சும்மா ஒரு ஆர்வத்தில்
நான் குறும்பட படப்பிடிப்புக்கு கேரளா பாலக்காடு சென்று வந்த அனுபவங்கள் ஒரு லைவ் ரிப்போர்ட் பதிவாக இந்த தலைப்பில் வருகிறது . இந்த பயணம் உருவான விதம், முதல் நாள் அவுட் டோர் ஷூட்டிங், இரண்டாம் நாள் இன் டோர் சூட்டிங் இவற்றுடன் ஒரு சுற்றுலாவும் என்று நான்கு பதிவுகளாக தர இருக்கிறேன். (ஒரே பதிவில் தர முடியாதுஎன்பதால்)
பொருத்தருள்க நண்பர்களே.
எப்ப நமக்கான வாசல் திறக்கும் என்பது நமக்கே தெரியாது. நாம தான் விழிப்போட இருந்து வாய்ப்பு வரப்ப டக்குனு பிடிச்சிக்கணும்.அப்படின்னு சொல்வாங்க.பாருங்களேன் சினிமா இயக்குனர் ஆகிற அதிகப்படியான ஆசையில படிப்பை சரியாய் கவனிக்காம இருந்தவன் பட்ட வேதனைகள் ஏளனங்கள் வலி மிகுந்த அத்தியாயங்கள். பெற்றோர் எதிர்பார்க்கிறதை செஞ்சிட்டு அப்புறமா நம்ம ஆசையை பத்தி யோசிக்கலாம் னு தூர வச்சிட்டு ஓரளவு குடும்பதிர்க்கான கடமையை செஞ்சிட்டு
(20 வருஷம் போயிடிச்சு) என்னோட ஆசையை தூசி தட்டி எடுத்தேன்.
இணையம் கீ போர்ட் கொடுத்துச்சு. எழுத ஆரம்பிச்ச பின்னாடி என்னோட சினிமா கனவு என்னை தினமும் துரத்திட்டே இருந்துச்சு. குறும்படங்கள் எடுப்பது மூலம் நம் ஆர்வத்துக்கு தீனி போட்டுடலாம்னு நினைச்சேன்.ஆனால் பாருங்க நான் எந்த ஷூட்டிங்கும் வேடிக்கை பார்த்தது கூட இல்லை.ஒரு விசயத்தை சரியாக தெரிந்து (புரிந்து) கொள்ளாமல் அதில் ஈடுபடுவது தவறு.எனவே நான் சந்திக்கும் நபர்களிடம் இது பற்றி கேட்க ஆரம்பித்தேன். நான் கேட்ட நபர்கள் ஒன்று குறும்படம் எடுத்து முடித்திருந்தனர்.இல்லை அடுத்து எடுக்கிற
ஐடியா இல்லை பார்க்கலாம் என்றனர். (அறிமுகமில்லாத ஒருவர் அவர் எடுத்த குறும்படம் பற்றி ஸ்டேடஸ் போட அதை பார்த்து அதற்காகவே அவருடன் முகநூலில் இணைந்து கொண்டேன். அவர் என்னை விட வயதில் சிறியவர். இருந்தும் வெட்கம் எல்லாம் பார்க்காமல் கேட்டேன். சொல்றேன் என்ற ஒற்றை வையில் பதில் வந்தது. ஒரு வருடம்
ஆகியும் ஒன்றும் சொல்லவில்லை) இந்த பதில்களால் சலித்து சோர்ந்து போய் சரி வேலைக்கு போனோமா வீட்டை பார்த்தோமா என்று இருந்து விடலாம் என்று நான் முடிவெடுக்கையில் ஒரு யோசனை தோன்றியது. கடைசியாய் ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் எனது ஸ்வீட் காரம் காபி பதிவில் யாராவது குறும்படம் எடுத்தால் சொல்லுங்கள் கற்று கொள்ள விரும்புகிறேன் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
