வியாழன், ஆகஸ்ட் 12, 2010

இருமன அழைப்பிதழ் 3


இருமன அழைப்பிதழ் 3


சரண் ஆகிய என் மனதுக்குள் இனித்தது எது நான் உமாவை இன்று திருமணம் செய்ய போகிறோம் என்பதை நினைத்த போது என்னடா இவன் குழப்பறான் என்று நினைப்பீங்களே பொறுமை

நான் உமாவின் முறை பையன் அதாவது மாமா பையன் துரத்து சொந்தம் நெருங்கிய சொந்தமாகி விட தான் பிரயத்தன பட்டு கொண்டிருக்கிறேன் .உமாவின் மேல் காதல் கீதல் என்றெல்லாம் கதை விட நான் தயாரில்லை ஏனெனில் நான் ஒரு பிரக்டிகல் மனிதன் எனக்கு உமாவை பிடித்திருக்கிறது. அவளது அழகு படிப்பு புத்திசாலித்தனம் பணம் இவையல்லாம் சேர்ந்து என்னை கட்டி போட்டிருக்கிறது இப்படிப்பட்ட பெண் மனைவியானால் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனவே அவள் மேல் ஆசை கொண்டேன்.
என் ஆசை தெரிந்து என் பெற்றோர் உமாவின் அப்பாவிடம் சம்பந்தம் பேசினார்கள் ஆனால் அவர் மறுத்து விட்டார். மாப்பிள்ளை வெளி நாட்டில் இருக்க வேண்டுமாம் . சாதாரண வேளையில் இருக்கும் நான் வெளிநாட்டை வரைபடத்தில் தான் பார்க்க முடியும் நான் எங்கே வெளிநாடு செல்வது


சரி உமாவின் மனதில் இடம் பிடிக்கலாம் என்று நினைத்தேன் . என் பார்வை, சிரிப்பு, தோற்றம், பேச்சு எதையும் அவள் லட்சியம் செய்யவில்லை என் கனவில் மட்டுமே என்னை லட்சியம் செய்தாள். நொந்து போன நேரத்தில் கார்த்திக்கும் உமாவும் பழகியது வேறு எனக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது. கார்த்திக்கிடம் அவர்கள் உறவை பற்றி உரசி பார்த்தேன். உண்மையான நண்பர்களாம். சொல்லி பெருமைபட்டான். அவனை விட நான் பெருமைப்பட்டேன்.

கார்த்திக் வேலைக்காக சென்னை செல்ல என் சந்தோஷம் கரை புரண்டு ஓடியது. உமாவிடம் என் விருப்பத்தை சொன்னேன். அவள் கிண்டலாய் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு வேறு வேலை இருந்தால் பார். என்று சொல்லி விட்டாள். அவளை தவிர வேறு வேலை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

ஆனால் உமாவுக்கு கல்யாண வேளை வந்தது. திருமணம் நிச்சயமானது. ஹீரோவாகலாம் என்று ஆசைபட்ட நான் வில்லனாக வேண்டியதாகி விட்டது. திருமணத்தை எப்பதியாவது நிறுத்தும் எண்ணத்துடன் இதோ கல்யாணத்திற்கு வந்திருக்கிறேன். நான் மாப்பிள்ளை குடும்பத்தில் நான் ஏவியிருக்கும் ஏவுகணை எப்போது தன் வேலையை ஆரம்பிக்கும் என்று ஆவலோடு காத்து கொண்டிருந்தேன்.

யாரோ ஒருவர் ஓடி வந்து உமாவின் அப்பாவை அழைத்து கொண்டு மாப்பிளையின் ரூம் செல்ல சில வினாடிகளில் உமாவின் அப்பா கோபமாய் வெளி வந்தார். கூடவே மாப்பிளையின் குடும்பம்.

