நட்புக்கு பாலமிடும் வலை பதிவர்கள் திருவிழா
நான் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது என்னை விட வயதில் மூத்தவர் ரவி என்பவர் எனக்கு நண்பரானார்.(எங்கள் வீட்டில் சொல்வார்கள் இவனுக்கு இவன் வயசு ஆளோட பழக்கம் இருந்தால் பரவாயில்லே ஆனால் இவனோட வயசுலே சின்னவன் கிட்டேயும் பழக்கம் வச்சிக்கிறான் இவனோட பெரியவன் கிட்டேயும் பழக்கம் வச்சிக்கிறான் என்பார்கள். நட்புக்கு தான் வயதேது) அவர் லாண்டரி கடையில் முழு பொறுப்பை ( காஷியர் கம் பில்லிங்) ஏற்று வேலை பார்த்து வந்தார் நான் எங்கள் வீட்டு சலவை துணி போட செல்லும் போது அறிமுகமானார். பின் நன்பேண்டா பாணியில் நெருக்கமாகி விட்டோம். அண்ணே என்று தான் நான் கூப்பிடுவேன் கல்லுரி இல்லாத நேரங்களில் அவர் கடையிலேயே என் பொழுது சென்றது
ஒரு முறை அவரிடம் பத்து ரூபாய் கடன் கேட்டேன் சினிமா செல்வதற்காக. அவர் இரு வரேன் என்று சொல்லி விட்டு அங்குமிங்கும் சென்று வந்தார் நான் எங்கே சென்று வருகிறீர்கள் என்றேன் அவர் முதல் முறையா என் கிட்டே நீ காசு கடன் கேட்கிறே எனக்கு மறுக்க மனசு வரலே, என்னிடம் இல்லை என்பதால் தெரிந்தவர்களிடம் சென்று கேட்டு வாங்கி வருகிறேன் என்றார் ( வருடம் 1987 ) எனக்கு மனசு ஒரு மாதிரி ஆகி விட்டது எதுக்காக இப்படி கஷ்டபடுறீங்க அப்படி ஒண்ணும் அவசியம் இல்லே என்றேன். அதெல்லாம் ஒண்ணும் கஷ்டமில்லே நீ ஜாலியா படம் போயிட்டு வா என்றார். நான் படம் சென்று விட்டு வந்தேன். காசை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருப்பி கொடுத்தேன் (நான் என் வாழ்க்கையில் வாங்கிய முதல் கடன் இது என்பதால் எனக்கு மறக்கவில்லை என்று நினைக்கிறேன் ) அவர் கண்டிப்பானவரும் கூட நான் படிக்காமல் சுற்றி கொண்டிருந்தாலும் கேள்வி கேட்பார் நான் மன கஷ்டத்தில் இருந்தாலும் ஆறுதல் சொல்வார். சினிமா அரசியல் புத்தகங்கள் என்று எதை பற்றி வேண்டுமானாலும் தீர்க்கமாக பேசுவோம்.
இப்படிப்பட்ட ஒரு நண்பரை, நான் படித்து முடித்து சென்னை வந்த பிறகு, அவருடனான நட்பை தொடர வழியில்லாமல் போய் விட்டது. அவர் வேலை கிடைத்து வேறு ஊருக்கு சென்று விட்டதால் நான் பல இடங்களில் விசாரித்தும் அவரை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய இருபது வருடங்களாவது இருக்கும் அவரை பார்த்து. எப்போதாவது அவரது ஞாபகம் வரும் போது விழியில் சிறு துளி கண்ணீர் நான் எட்டி பார்க்கவா என்று எனை நச்சரிக்கும். அப்போது செல் கிடையாது ஈமெயில் பேஸ் புக் கிடையாது அப்படி இருந்திருந்தால் அவரது நட்பு கண்டிப்பாக இன்று வரை தொடர்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன்
சரி இதை எதுக்காக நீ இப்ப சொல்றே னு கேட்கறீங்களா.விஷயம் இருக்கிறது நண்பர்களே. செல் , ஈமெயில், பேஸ் புக் இல்லாத நாட்களில் ஏற்பட்ட ஒரு நட்பை தொடர முடியாத போது ,இப்போதைய வளர்ச்சியில் இணைய தளம் மூலம் கிடைத்த நட்புக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்.யோசித்து பாருங்கள்.
அப்படிப்பட்ட ஒரு அருமையான வாய்ப்பை தான் 26-08-2012 அன்று சென்னை தமிழ் வலை பதிவர் திருவிழா ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது
கூடவே நண்பர் திரு.வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக புத்தக கண் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இணைய தளங்களில் நேசம் பாராட்டிய நெஞ்சங்களை
நேரில் கண்டு நட்பை வளர்க்கும் ஒரு விழா
ஏனைய திசைகளில் பொங்கி பிரவகிக்கும் நதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து
கடலாய் சங்கமிக்கும் ஒரு விழா
நம் நட்புக்கு பாலமிடும் ஒரு விழா
நம் எழுத்துக்கள் நமக்கு உருவாக்கி தந்த இந்த அறிய நட்பை மகிழ்ந்து
கொண்டாடுவோம் வாருங்கள் தோழர்களே
ஆர்.வி.சரவணன்
பதிவு நெகிழ வைத்தது...
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...
நன்றி...
நட்புள்ளங்களை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு வாய்த்திருக்கிறது. விழா சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.
பதிலளிநீக்குசார் உங்களை மாதிரி போனிலும் மெயிலிலும் அறிமுகமான பல நண்பர்களை முதன் முறை சந்திக்க போகிறோம் என்கிற மகிழ்வும் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது
பதிலளிநீக்குவாருங்க சார் எல்லோரும் கூடி மகிழ்வோம் ..
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குநண்பர்களோடு மகிழ்ந்து வாருங்கள்.
பின் அதை அழகான பதிவாய் இடுங்கள்.
படிக்கக் காத்திருக்கிறேன்.
உங்களை சந்திக்க ஆவலுடன்....
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தனபாலன் சார்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி குமார்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி மோகன் சார் நானும் எல்லோரையும் சந்திக்கும் ஆவலில் இருக்கிறேன்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி அரசன்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நிசாமுதீன்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி jey நானும் தங்களை எல்லாம் சந்திக்கும் ஆவலில் இருக்கிறேன்
பதிலளிநீக்குவாங்கசரவணன்,சந்திப்போம்!
பதிலளிநீக்கு