ஸ்வீட் காரம் காபி
மேகா படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது புத்தம் புது காலை பாடலும் பாடலுக்கான விசுவலும் தான் .இளையராஜாவின் அந்த மனதை அள்ளும் பாடல் ஏற்கனவே கேட்டிருந்தாலும் இதில் கேட்கையில் பார்க்கையில் இதன் காட்சிகள் மனத்திரையில் வர்ண ஜாலம் காட்டுகிறது. அலுக்காத பாடல் வரிசையில் இதுவும் இப்போது (இதற்கு முன்பு என்னை பாடலாகவும் விசுவலாகவும் ஈர்த்த பாடல்களில் ஒன்று சத்யாவில் வரும் வளையோசை) படத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று கேட்கின்றீர்களா. படம் பிடித்திருந்தது. ஆனால் கிளைமாக்ஸ் இப்படி முடித்தது சுத்தமாக பிடிக்கவில்லை.
சமீபத்தில் பார்த்த படங்களில் மிகுந்த ஆச்சரியத்தை தந்தது. கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஆடியன்சை எதிர்த்தாப்பில உட்கார்ந்து படத்தை பார் என்ற நிலையிலிருந்து மாற்றி, வா உன்னையும் இதிலே
ஒரு கேரக்டர் ஆக்கறேன் என்பது போல் பார்த்திபன் செய்திருந்த அந்த வித்தியாசமான ட்ரீட்மென்ட் பிடிச்சிருந்தது. ஹீரோவின் ரொமாண்டிக் அத்தியாயங்கள், வசனங்கள் , ஆடியன்ஸ் சொல்ல போவதை முன் கூட்டியே சொல்வது, தம்பி ராமையா என்று பல விசயங்கள் ரசிக்க முடிந்தது. பார்த்திபனின் ரீ என்ட்ரி வரவேற்க தக்க வகையில் அமைந்திருக்கிறது.
இப் படம் பற்றி நான் முக நூலில் எழுதியதை இங்கே தருகிறேன்
என்ன படம்டா பார்த்தே?"
"கதை திரைக்கதை வசனம் இயக்கம்"
"நான் படத்தோட பேரை கேட்டேன்"
"படத்தோட பேரே அதான்"
"வித்தியாசமா இருக்கே என்ன கதை"
"கதை இல்லாமலே சில கதைகளுடன் செம ஜாலியா"
"புரியற மாதிரி சொல்லேன்"
"ஆடியன்ஸை இந்தப் படத்துல ஒரு கேரக்டராக வச்சிருக்கார்"
"அப்படியா டைரக்டர் யாரு"
a film by RADHAKRISHNAN PARTHIBAN
(தமிழ் சினிமா அறிந்திறாத, ஒருவர் கேட்ட கேள்விகளும் அதற்கு எனது பதில்களும்)
------
சிறு வயதில் வீட்டில் பேப்பர் காரர் தினமும் பேப்பர் கொண்டு வந்து போடுவார். அதில் எல்லாம் ஈர்ப்பில்லை எனக்கு. வெள்ளி அன்று தான் கொண்டாட்டம் காரணம் குமுதம் மற்றும் ஆனந்த விகடன் இதழ்கள். இதில் குமுதத்தில் ஜோக் படித்து கொண்டிருந்தவன் எழுத ஆசைப்பட்டு எழுதி அனுப்புவேன் நான்கைந்து வாரம் வரை பார்த்து விட்டு பின் நானே விட்டு விடுவேன். இப்படி இந்த நிகழ்வு அடிக்கடி நிகழும். சமீபத்தில் நான் அனுப்பிய ஒரு அனுபவம் ஹலோ வாசகாஸ் பகுதியில் வந்திருந்தது சந்தோசமாக இருந்தது. அது இங்கே
------
சென்னை சென்ட்ரலில் இருந்து எக்மோர் செல்ல ஆட்டோ பேசிய போது ஆட்டோ காரர் அறுபது ரூபாய் கேட்டார். வேண்டாம் என்று கிளம்பியவன் பேருந்து ஒன்று வரவே ஓடி போய் ஏற முயற்சித்தேன். பேருந்தின் வேகத்திற்கு தகுந்தார் போல் நமது வேகமும் இருந்தால் தான் வண்டியில் தாவி ஏற முடியும். ஆனால் வண்டி இன்னும் வேகமேடுத்ததால் என்னால் ஏற முடியாமல் போய் கீழே தவறி விழும் நிலை ஏற்பட்டு சுதாரித்தேன். பின்னே தொடர்ந்த வாகனங்களில் இருந்து தப்பித்து ஓரம் வந்தேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. அப்போது ஒரு ஆட்டோ வர நிறுத்தி ஏறி கொண்டேன். ஆட்டோ டிரைவர் 50 ரூபாய் கேட்டார். என்னது 50 ரூபாயா என்று நான் சலித்து கொள்ள அடுத்து ஆட்டோ டிரைவர் தந்த பதிலில் நான் ஆடி போனேன். "சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க 60 ரூபாய் கேட்டதுக்கு முடியாதுனு சொன்னீங்க. சரி என்று இப்ப 50 ரூபாய் கேட்கிறேன் நீங்க இதுக்கும் வம்பு பண்ணால் எப்படி சார்" என்றார். அப்போது தான் ஆட்டோவையும் டிரைவரையும் உற்று கவனித்தேன்.பழைய ஆட்டோ தான். "நான் 60 ரூபாய்க்கே உங்க ஆட்டோவில் ஏறியிருக்கலாம் வேணாம்னு சொல்லி பஸ் ஏற போய் கீழே விழறதுக்கு இருந்தேன்" என்றேன் ஆட்டோ காரரிடம் பரிதாபமாய். அவர் சிரித்தது இருட்டிலும் தெரிந்தது. (நீங்களும் சிரிச்சிருப்பீங்களே )