"என்னங்க என்னாச்சு "

"என்னாச்சா எவனோ ராஸ்கல் நாம் பொண்ணுக்கு போட்டிருக்கும் நகையெல்லாம் போலி நாம் சரியிலாத குடும்பம் என்று மொட்டை கடிதாசி எழுதியிருக்கான். அதை படிச்சிட்டு இவங்களும் உண்மையானு கேட்கறாங்க" "சந்தேகம் என்று வரும் போது தெளிவுபடுதிக்கிறது நல்லது தானே" "இதுலேயே தெரியுதே எங்க மேல உங்களுக்கு நம்பிக்கையில்லன்னு மனுஷனுக்கு நம்பிக்கை அவசியம் சார்"

" அதுக்காக நாங்க ஏமாற முடியாது.

"நாங்க யாரையும் ஏமாத்தலை எங்க குடும்பம் கெளரவமானது "

"அப்புறம் ஏன் இப்படி லெட்டர் வருது "

ஆகா என்னோட ஏவுகணை இலக்கை தொட்டுருச்சி

உமாவின் அண்ணன் "உங்க பையனை பத்தி கூட தான் எங்களுக்கு அரசல் புரசலா நியூஸ் வந்துச்சி நாங்க எதுனா கேட்டோமா நல்ல குடும்பங்கள் ஒன்னு சேரும் போது இப்படி எதுனா நியூஸ் வரது சகஜம் தான். இதை போய் பெரிய விசயமா சொல்றீங்க"

" பொய்யெல்லாம் சொல்லாதே என் பையன் சொக்க தங்கம் "

"அதே தான் நாங்களும் சொல்றோம் எங்க நகையும் சொக்க தங்கம் தான். வேணும்னா எங்க நகையை நாங்க செக் பண்ணி நீருபிக்க முடியும் உங்க பையன் நல்லவன் ன்னு எப்படி நீருபிக்க போறீங்க" என்றதும்

மாப்பிள்ளையின் அப்பா கோபா வேசமாய் இந்த கல்யாணம் நடக்காது வாங்க நாம போகலாம் என்று கிளம்ப ஆரம்பிக்க மாப்பிள்ளை உமாவின் அண்ணனிடம் பாய முற்பட இவன் ஓட கார்த்திக் தடுத்தான்.

எனது அப்பா அம்மா இருவரும் சமாதான முயற்சியில் இறங்க அவர்கள் செயல் நியாயமாயினும் எனக்கு அது கஷ்டமாச்சே என்று அவர்கள் மேல் எரிச்சல் பட்டேன்.

உமாவின் அப்பா "போகட்டும் விடுங்க "என்று சலிப்புடன் சொல்ல நான் களிப்புடன் சந்தோசத்தின் உச்சிக்கு சென்றேன்.

பொண்ணு மேடை வரைக்கும் வந்தாச்சு என்ன பண்ண போறீங்க ஒருவர் சொன்னார்.

இத சொல்றதுக்குன்னே யாராவது ஒருத்தர் கல்யாணத்திற்கு வருவாங்களோ "உங்க சொந்தத்திலேயே தான் பையன் இருக்கானே அவனை முடிச்சிடுங்களேன் "இப்படி ஒருவர் சொன்னார்.
ஆகா அவர் வாய்க்கு சர்க்கரை மூட்டையை தான் கவிழ்க்கணும் அவர் வாழ்க
நான் நினைத்தது நிறைவேறுகிறது
இப்போது உமாவின் அண்ணன் "அப்பா நம்ம கார்த்திக்கையே உமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் உமாவின் மனசறிஞ்சு நடந்துக்குவான் உமாவையும் நல்ல படியா வச்சு காப்பாத்துவான்"
என்றவுடன் உமாவின் அப்பா யோசனையாய் தன் மனைவியை பார்த்தார்.
" ஆமாங்க கைல வெண்ணையை வச்சுக்கிட்டு நெய்க்கு அலைஞ்ச மாதிரி நாம ஏன் கஷ்டபடனும் உமாவுக்கு கார்த்திக் தான் சரியானா ஜோடி இதை நாம முன்னாடியே பண்ணிருக்கணும் "
என்று சொல்லவும்
ஏவுகணை எனக்குள் பேரிடியாய் இறங்கியது.
உமாவின் அப்பா என்ன சொல்கிறாய் என்று உமாவை பார்க்க, அவள் கார்த்திக்கை பார்த்து நாணத்துடன் தலை குனிய கார்த்திக் உற்சாகத்துடன் தன் பெற்றோரை பார்க்க அவர்களும் தலையசைக்க உமாவின் அண்ணன் கார்த்திக் கை பிடித்து மேடைக்கு அழைத்து சென்றான்.
மேளம் முழங்கியது
என் கண்கள் கலங்கியது
கார்த்திக் உமாவின் கழுத்தில் தாலியை கட்டினான்.
நான் மண்டப வாசலை நோக்கி நடையை கட்டினேன்.

