.jpg)
இப்படி ஒருவர் இப்படியும் ஒருவர்
அங்கே பேருந்து நிலையத்தில் வேளச்சேரி செல்ல இரண்டு பேருந்து நின்று கொண்டிருந்தது எது முதலில் செல்லும் என்று தெரியாததால் அங்கே நின்று கொண்டிருந்தவரிடம் கேட்டேன். அவர் தெரியலைங்க நானும் தெரியாமல் தான் நிற்கிறேன் என்றார். நாங்கள் சரி என்று கூட்டம் குறைவாக இருந்த பேருந்தில் ஏறி அமர்ந்தோம்
சில நிமிடங்களில் அடுத்த பேருந்து கிளம்ப ஆயத்தமானது இறங்கி சென்று ஏறி விடலாமா என்று யோசித்து எழுந்தோம் அப்போது நான் விசாரித்த அந்த நபர் ஓடி வந்து அந்த பேருந்து கிண்டி வரைக்கும் தான் செல்கிறதாம் நீங்கள் இறங்காதீர்கள் என்று சொல்லி விட்டு கிளம்பிய பேருந்தில் சென்று ஏறி கொண்டார். அந்த நபரை (மன்னிக்கவும்) மனிதரை நினைக்கும் போது சந்தோசம் அடைந்தேன்.
உலகில் இப்படி ஒருவர்
உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு அன்று மாலையே வேளச்சேரி பேருந்து நிலையம் வந்தோம். அம்பத்தூர் எஸ்டேட் செல்ல வேண்டிய பேருந்து வர வர கூட்டம் உடனே திபு திபு வென்று ஏறி அமர்ந்தது. எங்களால் ஏற முடியாமல் இரண்டு பேருந்தை விட்டு விட்டோம். மூன்றாம் பேருந்து வரும் போதே நான் மட்டும் சென்று ஏறி பெண்கள் இருக்கையில் என் மனைவிக்கும் மகளுக்கும் கைக்குட்டை போட்டு இடம் பிடித்து எனக்கும் மகனுக்கும் ஆண்கள் பக்கம் இடம் போட்டேன் .
கூட்டத்தில் ஏற முடியாமல் எல்லோரும் ஏறியவுடன் தான் என் குடும்பத்தினர் ஏறினர். அதற்குள் பெண்கள் பக்கத்தில் நான் போட்டு வைத்த இடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்து விட்டார்.
"என்னங்க நான் சீட் போட்டு வச்சிருக்கேன்" என்றேன்
" எல்லோரும் இது போல் சீட் போட்டா நாங்க எப்படி அமர்வது" என்றார்.
" நான் நீங்கள் முன்னாடியே வந்து சீட் போட வேண்டியது தானே நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஏறி சீட் போட்டேன் தெரியுமா" என்றேன்.
" எல்லாரும் கஷ்டப்பட்டு தான் ஏறி வரோம் "என்று கூறிய படி கைக்குட்டை யை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டார்.
நான்" நீங்க உட்காரதுக்கு நான் சீட் போட்டு வைக்கணுமா" என்று கோபப்பட்டேன்.
"இன்னொரு சீட் இருக்கு உட்கார சொல்லுங்க" என்றார்.
"அப்படினா ஏன் கைக்குட்டை யை எடுத்து கொடுத்தீங்க" என்று நான் அவரிடம் கேட்டதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை .
பின் என் மனைவி ,மகன், மகள், மூவரும் ஆண்கள் பக்கம் நான் போட்ட இருக்கையில் அமர்ந்து வந்தனர். நான் நின்று கொண்டே பயணித்தேன் பயண நேரம் ஒரு மணி நேரம்.
அந்த பெண்மணி எனக்கு முடியலைங்க நான் உட்கார்ந்துக்கிறேன் என்று சொல்லியிருந்தால் நான் சரி என்று ஒப்பு கொண்டிருப்பேன் ஆனால் அவர்கள் இப்படி நடந்து கொண்டது என்னை வருத்தமடைய வைத்தது
உலகில் இப்படியும் ஒருவர்
படம் நன்றி கூகுள்
ஆர்.வி.சரவணன்