சனி, ஆகஸ்ட் 21, 2010

பதிவுலகில் நான் எப்படிபட்டவன்



பதிவுலகில் நான் எப்படிபட்டவன்

என்னை அருமை நண்பர் எப்பூடி தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார் அவருக்கு என் நன்றி இதோ பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என்ற தொடர் பதிவு

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஆர்.வி. சரவணன்
(கோயில்லே ஆயிரம் பேருக்கு சாப்பாடு எல்லாம் போட்டு வச்ச பெயரல்ல இது )


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


ஆம் அது தான் என் உண்மையான பெயர்

(ஆம் )

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....



(இது ஒன்னும் சரித்திர நிகழ்வு கிடையாது )

செய்திகள் படிப்பதற்காக ஒவ்வொரு தளமாக நான் சென்று படிக்க படிக்க எனக்கு வலைபதிவு உலகம் சுவாரஸ்யமானது .பின் என்வழி வலைத்தளத்தில் நான் தொடர்ச்சியாக படித்து பின்னூட்டம் இட்டேன் எனது கவிதை, கட்டுரை, என் பையன் வரைந்த ரஜினி படம் என்று என் வழியில் வெளி வந்தது. கிரி , எப்பூடி தளங்களும் எனக்கு பரிச்சயமாகின .நாமும் ஒரு வலை தளம் தொடங்கி பார்ப்போம் என்று எனது குடந்தையூர் தளத்தை தொடங்கினேன்.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒன்னுமே செய்யலை. பதிவுலக நண்பர்களின் தளங்களுக்கு சென்று பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டேன். அதன் மூலம் என் தளம் ஏதோ கொஞ்சம் பிரபலமானது

(சன் டிவி முதல் எல்லா பத்திரிக்கைகளிலும் விளம்பரம் கொடுக்க நினைச்சாலும் அதெல்லாம் முடியுமா )


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?



ஆம். ஆனால் தொடர்ச்சியாக எல்லாம் இல்லை . சொந்த விசயங்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என்னை பொறுத்தவரை கஷ்டங்களை பகிர்வதன் மூலம் துக்கம் பாதியாக குறைகிறது. சந்தோசங்களை பகிர்வதன் மூலம் சந்தோஷம் இரட்டிப்பாகிறது.

(பார்த்து வாழ்க்கை வரலாறு எதுனா எழுதிட போறே)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சம்பாதிப்பதற்கு எல்லாம் எழுதவில்லை. இதில் எழுதுவதின் மூலம் எனக்கு மன நிறைவு கிடைக்கிறது. மற்ற பதிவர்களின் பதிவுகள் படிப்பதும் சுவாரஸ்யமாக உள்ளது. நல்ல ஒரு பொழுதுபோக்கு தான்

(பதிவுகள் மூலம் வருமானம் வந்தால் வேணாம்னா சொல்லிட போறே )

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


குடந்தையூர் என்ற ஒரே ஒரு வலை பதிவு மட்டுமே

(ஒரு வேலையை ஒழுங்காக செய்தால் போதும் இன்னொன்னு னா பூமி தாங்குமா )

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்

இல்லை யார் மேலும் நான் பொறாமை பட்டது இல்லை கோபப்பட்டதும் இல்லை மற்ற பதிவர்கள் போல் சிறப்பாக எழுத வேண்டும் என்று பொறுமையுடன் மட்டுமே இருக்கிறேன்

( பொறாமையா அப்படினு ஒரு வார்த்தை இருக்கான்னு கேட்பே போலிருக்கு)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

நான் வலை பதிவு உலகில் நட்சத்திரமாய் மின்ன ஆசைபடுவதாக குறிப்பிட்டிருந்தேன். என்வழி வினோ நட்சத்திரமாக என்ன சூரியனாகவே பிரகாசிக்கலாம் நீங்கள் என்று வாழ்த்தினார். நண்பர்கள் கிரி ,எப்பூடி நல்ல இடுகைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்று ஆரம்பத்திலேயே கண்டிப்புடன வாழ்த்தி உர்சாகபடுதினர் மற்ற பதிவுலக நண்பர்களும் தொடர்ந்து என்னை ஊக்கபடுத்தி வருகின்றனர். இல்லாவிட்டால் கண்டிப்பாக என்னால் ஐம்பது பதிவுகள் எழுதியிருக்க முடியாது.