படப்பிடிப்புக்கு முன் ஒரு திட்டமிடல் திரு.துளசிதரன் அவர்கள்
இதற்கு பாலக்காட்டிலிருந்து பதில் (அழைப்பு) வந்தது. வலை பதிவர் திரு.துளசிதரன் அவர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.அதில் தான் ஒரு ஸ்கூல் டீச்சர் என்றும் கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்காக குறும்படம் எடுத்து வருவதாகவும் சொல்லி, இது வரை தான் எடுத்த குறும்படம் லிங்க் கும் அனுப்பியிருந்ததுடன் தாங்கள் விரும்பினால்
இந்த வருட குறும்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ளலாம் என்றும் அழைத்திருந்தார். கண்டிப்பாக வருவதாக சொல்லி.உடனே பதில் அனுப்பினேன் மேலும் அவர் போன் நம்பர் கொடுத்திருந்ததால் போன் செய்தும் நன்றி தெரிவித்தேன்.எனது தளம் படித்து வருவதாகவும் எனது தளத்தை அவருக்கு அறிமுகம் செய்தது தனது கல்லுரி தோழி திருமதி
கீதா ரங்கன் என்றும் தெரிவித்தார் அவரும் போன் செய்து என்னிடம் பேசினார். இப்படியாக தொடங்கிய நட்பு தொடர்ந்து வலு பெற்றது.
இதோ சென்ற வாரம் (ஏப்ரல் 30 மே 1) குறும்பட படபிடிப்பிற்க்கு என்னை ஆர்வத்துடன் கிளம்பி செல்ல வைத்தது.
எனக்கு எப்போதுமே ஒரு பிரச்னை உண்டு. முக்கியமான வேலை வரும் போது தான் மற்ற வேலைகள் வந்து என்னை அழுத்தி விடும் இப்போதும் அப்படியே. அலுவலக வேலைகள் என்னை அழுத்தியது.ஷூட்டிங் போகவே முடியாது என்பது போல் ஆகி விட்டது நிலைமை. இருந்தும் என் ஆர்வமும் துளசிதரனுக்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டோமே போகவில்லை என்றால் நம்மை பற்றி என்ன நினைப்பார் என்ற வேகமும் என்னை கிளம்ப வைத்தது. சந்தோசமாக கிளம்ப வேண்டியவன் டென்சனொடு கிளம்பினேன்.இதற்கு உதாரணம் வேண்டுமென்றால்
8.25 மங்களூர் எக்ஸ்பிரஸ்சில் புக் செய்திருந்தேன்.ஆனால் நான்
ரயில்வே ஸ்டேசனில் நுழைந்தது 8.05 மணி.ஹோட்டலில்
டிபன் வாங்கி கொண்டு வந்து ரயிலில் ஏறிய போது மணி 8.20
என் சீட் கதவுக்குஅருகில் இருக்கும் சைடு லோயர். அதில் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள். என் சீட் என்றவுடன் இருவர் எழுந்து கொண்டு
விட மற்ற இருவர் போனால் போகிறது என்று இடம்
கொடுத்தார்கள். அரக்கோணம் மற்றும் அதற்கு அடுத்த ஸ்டேஷன்
இறங்க வேண்டியவர்கள் எல்லாம் இதில் ஏறிஇருந்தார்கள். அன் ரிசர்வ் கம்பார்ட்மெண்ட் போல் எங்கும் கூட்டமாக இருந்தது. வடிவேலு போல் ஆரம்பத்திலேயே ஆரம்பிச்சிட்டாங்களா என்று உள்ளுக்குள் நொந்தவாறு அமர்ந்தேன்.
