பல் சுவை பகிர்வு
பார்த்தது
எனக்கு கொஞ்சம் மனது டல் ஆக இருந்தால் திரை அரங்கில் சென்று படம் பார்க்க விருப்பபடுவேன் நேற்று சினிமாவுக்கு போகலாம் என்று ஒரு ஆசை வர உடனே கிளம்பினேன் மவுண்ட் ரோடில் ஒரு திரைஅரங்கில் சிவாஜி நடித்த மன்னவன் வந்தானடி படம் ஓடி கொண்டிருந்தது. பழைய படங்கள் தியேட்டர் சென்று பார்த்து வருஷ கணக்கில் இருக்கும் சரி இந்த படம் பார்ப்போமே என்று ஆசை வர சென்றேன் சிவாஜி, மஞ்சுளா ,நாகேஷ், நம்பியார் நடித்த படம் மாதவன் இயக்கம் இந்த படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் காதல் ராஜ்ஜியம் எனது அந்த காவல் ராஜ்ஜியம் உனது .... எனக்கு பிடித்த பாடல் அது. இந்த படம் போய் பார்த்து விட்டு வந்ததும் என் அலுவலக நண்பர்கள் பழைய படம் டிவி யிலேயே பார்க்கலாம் தியேட்டர் சென்று பார்கிறீர்களே என்று ஒரே சிரிப்பு மழை. எனக்கு படங்கள் தியேட்டரில் பார்க்க பிடிக்கும். பழைய படம் அதுவும் சிவாஜி படம் பார்க்கலாமே என்று தான் போனேன் என்று சொன்னேன்
இனிமே பழைய படம் போனால் நண்பர்களிடம் சொல்ல கூடாது என்றிருக்கிறேன் ஆனா உங்க கிட்டே பகிர்ந்துக்கிறேன் (பதிவை நிரப்ப விஷயம் வேண்டாமா )
படித்தது (படித்து கொண்டிருப்பது )
வந்தார்கள் வென்றார்கள் என்ற, கார்டூனிஸ்ட் மதன் அவர்கள் எழுதிய
சரித்திர நூல் இது .டில்லியை அரசாட்சி செய்த மன்னர்களை பற்றிய சில நூற்றாண்டுகள் பின்னோக்கி நம்மை அழைத்து செல்லும் இந்த சரித்திர நூலை இப்போது படித்து கொண்டிருக்கிறேன் படிக்க படிக்க பிரமிப்பையும் சுவாரஸ்யத்தையும் அந்த காலத்திற்கே சென்று வந்ததை போன்ற அனுபவத்தையும் தருகிறது. இப்போது பாபரின் வாழ்க்கை பற்றிய அத்தியாயம் படித்து கொண்டிருக்கிறேன்
வந்தார்கள் வென்றார்கள் மனதில் நின்றார்கள்
மனதில் பதிந்தது
சமீபத்தில் நான் ரயிலில் வரும்போது எதிரில் அமர்ந்திருந்த இரு பெண் பயணிகள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கொண்டு வந்தார்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அந்த பிளாஸ்டிக் பைகளை ரயிலுக்குள்ளும் எரியவில்லை ஜன்னலுக்குள்ளும் எறியவில்லை மாறாக அந்த பைகளை கசக்கி தங்கள் கை பையிலேயே திணித்து கொண்டார் ஒருவர். மற்றவர் வெளியில் எரிந்து விடலாம் என்று சொன்னதற்கு வேண்டாம் குப்பை தொட்டி பார்த்து போட்டுக்கலாம் என்று தெரிவித்தார் ரயிலுக்கு உள்ளே மட்டுமில்லாமல் ரயிலுக்கு வெளியே கூட குப்பையை போடாத அவரது செயல் என்னை கவர்ந்தது
குப்பை தொட்டி பார்த்து குப்பையை போட்டுக்கலாம் என்று நினைத்து சேர்த்து அதுவே ஒரு குப்பையா ஆகாமே இருந்தா சரி
நான் என்னை சொன்னேன்
மகிழ்ந்தது
சக பதிவர் அரசன் அவர்கள் கரை சேரா அலை என்ற பெயரில் ப்ளாக் எழுதி வருகிறார் அவர் சென்னையில் தான் இருக்கிறார் என்றவுடன் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசினேன் சமயம் கிடைக்கும் போது போனில் பேசி கொண்டோம் அவரை நேரில் சந்திக்கலாம் என்று நான் கிளம்பினால் அவர் அலுவலக வேலையாய் வெளியில் சென்றிருப்பார் அவர் என்னை சந்திக்க கிளம்பினால் நான் வெளியூர் சென்றிருப்பேன் இப்படியே தொடர ஒரு நாள் அவர் விடாபிடியாக எப்படியும் பார்க்க வருகிறேன் என்று சொல்லி காலையிலேயே அவர் அலுவலகம் செல்லும் முன்பு என்னை சந்திக்க என் அலுவலகம் வந்திருந்தார். சந்திப்பது தள்ளிபோய் கொண்டிருக்கிறது என்பதால் அதிரடியாக பார்க்க வந்ததாய் தெரிவித்தார். அவர் என்னை காண நேரில் வந்திருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது அவருக்கு எனது வாழ்த்துக்கள்
கரை சேரா அலை
கண்டு வாருங்கள் இந்த வலை
லிங்க் இதோ
final punch
எதையும் தாங்குபவன் இறுதியில் வெல்வான்
மிக சிறந்த மனிதன் கடவுளின் மாபெரும் படைப்பு
நாட்காட்டியில் படிச்சது
படம் ராமேஸ்வரம் சென்ற போது எடுத்தது
ஆர்.வி.சரவணன்
Nice sharing!
பதிலளிநீக்குபல்சுவையை சுவைத்து மகிழ்ந்தேன் ... தொடர்ந்து தாருங்கள் ...
பதிலளிநீக்குஅந்த இரயில் பெண்மணிகள் போற்றுதலுக்குரியவர்கள் ...
படம் கலக்கல் ..சார் ...
பதிலளிநீக்குசுவையான பதிவு!
பதிலளிநீக்குநட்பு வலையெனெ விரிவது அழகான விசயம்.வாழ்த்துக்கள்!
பல்சுவை - பிரமாதம்!
பதிலளிநீக்குஅழகிய நகைச்சுவைப்பதிவு...நல்லாயிருக்குங்க..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
!!எனதுபக்கமும் உங்க வருகைக்காக காத்திருக்கு
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிசாமுதீன்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதவி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விடிவெள்ளி கண்டிப்பாக வருகிறேன்