்கிறது இதில் கணேஷ் ரொமாண்டிக் மூடுக்கு செல்வதும்  வசந்த்  காதில் புகை வருவதும் செம ரகளையா இருக்கும்  சுஜாதாவின் காலம் பொற்காலம் தான்  வேறென்ன சொல்ல 






திரு.மு.க ஸ்டாலின் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் 
திரு.அன்பழகன் அவர்களுடன் பி.ஜே.பாபு 


மே 2 அன்று, கும்பகோணம் காந்தி பார்க் அருகே நான்கு  ரோடு இணையும் இடத்தில் ஒரே டிராபிக் ஜாம் ஆகியிருக்கிறது.கும்பகோணம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திரு. அன்பழகன் அவர்கள் காரில் 
அவ் வழியே வந்திருக்கிறார். டிராபிக் ஜாம் ஆனதை கண்டு  உடனே இறங்கி அரை  மணி நேரமாக  மக்களோடு மக்களாக நின்று  போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியிருக்கிறார் .இந்த வீடியோ வை எனது முக நூல் நண்பர் பி.ஜே.பாபு கும்பகோணம்   வெளியிட்டிருந்தார். ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ நின்று  போக்குவரத்தை சரி செய்ய வேண்டுமா என்ற கேள்வி வருமானால் அதற்கு பதில் இப்படி சொல்லலாம்.பொது மக்களில் நாம் எத்தனை பேர் வண்டியில் அமர்ந்து கொண்டு ஹாரன் அடித்து கொண்டிராமல் இறங்கி வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்திருக்கிறோம் சொல்லுங்கள். அவர் போக்குவரத்தை நின்று  சரி செய்திருப்பது கண்டிப்பாக  பாராட்ட வேண்டிய ஒன்று.  நண்பர் பாபுவிடம் இந்த வீடியோ எடுத்தது யார் என்று கேட்ட போது  வெளி நாட்டில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் இதை எடுத்தார் என்றும்  (அவருக்கு ஊர் கும்பகோணத்திற்கு அருகில் ) அவரிடமிருந்து வாங்கி இதை முகநூலில் வெளியிட்டதாகவும் சொன்னார். நல்லதை  நாட்டில் உள்ள எந்த கட்சி செய்தாலும் பாராட்ட வேண்டும் என்ற உணர்வுடனே தான்  
இங்கே பகிர்ந்திருக்கிறேன். (கவனியுங்கள் நான் எந்த கட்சி அபிமானியும் கிடையாது ) 

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வீடியோ



வேல் முருகவேல் என்ற முக நூல் நண்பர் எனது ஊரான கும்பகோணத்தை சேர்ந்தவர். சரி கும்பகோணத்தில் இருக்கிறாரே பார்த்து ஹலோ சொல்லலாம் என்று சந்தித்தேன். என் பதிவுகள் பற்றி சொன்னார். எனக்கு பேனா ப்ரெசென்ட் பண்ணினார். (தயங்கினாலும் )என் எழுத்துக்கு கிடைத்த ஒரு அவார்ட் போலவே இதை நினைத்து கொள்கிறேன். அடுத்த வாரம்  கும்பகோணம் பரணிகா தியேட்டரில் கோச்சடையான் படம் பார்க்க வந்திருந்தார் இருவரும் சேர்ந்தே படத்திற்கு சென்றோம். (முதல் சந்திப்பு நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டது. அடுத்த சந்திப்பு எங்களின்  ரசிப்பு தன்மை ஏற்பாடு செய்து கொடுத்தது) 



ஹோட்டல் ல நெருக்கியடிச்சு  டேபிள் போடாதீங்க. (அதுல உனக்கு என்ன பிரச்சனை னு கேட்கிறீர்களா.)சுவற்றின் ஓரம் உட்கார்ந்து சாப்பிட்ட பின் நாம் எழுந்து வெளியில் வர வேண்டுமென்றால் பக்கத்தில் உள்ள  ஆளை எழுப்பி விட்டு தான் வெளியில்  வர வேண்டியுள்ளது. சாப்பிடுபவரை எழுப்புவது பாவம் அல்லவா ஆகவே .......(மீண்டும் முதல் வரியை படியுங்கள்)



எனது முதல் நாவலான இளமை எழுதும் கவிதை நீ .....வெளி வரும் வரை என் உறவினர்கள் முக நூல் இணைய தளம் படிக்காத நண்பர்கள்  ஏதோ எழுதறான் என்று ஆர்வமில்லாமல் தான் இருந்தார்கள். நாவல் வெளியாகி படித்த பின் அவர்களின், பாராட்டும்   அடுத்து என்ன எழுத போறே என்ற கேள்வியும்  எழுத்தை மட்டும் விட்டுடாதே என்ற அறிவுரையும் சேர்ந்து 
என்னை திக்குமுக்காட வைத்து அடுத்த தொடர் ஆரம்பிக்க வைத்திருக்கிறது "காவல் குதிரைகள்" என்ற இந்த திரைக்கதை தொடர் சமுதாய அநீதியை எதிர்த்து குரல் உயர்த்துகிறது என்றாலும் காவல் துறைக்கு மரியாதை செய்யும் தொடராகவும்  இருக்கும்.  சட்டம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. விரைவில் ஆரம்பமாகும் இந்த தொடருக்கு உங்களின் (ஊக்கம்) பங்களிப்பும் அவசியம்.  நண்பர்களே

