வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு....


வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு....

வணக்கங்க வாகனம் ஓட்டறவங்க எல்லாருக்கும் நான் எழுதற லெட்டர் இது. நான் யாருன்னு கடைசியில் பார்த்துக்குங்க
இப்ப சொல்ல வந்த விசயத்தை பார்ப்போம்.(நானும் வண்டி ஓட்டற லிஸ்ட்லே இருக்கிறதாலே என்னையும் சேருது இது )

வண்டி ஓட்டற நமக்கெல்லாம் எப்போதுமே வாகனத்தில் ஏறி உட்கார்ந்துட்டா ராக்கெட் லே போற மாதிரியே தோணுது இல்லீங்களா. ஆனா நாம என்னிக்காவது ரோட்டில் நடந்து போறவங்க, புதுசா வண்டி கத்துக்கிட்டு இருக்கிறவங்க ,
வாகன விதிகளை முறையா பாலோ பண்றவங்க, வயதானவங்க ,சின்ன பிள்ளைங்க இவங்க மன நிலையிலே
இருந்து தின்க் என்னிக்காவது பண்ணிருக்கோமா இல்லியே . நமக்கு வண்டியை ஸ்டார்ட் பண்ண உடனேயே போக
வேண்டிய இடத்துக்கு போயாகனும். அதனாலே எதை பற்றியும் நாம கவலை படறதில்லை . சரி கொஞ்சம் விளக்கமா பார்ப்போமா

டூ வீலர்

இதுலே ஏறிட்டா நமக்கு சினிமா ஹீரோவே ஆகிட்ட மாதிரியே ஒரு பீலிங் வந்துருது. தெரு முக்குலே வரப்பவே முன்னாடி போயிடிருக்கிறவங்க பயந்து விலகி போற மாதிரி ஹாரன் கொடுத்துடுவோம். (ஆனா நாம யாருக்கும் வழி விடரதில்லே). காதிலே வாக் மேன் இருக்கிறதாலே நாம மட்டும் அந்த ஹாரன் ஒலி கிட்டேருந்து தப்பிச்சுடுறோம். எவ்வளவு வேகமா போகணுமோ அவ்வளவு வேகமா போறப்ப கூட போன் வந்துருச்சின்னா உடனே எடுத்து பேசிக்கிட்டே வண்டி ஓட்டறோம். பின்னாடி உட்கார்ந்துட்டு வர ஆளோட பேசிட்டே போறது ஒரு ஸ்டைல் னா அதே பின்னாடி உட்கார்ந்துட்டு வர்றது பெண்ணா மட்டும் இருந்துட்டா, அவ்வளவு தான் உலகமே மறந்து போயிடுது நமக்கு. இதிலே ரோடு பத்திலாம் நமக்கு எதுக்கு வீண் கவலை சொல்லுங்க

ஆட்டோ

ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சிட்டா நம்ம சவுகரியத்துக்கு வண்டியை சடாரென்று திருப்புவோம். அப்ப தான் எதிரில் யாராவது டூ வீலர் லே வந்து மோதி கீழே விழுவாங்க இல்லே நடந்து வர்றவங்க தடுமாறி போய் அதிர்ச்சி அடைவாங்க இருக்கட்டுமே அது பத்தி நமக்கென்ன. ஒழுங்கா வர வேண்டியது தானே னு மோதியவங்களையே ஒரு கேள்வி கேட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான். திருப்பங்களில் கண் மூடி தனமாய் வேகமாய் திருப்புவோம் இல்லாட்டி கொஞ்சமே கொஞ்சம் சின்ன சந்திலே கூட நாம கஷ்டப்பட்டு, மற்றவங்களையும் கஷ்டபடுத்தி போக வேண்டிய இடத்துக்கு போய்டுவோம். ஆட்டோ வே அழும் அளவுக்கு பயணிகளை ஏற்றி கொள்வது மட்டுமா, பள்ளி செல்லும் குழந்தைகளை கூட நமக்கு வலது பக்கம் ஒருத்தர் இடது பக்கம் ஒருத்தர் னு வச்சிகிட்டு தான் சர்க்கஸ் காட்டுவோம். (இன்னும் மடிலே மட்டும் தான் நாம உட்கார வைக்கலை)
பள்ளி வாகனம், பேருந்து,வேன்

