சனி, மார்ச் 09, 2013

ஹரிதாஸ்-தி மாஸ்



ஹரிதாஸ்-தி மாஸ்

நாம் முற்றிலும் எதிர்பார்க்காத சில படங்கள் வந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும். அப்படி ஒரு படம் ஹரிதாஸ். 

என்கௌன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் போலீஸ் அதிகாரி கிஷோர்.அவர் மகன் 
ஒரு ஆட்டிசம் பாதித்த  பையன் என்பதால் அவனை சிறப்பு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் சமுதாயத்தில்  அவனை சாதனையாளனாக்க  அவர் மேற் கொள்ளும் முயற்சிகள் ஒரு பக்கம். தாதாவை வேட்டையாட முனையும் அலுவலக  வேலை இன்னொரு பக்கம். இந்த மென்மையையும் வன்மையையும் ஒன்றாக  சேர்த்து ஒரு அழகிய படைப்பை  தந்திருக்கிறார் இயக்குனர்.

ப்ரித்வி ராஜ்தாஸ் 

 படத்தில் இந்த பையனை பார்க்கும் போது நிஜமாகவே ஆட்டிசம்  
பாதித்த பையன் தானோ என்று நினைக்கும் அளவுக்கு ஹரியாகவே மாறியிருக்கிறான். அவனது அந்த மேல் நோக்கி செருகிய கண்கள், என் நேரமும் கை விரல்களின் அலைவு, சாய்வான ஒரு நடை என்று வசனங்கள் எதுவும் இல்லாமலே  தன் நடிப்பால் நமை ஈர்த்து படத்தையே தூக்கி  நிறுத்தியிருக்கிறான் ப்ரித்வி   

கிஷோர் 

துப்பாக்கி பிடிச்சு மூளை இரும்பாகிடுச்சு என்று சூரி சொல்லுமளவுக்கு 
தன் அலுவலக  வேலையில்  விறைப்பானவராய்,  இப்படிப்பட்ட உன்னை வச்சிகிட்டு நான் என்ன பண்ண போறேன் என்று பையனை கட்டி கொண்டு  கலங்கி நிற்பவராய் என்று கிஷோர் ஜோர் என்று   கை தட்ட வைக்கிறார் கமிட்டியில் தன் பையன் பெயர் இல்லையென்று தெரிந்தவுடன் அவர்களிடம்  போராடி, என் பையன் போட்டில கலந்துகிட்டாலே ஜெயிச்ச மாதிரி சார்  என்று கெஞ்சும் போது அசரடிக்கிறார்  மனிதர்.

சினேகா 

வகுப்பில் கிஷோர் முன்னிலையில் ரைம்ஸ் சொல்ல  சிரமப்படுவதும், 
 தாயின் கத்தலை காதில் வாங்கி கொண்டே பார்வையால் தன் எதிர்ப்பை தெரிவிப்பதும்,  சிறுவனை பைத்தியமா என்று கூட்டம் கிண்டலாய் பார்க்கையில் அவனை அரவணைத்து கொண்டு அழுவதும் என்று சிநேகா அந்த டீச்சர் கேரக்டரில் மிக இயல்பாய் பொருந்தி நிற்கிறார்.  ஸ்பெஷல் சைல்ட் டுக்கு  உரிய டீச்சர் என்றல் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற நிறைவை தந்திருக்கிறார்.





சிறுவனின் திறமையை அப்பா கிஷோர் கண்டறிந்து 
நெகிழ்ந்து போய் நிற்கும் இடம்   

கடத்தப்பட்ட நண்பனை அங்கே தேடுவதும் இங்கே ஹரிதாஸ் காணாமல் சிநேகா தேடுவதும் என்று வரும் பரபரப்பான காட்சிகள் 

கோச்  சொல்லும் நெகடிவ் பாயிண்ட்ஸ் அனைத்தையும்    டாக்டர் தன் பாசிடிவ் பாயிண்ட்ஸ் வசனங்களால் உடைக்கும் காட்சி

பள்ளி கூட வகுப்பறை கல கல காட்சிகள்

 சிறுவனுக்கு தாயாக விரும்புவதை சினேகா வெளிபடுத்தும் விதமும்   அதை கிஷோர் மறுப்பதுமான காட்சி 

 பயிற்சி காட்சிகளும்   பந்தயத்தில் சிறுவன் பங்கேற்று   ப்ரித்வி  ஓடும் காட்சிகள் 

காட்சிகளின் இடையிடையே கலகலப்பை தரும் சூரி மற்றும் ஓமகுச்சி பையன் சுவாரஸ்யம் 

இப்படி படமெங்கும் விரவியிருக்கிறது  நிறைவான காட்சிகள். 

குத்துப்பாட்டை தவிர்த்திருக்கலாம். என்கௌன்ட்டர் தீவிரத்தையும்  கொஞ்சம் குறைத்திருக்கலாம்.




துப்பாக்கியை சுற்றி படரும் மெல்லிய பூங்கொடியை போல் படபடப்பும் நெகிழ்ச்சியும்  ஒன்றிணைந்த திரைக்கதைக்கு  அவர் கோச்சா காக்ரோச்சா  என்ற பளிச் வசனங்களில் வெங்கடேசனும், காட்சிகளுகேற்ற ஒளிப்பதிவில்   ரத்னவேலுவும்  படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கிறார்கள் 

 ஆட்டிசம் பாதித்த ஒரு சிறுவனின் உலகத்தில் நம்மை உலவ
விட்டு, அவனை பெற்றவர் படும் வலியை அவஸ்தையை உணரும் 

வண்ணம், ஒரு நெகிழ்ச்சி படைப்பை தந்திருப்பதன் மூலம் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் நம்மிடம்  சபாஷ் பெற்று  கொள்கிறார்  

ஹரிதாஸ் பாராட்டப்பட வேண்டியவன் 

FINAL PUNCH

 படம் தியேட்டரில் பார்த்து கொண்டிருக்கும்  போது 
சிறுவனின் திறமை கண்டறியப்படும் காட்சி யாரையும் நெகிழ வைத்து விடும்     அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞர் தன் உடலை குலுக்குவது கண்டு நான் அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தேன்.அவர் கண்கள் கலங்கி அழும் நிலையில்  இருந்தார். நான் பார்ப்பதை உணர்ந்தவர் அந்த நெகிழ்ச்சியை  என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அவரது அந்த கண்ணீரே இந்த படத்தின் வெற்றிக்கு சாட்சியாகிறது  என்றால்  அது  மிகையல்ல  

ஆர்.வி. சரவணன் 

14 கருத்துகள்:

  1. இந்த கால கட்டத்தில் ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பது என்பது அறிதான விஷயம் தங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல படம் இது பாருங்கள் தங்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. ஒவ்வொரு அம்சத்தையும் கவனித்து அசத்தியிருக்கிறீர்கள் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் என்னை நெகிழ வைத்தது தான் காரணம் நன்றி கலையன்பன்

      நீக்கு
  3. சீக்கிரம் பார்க்க வேண்டிய படம்... விமர்சனம் அருமை சார்.. நிச்சயம் பார்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. இரண்டு நாளைக்கு முன்னால்தான் இந்த படத்தை பார்த்தேன், ரொம்பவும் பிடித்திருந்தது. தங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. உங்களின் தளம் பற்றிய சிறு அறிமுகம்
    காண : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான விமர்சனம்! உங்கள் அருகில் அமர்ந்திருந்த அந்த இளைஞர் நான்தான் என்பதை பெருமையுடன் இங்கு பதிவு செய்கிறேன். வணக்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பெருமைக்கும் நன்றி ராமு பீமா

      நீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்