------
குறும்படம் எடுக்கும் ஆசை பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் சொல்லியிருக்கிறேன். சில நொடி சிநேகம் குறும்படம் எடுத்து முடித்தாகி விட்டது. இதில் பங்கேற்று எனக்கு முழு ஒத்துழைப்பு தந்த துளசிதரன், அரசன்,கோவை ஆவி மற்றும் திருமதி ரங்கன் ஆகியோருக்கு நன்றி என்று ஒற்றை வார்த்தையில் சொல்வது சரியாக இருக்காது. நண்பர்கள் சேர்ந்து நட்பை பற்றிய படம் எடுத்திருக்கிறோம் என்ற வார்த்தையே சரியானது.
------
சென்னையில் இரண்டு வருடமாக வெற்றிகரமாக நடைபெற்ற பதிவர் திருவிழா இந்த வருடம் மீனாட்சி ஆட்சி புரியும் மதுரையில் என்று முடிவு செய்யபட்டிருக்கிறது. அக்டோபர் 26 ஞாயிறு அன்று கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கில் நடைபெறும் 3 வது பதிவர் திருவிழா பற்றிய அணைத்து தகவல்களும் நம் நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com/2014/09/Tamil-Writers-Festival-2014-3.html
பதிவிலும் பிரகாஷ்குமார் தமிழ்வாசி பதிவிலும் வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 தெரிந்து கொள்ளலாம் சென்ற வருடங்கள் போலவே இவ் வருடமும் விழா சிறப்பாய் நடைபெற வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது.
------
இளமை எழுதும் கவிதை நீ .... க்கு பிறகு அடுத்த கதையாக காவல் குதிரைகள் என்ற தொடர் எழுத ஆரம்பித்திருந்தாலும் காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றிய கதை என்பதால் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து கொள்ள
வேண்டியிருக்கிறது. எனவே திருமண ஒத்திகை என்ற தலைப்பில்
எனது அடுத்த தொடர்கதையை தீபாவளிக்கு ஆரம்பிக்க இருப்பதால்
உங்களின் ஊக்கமும் வாழ்த்தும் வேண்டுகிறேன்
FINAL TOUCH
"இருக்கிறவன் ஏன்யா இல்லாதவன் கிட்டே திருடறீங்க" இந்த வசனத்தை திரைப்படத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் மறுக்கப்படும் காட்சில சொல்லலாம்.
இதை இன்னும் இயல்பா (நடைமுறை வாழ்க்கையில்) சொல்லணும்னா, அலுவலகத்தில் நம் தகுதிக்குரிய இன்க்ரிமெண்ட் மறுக்கப்படும் நேரத்தில்
(பின் விளைவுகளை சந்திக்க தயார் என்ற நிலையில்) சொல்லலாம்
.
ஆர்.வி.சரவணன்
சுவீட் , காரம், காபி அருமை அண்ணா...
பதிலளிநீக்குஅடுத்த தொடருக்கு வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குஒரு நொடி சிநேகம் பார்க்க ஆவலாய் உள்ளோம்
எல்லாமே அருமை சார்! ஓ! அடுத்த தொடர் எழுதப் போகின்றீர்களா!! வாழ்த்துக்கள் சார்! கதை வேறு போல?! எங்களுக்கு நன்றி சொல்லியிருக்கின்றீர்கள்! நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் எங்களை இயக்கியதற்கு!
பதிலளிநீக்குபஞ்ச் அருமை சார்!
அட, இந்தப் பதிவு என் கவனத்தில் வரவேயில்லை, இன்று பார்க்கும் வரை!
பதிலளிநீக்குகுமுதத்தில் வந்த "திரு நாய்கள்" செம்ம!