இளமை எழுதும் கவிதை நீ-22
உன் மனதிற்குள் இருப்பதை தெரிந்து சொல்லுமாறு
கூகுளிடம் கேட்டிருக்கிறேன்
சிவாவுக்கு, கர்சிப் கொடுத்தா உறவு விட்டு போயிடும் என்று உமா சொன்ன இந்த வரிகளே அவனை சுற்றி சுழன்று கொண்டிருந்தது.நடைகளில் ஒரு உற்சாக துள்ளலாய் சென்று கொண்டிருந்தவன் எதிரில் பாலு வந்தான். அவனிடம் பேசுகையில் உமா சொன்னதை சொல்லி அதற்கு அர்த்தம் என்ன என்று ஆர்வமாய் கேட்டான்
"மச்சான் இதை பிரெண்ட்ஷிப் க்காக சொன்னதாவும் எடுத்துக்கலாம் இல்ல
காதலுக்குணும் எடுத்துக்கலாம்"
"என்னடா குழப்பறே"
"டேய் உனக்கு பிடிச்ச மாதிரி நான் எப்படிடா சொல்ல முடியும்
காதலா மட்டும் இருந்துச்சின்னா, கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா னு நீ பாடலாம். அட இந்த பாட்டே ஏதோ சொல்ற மாதிரி தெரியுதே"
என்றவனை பார்த்து அவன் கன்னம் தட்டி சிவா சிரித்து கொண்டே கிளம்பினான். தன் ரூமுக்கு வந்தவன் உனக்கு என்ன தோணுது என்று கண்ணாடியை பார்த்து கேட்டான். அது அதையே பிரதிபலிக்க முட்டாள் என்று செல்லமாய் கடிந்து கொண்டான்.டான்ஸ் ஆடியபடியே தன் சந்தோசத்தை வெளிப்படுத்தி கொண்டான்
தொடரும்
ஆர்.வி.சரவணன்
ஓவியம் நன்றி : திரு இளையராஜா
the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.
ஆர்.வி.சரவணன்
ஓவியம் நன்றி : திரு இளையராஜா
the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.
ஆக புருசன் பொஞ்சாதி சண்டை பூவோட சரியாகிவிடுகிறது.
பதிலளிநீக்குஇந்த தோழிங்களே இப்படித்தான் போல இல்லாததையும் கற்பனை செய்து விடுவதோடு அவளையும் மாற்றிவிடுகிறார்கள்.
நன்றாகவே செல்கிறது தொடருங்கள்.
உங்களது கருத்துரைக்கு எனது பதில்
நீக்குஆசைப்பட்டு மணந்தவன் பாராமுகமாய் இருப்பவன் அன்பாய் பேச வரும் போது முதல் முதலாய் பூ வாங்கி வரும் போது, அவனை நல் வழிபடுத்த வேண்டும் என்ற முடிவில் இருக்கும் கீதா எப்படி வேண்டாம் என்று உதறி விட்டு மேலும் சண்டையிட முடியும் .அடுத்து வரும் அத்தியாயத்தில் தெரிய வரும் கீதாவின் மனது
நண்பரே நலமா....? 22 வரைக்கும் வந்து விட்டதா...? நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன்...
பதிலளிநீக்குதனபாலன் சார் வருகைக்கு நன்றி படியுங்கள் எனக்கு ஊக்கமளியுங்கள்
நீக்குகொஞ்சம் தென்றல் =சிவா&உமா, கொஞ்சம் கொஞ்சல் =கார்த்&கீதா, கொஞ்சம் படக்படக் -சுரேஷ்.
பதிலளிநீக்குகலவையாய் அதிவேகம் கதையில்.
//கீதா இடுப்பில் கைகளை தாங்கி புன்முறுவலுடன்,//
பதிலளிநீக்குரசிக்க முடிந்தது :-)
கார்த்திக் கீதா ரொமாண்டிக் சூப்பர் ;-)
நன்றி கிரி இவர்கள் பகுதி இன்னும் நிறைய எழுதியிருந்தேன் இருந்தும் தொடர்கதை நீண்டு விடுமோ என்று தவிர்த்து விட்டேன்
நீக்கு