முற்றும்

ஆர்.வி.சரவணன்

11 கருத்துகள்:

  1. சஸ்பென்ஸ் சரியா வேலை செய்திருக்கிரது இந்த கதையில்.. சூப்பர்..

    பதிலளிநீக்கு
  2. க‌தை ந‌ல்லா இருந்த‌து ச‌ர‌வ‌ண‌ன்.. கொஞ்ச‌ம் எழுத்து பிழைக‌ளை ச‌ரி செய்யுங்க‌ள்..

    பதிலளிநீக்கு
  3. கதை சூப்பர், உங்களுக்கு எதுக்கு இந்த எதிர்மறை கேரக்டர் :-)

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜெய்லானி பாராட்டுக்கு மிக்க நன்றி நான் திரைப்படமாக எடுக்க எழுதிய கதைகளில் ஒன்று இந்த கதை அதன் கிளைமாக்ஸ் மட்டும் எடுத்து ஒரு சிறுகதை ஆக்கி விட்டேன்

    நன்றி ஸ்டீபன் பிழை சுட்டிகாட்டியதற்கு நன்றி நான் இன்டர்நெட் செண்டர் சென்று தான் தளங்களை படிக்கிறேன் பதிவிடுகிறேன் கொஞ்சம் அவசரத்தில் செய்வதால் பிழை ஏற்படுகிறது இனி சரி செய்கிறேன் நன்றி


    நன்றி தேவதர்ஷன் கேரக்டர் எதிர்மரையாயினும் கிடைப்பது நன்மை தானே

    பதிலளிநீக்கு
  5. //மூன்று பதிவுகளாக தொடர்ந்து தர இருக்கிறேன் படித்து விட்டு சொல்லுங்கள் //

    அப்படியா! அப்ப சரி,
    மூன்று பதிவுகளையும்
    படித்துவிட்டுச்
    சொல்றேனே!

    சரியா?

    பதிலளிநீக்கு
  6. "ஹலோ, யாருங்க, சரவணனா?
    கதை முடிஞ்சிருச்சா? அதுக்குள்ளவா?
    நான் வந்து கருத்து சொல்லணுமா?
    சரி, சரி இதோ, இப்போ வந்துடறேன்.
    வச்சிடறேன்."
    (கதையைப் படிக்காம கமெண்ட்
    போட்டத இந்த சரவணன்
    கண்டுபிடிச்சிருப்பாரோ?
    சரி, சமாளிப்போம்!!!)

    பதிலளிநீக்கு
  7. கதை, சில பல திருப்பங்களுடன்
    சென்று, ஆவலைத் தூண்டி,
    முடிவில் சுபமாக முடிந்ததில்
    மனம் நிம்மதி அடைந்தது.

    அப்புறம்,
    அடுத்த தொடர் (சிறு)கதை
    எப்பொழுது தொடங்கும்?

    பதிலளிநீக்கு
  8. நல்ல கதை. சஸ்பென்ஸ் வைச்சு, அழகா முடிச்சிருக்கீங்க.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்