செவ்வாய், டிசம்பர் 04, 2012

இளமை எழுதும் கவிதை நீ-15


இளமை எழுதும் கவிதை நீ-15





நம்மால்  நேர்ந்த நம் காயங்களுக்கு 
அன்பால் மருந்திட்டு கொள்கிறோம் 

நோட்டீஸ் போர்டை படித்து விட்டு ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் திரும்பிய மாணவ மாணவிகள், இதற்கு சிவா வின் ரியாக்சன் என்னவாக இருக்கும்   என்று அங்குமிங்கும் திரும்பி பார்த்தனர்.அவன் அங்கே எங்குமே தென் படாது போகவே இதை பற்றி சாதகமாய் சிலரும் பாதகமாய் சிலரும் பேசி கொண்டே கலைந்து  சென்றனர்.  

பேராசிரியர்கள் சிலர் "நம்ம சிவாவோட அப்பாவை  என்னவோ நினைச்சேன்  மனுஷன்  என்னமா  புரட்டி எடுக்கிறார் பார் " என்றனர். கூடவே "பையனையே இந்த பாடு படுத்தறாரே  நாமல்லாம் எம் மாத்திரம்" என்றும் பேசி கொண்டனர் 

உமா, அருள் ,கார்த்திக் ,பாலு நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு  அதிர்ச்சியை பரிமாறி கொண்டவர்கள் சிவாவை தேடி செல்ல ஆரம்பித்தனர் 

பாலு "டேய் கார்த்திக் உங்க அப்பா ஆனாலும் ரொம்ப மோசம்டா சிவாவை இப்படி ஒதுக்கறது நியாயமே இல்லை "என்றான் 

கார்த்திக் சரியென்று  தலையாட்டினான் 

உமாவும் அருளும் சிந்தனை யுடனே ஒவ்வொரு வகுப்பறை யாக பார்த்தவாறே நடந்து கொண்டிருந்தனர்.  ஒரு கட்டடம் முடிந்து  அடுத்த கட்டடத்தின் திருப்பத்தில் திரும்பும் போது தான் கவனித்தார்கள். அங்கிருந்த தண்ணீர் நீறுற்றின் சுற்று சுவரில்  இருந்த அலங்கார கம்பியில் தன் கைகளை வைத்த படி  அந்த நீறுற்றை பார்த்தவாறே  நின்றிருந்தான் சிவா 


தொடரும்

ஆர்.வி.சரவணன் 


The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

5 கருத்துகள்:

  1. சிவா வருவானா?
    கல்யாணம் நடக்குமா? ஆவல் அதிகரிக்கிறது..

    பதிலளிநீக்கு
  2. நம்மால் நேர்ந்த நம் காயங்களுக்கு
    அன்பால் மருந்திட்டு கொள்கிறோம் ..இந்த வரிகளிலும் படத்திலுமே அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. அழகான எழுத்து நடை எதையும் வெளிக்காட்டாத சிவாவின் இயல்வு வெகுவாக கவரவே செய்கிறது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. எளிமையான உரையாடல் உள்ளுக்குள் மெல்லமாய் இறங்குகிறது ...சார்

    பதிலளிநீக்கு
  4. தொடர்ந்து படித்து வருகிறேன்.
    விறுப்பான சம்பவங்கள்.
    எதிர்பார்க்காத திருப்பங்கள்.
    டாப் கியரில் வேகம். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்