சனி, ஆகஸ்ட் 28, 2010

இப்படி ஒருவர் இப்படியும் ஒருவர்


இப்படி ஒருவர் இப்படியும் ஒருவர்


சமீபத்தில் நான் எனது மனைவி மகன் மகள் உடன் வேளச்சேரியில் உள்ள உறவினர் வீடு செல்வதற்காக அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் சென்றோம்.
அங்கே பேருந்து நிலையத்தில் வேளச்சேரி செல்ல இரண்டு பேருந்து நின்று கொண்டிருந்தது எது முதலில் செல்லும் என்று தெரியாததால் அங்கே நின்று கொண்டிருந்தவரிடம் கேட்டேன். அவர் தெரியலைங்க நானும் தெரியாமல் தான் நிற்கிறேன் என்றார். நாங்கள் சரி என்று கூட்டம் குறைவாக இருந்த பேருந்தில் ஏறி அமர்ந்தோம்

சில நிமிடங்களில் அடுத்த பேருந்து கிளம்ப ஆயத்தமானது இறங்கி சென்று ஏறி விடலாமா என்று யோசித்து எழுந்தோம் அப்போது நான் விசாரித்த அந்த நபர் ஓடி வந்து அந்த பேருந்து கிண்டி வரைக்கும் தான் செல்கிறதாம் நீங்கள் இறங்காதீர்கள் என்று சொல்லி விட்டு கிளம்பிய பேருந்தில் சென்று ஏறி கொண்டார். அந்த நபரை (மன்னிக்கவும்) மனிதரை நினைக்கும் போது சந்தோசம் அடைந்தேன்.
உலகில் இப்படி ஒருவர்


உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு அன்று மாலையே வேளச்சேரி பேருந்து நிலையம் வந்தோம். அம்பத்தூர் எஸ்டேட் செல்ல வேண்டிய பேருந்து வர வர கூட்டம் உடனே திபு திபு வென்று ஏறி அமர்ந்தது. எங்களால் ஏற முடியாமல் இரண்டு பேருந்தை விட்டு விட்டோம். மூன்றாம் பேருந்து வரும் போதே நான் மட்டும் சென்று ஏறி பெண்கள் இருக்கையில் என் மனைவிக்கும் மகளுக்கும் கைக்குட்டை போட்டு இடம் பிடித்து எனக்கும் மகனுக்கும் ஆண்கள் பக்கம் இடம் போட்டேன் .

கூட்டத்தில் ஏற முடியாமல் எல்லோரும் ஏறியவுடன் தான் என் குடும்பத்தினர் ஏறினர். அதற்குள் பெண்கள் பக்கத்தில் நான் போட்டு வைத்த இடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்து விட்டார்.

"என்னங்க நான் சீட் போட்டு வச்சிருக்கேன்" என்றேன்
" எல்லோரும் இது போல் சீட் போட்டா நாங்க எப்படி அமர்வது" என்றார்.
" நான் நீங்கள் முன்னாடியே வந்து சீட் போட வேண்டியது தானே நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஏறி சீட் போட்டேன் தெரியுமா" என்றேன்.
" எல்லாரும் கஷ்டப்பட்டு தான் ஏறி வரோம் "என்று கூறிய படி கைக்குட்டை யை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டார்.

நான்" நீங்க உட்காரதுக்கு நான் சீட் போட்டு வைக்கணுமா" என்று கோபப்பட்டேன்.
"இன்னொரு சீட் இருக்கு உட்கார சொல்லுங்க" என்றார்.
"அப்படினா ஏன் கைக்குட்டை யை எடுத்து கொடுத்தீங்க" என்று நான் அவரிடம் கேட்டதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை .

பின் என் மனைவி ,மகன், மகள், மூவரும் ஆண்கள் பக்கம் நான் போட்ட இருக்கையில் அமர்ந்து வந்தனர். நான் நின்று கொண்டே பயணித்தேன் பயண நேரம் ஒரு மணி நேரம்.

அந்த பெண்மணி எனக்கு முடியலைங்க நான் உட்கார்ந்துக்கிறேன் என்று சொல்லியிருந்தால் நான் சரி என்று ஒப்பு கொண்டிருப்பேன் ஆனால் அவர்கள் இப்படி நடந்து கொண்டது என்னை வருத்தமடைய வைத்தது

உலகில் இப்படியும் ஒருவர்

படம் நன்றி கூகுள்

ஆர்.வி.சரவணன்

10 கருத்துகள்:

  1. //அந்த பெண்மணி எனக்கு முடியலைங்க நான் உட்கார்ந்துக்கிறேன் என்று சொல்லியிருந்தால் நான் சரி என்று ஒப்பு கொண்டிருப்பேன்//

    வேண்டுகோளாக மென்மையாகக் கேட்டுக்
    கொண்டால் நாமே மனமுவந்து அந்த
    இருக்கையை அந்தப் பெண்மணிக்கு
    வழங்கிடலாம். ஆனால், சிலர் இப்படி
    ஆணவமாக, தடாலடியாக நடந்து-
    கொள்வது அடிக்கடி கண்கூடு; இதில்
    ஆண், மெண் என்ற பாகுபாடு எதுவும்
    கிடையாது.

    பதிலளிநீக்கு
  2. அம்ப‌த்தூர் டூ வேள‌ச்சேரி D70 -யா ?.. நான் அடிக்க‌டி ப‌ய‌ண‌ம் செய்த‌ வ‌ழித்த‌ட‌ம் தான்.. :)

    அந்த‌ வ‌ழித்த‌ட‌த்திற்கு எத்த‌னை பேருந்து விட்டாலும் கூட்ட‌மாக‌த் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. @@@NIZAMUDEEN சொன்னது…



    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    பதிலளிநீக்கு
  4. இப்படியான நபர்கள்தான் அதிகம் போல.

    பதிலளிநீக்கு
  5. சரி விட்டுத்தள்ளுங்க, மனிதர்கள் பலவிதம்.

    பதிலளிநீக்கு
  6. சரிதான் இப்படியும் சிலர், அப்படியும் சிலர்.திறம் உள்ளவர்கள் ஏறி இடம் போட்டால் முடியாமல் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் ?அப்படியும் யோசிக்கலாமே

    பதிலளிநீக்கு
  7. இந்த மாதிரி மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. என்ன் செய்ய சரவணன்..

    பதிலளிநீக்கு
  8. எனது அடுத்த பதிவில் உங்கள் வலைத்தளத்தை தெரிய/அறியப்படுத்தலாமா சரவணன்..

    பதிலளிநீக்கு
  9. நன்றி ஜெய்லானி



    நன்றி பத்மா நீங்கள் சொல்வது சரி ஆனால் நானும் இரு பேருந்துகளில் குடும்பத்துடன் ஏற முயன்று முடியாமல் தான் மூன்றாம்பேருந்தில் ஏறி இடம் பிடித்தேன் அந்த இடமும் ஏற்பட்டது தான் வருத்தம் ஏற்பட்டது

    நன்றி SAIVA KOTHU PAROTTA

    நன்றி தேவதர்ஷன்

    நன்றி ஸ்டீபன் ஆம் அதே D70 பஸ் தான்

    நன்றி நிஜாமுதீன்





    நன்றி இர்ஷாத் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்



    உங்கள் வலைத்தளத்தில் தெரியபடுத்துங்கள் இர்ஷாத் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  10. மனிதர்கள் பலவிதம் நண்பரே..!
    இதுபோல் பல முகங்கள் இருக்கு.
    என்ன செய்ய எல்லோரும் மனிதர்களே..!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்