FINAL PUNCH


நாம் கஷ்டப்படும் போது  எதாவது உதவி கேட்டுட போறான் என்று நினைத்து தள்ளி நிற்கும் உலகம் தான், நாம் நன்றாக இருக்கும் போது எதுனா உதவி செய்தால் தான் என்ன  குறைஞ்சா போயிடுவான் என்று நினைப்புடன் அருகில் வர முயற்சிக்கிறது 

ஆர்.வி.சரவணன்  


21 கருத்துகள்:

  1. பட்டைய கிளப்புங்க பாஸ்.. காவல் குதிரைகள் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  2. அரசு வின் அந்த பதிலை நான் படித்திருக்கிறேன்.. :)

    பதிலளிநீக்கு
  3. மனசு எப்போதும் இளமையாக வைத்து கொண்டால் எதுவுமே பிடித்துப் போகும்...!

    வாழ்த்துக்கள் சார்...

    பதிலளிநீக்கு
  4. இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா இன்னும் பார்க்கல.. பார்க்க வேண்டிய லிஸ்ட்ல இருக்கு.. தெகிடி நல்ல படம் இருந்தும் காப்பின்னு சொன்னங்க..

    காவல் குதிரை தலைப்பு சூப்பர்.. சீக்கிரம் ஆரம்பிங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சீனு விரைவில் ஆரம்பிக்கிறேன்

      நீக்கு
  5. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா படம் நானும் ரசித்த ஒரு படம்! சட்டமன்ற உறுப்பினரின் பணி பாராட்டத்தக்கது! புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்! பைனல் பஞ்ச் கலக்கல்!

    பதிலளிநீக்கு
  6. காவல் குதிரைகள்
    மற்றுமொரு வெற்றிப் படைப்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. திரு.சாவி ஒரு முறை பதில் தந்திருந்தார்: 'தினமும் நமக்கு இன்னும் 50 ஆண்டு கால வாழ்க்கை இருக்கிறது; நாம் இளைஞன்தான் என்று நினைத்துக் கொள்வேன்; உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும்' என்று. அந்த பதில் நினைவு வருகின்றது.

    பதிலளிநீக்கு
  8. எம்.எல். ஏ. திரு அன்பழகன் அவர்களின் அந்த போக்குவரத்து சேவை செய்யும் விடியோ நானும் முன்பே பார்த்தேன். திரு. அன்பழகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. 'காவல் குதிரைகள்' வெற்றிக் குதிரைகளாய் பறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  10. இ.ஆ.பா. மற்றும் தெகிடி இரண்டுமே எனக்குப் பிடித்த படங்கள்...

    "காவல் குதிரை" கடைசியாக நாம் சந்தித்தபோது சொன்னீர்களே, அந்தக் கதையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ் சரவணன் உங்களிடம் கிரைம் த்ரில்லெர் ஆரம்பிக்க போவதாக சொன்னேன் அல்லவா அது தான் இது நன்றி

      நீக்கு
  11. ஸ்வீட், காரம் காப்பியில் எல்லாமே ஸ்வீட்!!!!!!!

    இரண்டு படங்களுமே இன்னும் பார்க்க வில்லை....பார்க்க வேண்டும்.

    அதுவும் இரண்டு அதிக ஸ்வீட்ஸ்! ஒன்று M.L.A. செய்த விஷயம் மிகவும் பாராட்டிற்குரியது! எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யாத ஒன்று! மக்களோடு மக்களாக இருப்பவர்தான் ஒரு நல்ல அரசியல்வாதி! அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி!

    அடுத்த மிக இனிப்பான ஸ்வீட் தங்கள் தொடர் ஆரம்பமாவது! காவல் குதிரைகளுக்கு வாசகர்களாகிய நாங்கள் எல்லோரும் காவல் இருக்கிறோம் சார்! வி மீன்....நாங்கள் ஆவலுடன் வாசிக்கக் காத்திருக்கின்றோம்.....!!! ஜமாயுங்கள் சார்! தங்கள் எழுத்துக்கள் எல்லாம் வெற்றி பெற எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு
  12. ஃபைனல் பஞ்ச் - உண்மை......

    ஸ்வீட் காரம் காபி மணம் சுவை நிறைந்ததாக இருந்தது. பாராட்டுகள் சரவணன்.

    பதிலளிநீக்கு
  13. சரவணன் ஸ்டாலின் படம் பார்த்ததும் நீங்க அரசியல்ல சேர்ந்துட்டீங்களோ ன்னு நினைத்துட்டேன். :-) ஏற்கனவே அரசியல்வாதி மாதிரி கெட்டப்புல வேற வந்து இருந்தீங்க...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்