குறும்படத்தில் நடிப்பவர்கள்
12 மணிக்கும் மேல் ஒருவாறு தூங்கி கழித்தேன் பக்கத்து சீட்
பயணியிடம் பாலக்காடு வந்தால் எழுப்புங்கள் என்று நான் சொல்லியிருந்தேன் அவரும் அங்கே தான் இறங்குகிறார் என்பது ஒரு நிம்மதி. அதே போல் அவரும் கடமையில் கண்ணும் கருத்துமாக,
முழித்த படி படுத்து கொண்ருந்த என்னை எழுப்பி விட்டார்.
பாலக்காடு நெருங்க நெருங்க டென்சன்கள் மறைந்து போய் என் நெடு
நாள் கனவொன்று நிஜமாக போகும் வேளை நெருங்குவதை என் மனது உணர்ந்து உற்சாகத்தை பி பி எகிறுவது போல் எகிற வைத்தது. அதிகாலை 4.30 மணிக்கு தொந்தரவு செய்கிறோமே என்று யோசித்தாலும் வேறு வழியில்லை எனபதால் போன் அடித்தேன். துளசிதரன் நான் ஸ்டேஷன் வந்துட்டேன் சார் உள்ளே வரவா இல்லை நீங்கள் வெளியில் வந்து விடுகிறீர்களா என்று கேட்டார். நானே வந்து விடுகிறேன் என்று சொன்னேன் ஆனால் ரயில் நின்று நான் இறங்கும்
போது பார்த்தால் கோச் வாசலிலேயே நின்றிருந்தார் பயணம் சுகமா என்றுகேட்டவாறு. இருவரும் நலம் விசாரித்த படி வெளியில் வந்தோம்
பெங்களூரிலிருந்து வந்திருந்த பிஜு
தனது காரை எடுத்து கொண்டு வந்திருந்தார். கூடவே அவரது உறவினர்
பிஜு என்பவரும் காரில் காத்திருந்தார் அவரை அறிமுகபடுத்தினார்.அவர் பெங்களூரில் வேலை செய்கிறார் நடிப்பதற்காக வந்திருக்கிறார் என்றும் சொல்லவே ஆச்சரியப்பட்டேன். அவரும் அப்போது தான் பெங்களூரிலிருந்து பேருந்தில் வந்து இறங்கியிருந்தார்.எங்கள் இருவரையும் ஹோட்டல் கைரளிக்கு அழைத்து சென்றார்
ஷூட்டிங்
தொடரும்
(நாளைய பதிவில் முதல் நாள் ஷூட்டிங் மற்றும் அதில் நடைபெற்ற விபத்து)
ஆர்.வி.சரவணன்
மிக்க சந்தோஷம்
பதிலளிநீக்குதங்கள் நெடு நாளையக் கனவு
நிறைவேறியது மட்டுமல்லாது அது
பதிவர் தொடர்பு மூலம் நிறைவேறியது
என அறிய மிக சந்தோஷம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
முதல் நாள் நடந்த நிகழ்வுகளை அறிந்தேன்... நன்றி...
பதிலளிநீக்கு'புரோட்டா கார்த்தி 'குறும்பட இயக்குனருக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிமையான அனுபவம் தான். தொடரின் மற்ற பகுதிகளையும் படிக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்! நம் இலக்கில் உறுதியாக இருந்தால் ஒரு நாள் அது நிறைவேறும் என்று கற்று தருகிறது உங்கள் வாழ்க்கை! நன்றி!
பதிலளிநீக்குதங்களின் நெடுநாளையக் கனவு நிறைவேறியிருக்கிறது
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துக்கள் முதல்நாள் சூட்டிங் சொல்லுங்க ஐயா!
பதிலளிநீக்குஅருமையான நடை!. அடுத்து வரும் பகங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கச் செய்திருக்கிறது தங்கள் இடுகை. காத்திருக்கிறோம். மிக்க நன்றி!
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குகுறும்படத்திற்கு நீங்கள் எப்படி சென்றடைந்தீர்கள் என்ற பயணத்தை சுவையாய் ஆரம்பத்துள்ளீர்கள்...
பதிலளிநீக்குதொடரட்டும் நண்பரே!