(உலகமே ஊக்கப்படுத்தினால் தான் வாழ முடியும்னு சொல்வே போலிருக்கு )

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியன் நான்

திரை உலகம் சென்று டைரக்டர் ஆக வேண்டும் என்பது என் விருப்பம் முடியவில்லை. ஒரு ஜர்னலிஸ்ட் ஆக வேண்டும் என்பதும் என் விருப்பம்
முடியவில்லை. பதிவுலகின் மூலம் எனது விருப்பம் நிறைவேறியது போல் ஒரு மன நிறைவு கிடைத்திருக்கிறது . என் எழுத்துக்கள் யாரையும் புண்படுத்த கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் எழுதுகிறேன்

(வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பாப்போம்)

என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றிகள் பல பல

ஆர்.வி. சரவணன்

13 கருத்துகள்:

  1. நல்லதுங்க சரவணன்... உங்களைப்பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. எளிமையாகவும், நிதானமாகவும் பதிலலித்துள்ளீங்கள்... ஐம்பதென்ன? இதேபோக்கில் 500 இடுகைகளையும் கடக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. உங்களைப்பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. 5 மற்றும் 6 வது பதில்கள் சூப்பர்.
    பச்சை கலரில் எழுதியதை படிக்கதான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. வேறு நிறத்தில் எழுதி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. //(வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பாப்போம்) //

    இவ்வளவு நல்லவரா இருக்கிங்க...
    இந்த இடுகைமூலமாக உங்க
    நல்ல மனச தெரிஞ்சிக்கிட்டேன்.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. அழகா சொல்லி இருக்கீங்க ..!!

    பதிலளிநீக்கு
  5. எழுதியமைக்கு நன்றிகள், சிறப்பாக உள்ளது . தொடர்ந்தும் கலக்குங்கள் .

    பதிலளிநீக்கு
  6. ப‌தில்க‌ள் ந‌ல்லா இருக்கு ச‌ர‌வ‌ண‌ன்.. வாழ்த்துக்க‌ள்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி பாலாசி உங்கள் வாழ்த்துக்கு நன்றி

    நன்றி எப்பூடி தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி

    நன்றி ப்ரியா உங்கள் வாழ்த்திற்கு

    நன்றி நிஜாமுதீன்

    நன்றி ஜெய்லானி

    நன்றி நாடோடி

    பதிலளிநீக்கு
  8. ப‌தில்க‌ள் ந‌ல்லா இருக்கு ச‌ர‌வ‌ண‌ன்.
    உங்களைப்பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. நல்ல தெளிவான பதில்கள்.

    பதிலளிநீக்கு
  10. சரவணன் முன்பை விட தற்போது உங்கள் எழுத்தில் முன்னேற்றம் தெரிகிறது (டகால்ட்டியாக சொன்னது அல்ல). வாழ்த்துக்கள்.

    நீங்க ஏன் இன்னும் இன்டலி ஓட்டுப்பட்டையை நிறுவாமல் இருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  11. நன்றி குமார்

    நன்றி வானதி

    உங்கள் வாழ்த்திற்கு நன்றி கிரி

    எனை ஊக்கபடுத்தும் அனைத்து வலைதள நண்பர்களுக்கும் எனது நன்றிகள்

    பதிலளிநீக்கு
  12. எல்லா பதில்களும் அருமை... அதிலும்... அடைப்புக்குள் உள்ள கமெண்ட்ஸ் எல்லாம் சூப்பர்.. :-))
    தொடர்ந்து கலக்குங்க..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்