பள்ளி குழந்தைகளை இறக்கி விட்டுட்டு அவங்க பாதுகாப்பா இறங்கிட்டாங்களா என்று தெரியாமல் இல்லே தெரிந்து கொள்ள விருப்பமில்லாமல் வண்டியை உடனே எடுத்துடுறோம். அதன் மூலம் பலியானோர் பற்றி ஏற்கனவே செய்திகள் தெரிஞ்சிருந்தும் நமக்கு என்னவோ கவனமா இருக்க தெரியலை. பேருந்தில் குழந்தைகளை வைத்து கொண்டு இறங்கி ஏறுறவங்க வயசானவங்க சீக்கிரம் ஏறலைனா மட்டும் அவங்களை ஒரு வழி பண்ணிடறோம். முடிந்த வரை ஓவர் டேக் எடுத்து வாகனங்கள் வர்ற வழியிலே போற நமக்கு வண்டி ஓட்டற நேரத்திலே செல் போன் வந்துருச்சின்னா கூட வண்டியில் இருக்கிற அத்தனை பேர் பாதுகாப்பை பற்றி யோசிக்காம உடனே செல் போன்லே பேச ஆரம்பிசுடுறோம் (அதுக்கப்புறம் அவங்ககிட்டே பேசவே முடியாது பாருங்க) இதுலே வண்டியோட கண்டிசன் பற்றி எல்லாம் பார்க்கிறதுக்கு ரெக்கை கட்டி பறக்கிற இந்த காலத்திலே நமக்கு ஏதுங்க நேரம்

லாரி

லாரி எதிரே வர்றப்ப கொஞ்சம் உத்து பாருங்க நம்ம மேலே ஏறிடுமோன்னு கொஞ்சம் பயமா தான் இருக்கும். ஆனா நாம அதே லாரிலே ஏறிட்டா மற்றவங்களுக்கு ஒரு திகில் கொடுப்போம் பாருங்க அது கண் மூடி தனமான ஒன்று.அப்படி கண்ட படி வந்து லாரிகள் நிகழ்த்திய உயிர்ச்சேதங்கள் தான் கொஞ்சமா என்ன. இதுக்காக நாம எதுனா சிரத்தை எடுத்திருக்கோமா என்ன

இப்படி நாம நிதானத்தோட இல்லாததால் ஏற்படுற உயிர் சேதங்கள் கணக்கு வழக்கில்லாமல் நீண்டுகிட்டே இருக்கு. சாலை விதிகளை மதிச்சு ஒருத்தர் வண்டி ஓட்டிட்டு போனாலும் மற்றவங்க ஒழுங்கா சாலை விதிகளை மதிச்சு வரணுமே

ரோட்டில் நின்ற ஒருவரை பார்த்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அக்கறையுடன் சொன்னது இது, "தம்பி ரோடு உன்னுதா இருக்கலாம் ஆனால் அதில் வரும் வாகனங்கள் உன்னுடையதில்லை எனவே ஓரமா நில்லு"

இதே அவர் வண்டி ஓட்டரவங்களுக்கு என்ன சொல்லியிருப்பார் னு நினைச்சு பார்த்தா, "வண்டி ஓட்டற புண்ணியவான்களே வண்டி உங்களுதா இருக்கலாம் , ரோடு உங்களுதா கூட இருக்கலாம் ஆனா ரோட்டிலே போற வர மனித உயிர்கள் உங்களுதில்லே,
( உயிர்சேதம் ஏற்படுத்தும் அருகதை கூட நம்ம யாருக்கும் கிடையாது) " இப்படி தானே சொல்லியிருப்பார்

இப்படி சொன்னாலும் நாம சீரியஸ் எடுத்துக்க மாட்டோம் னு நினைக்கிறேன் ஏன்னு கேட்கறீங்களா போதையில் கூட வண்டி ஓட்ட தயங்காதவங்கலாச்சே நாம தான் . அப்ப என்ன தான் பண்றது

நம்ம குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லாரும் நாம போற பாதையிலே தான் வர்றாங்கனு முடிவு பண்ணிட்டு வண்டி ஓட்டி பார்ப்போமே. அப்ப ஓரளவு நல்ல ரிசல்ட் கிடைச்சிடும் னு நினைக்கிறேன்

(இந்த உலகில் எது வேண்ணா லும் திரும்ப கிடைச்சிடும் ஆனா உயிர் போயிடுச்சின்னா உலகத்திலே
எங்கேயும் எப்பவும் அது கிடைக்காது. எனவே மனுஷங்களோட உயிர் மிக முக்கியம்)

பைனல் பஞ்ச்

வேகத்திற்கு தான் கொஞ்சம் பிரேக் போடுவோமே
நிதானத்திற்கு தான் ஆக்சிலேட்டர் முடுக்குவோமே

இப்படிக்கு
மனித உயிர்கள் மேல் பற்று கொண்ட யாரோ ஒருத்தன்

ஆர்.வி.சரவணன்

12 கருத்துகள்:

  1. வேகத்திற்கு தான் கொஞ்சம் பிரேக் போடுவோமே
    நிதானத்திற்கு தான் ஆக்சிலேட்டர் முடுக்குவோமே

    நல்ல பகிர்வு.
    அனைவரும் படித்து தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு வாகனமாக விளக்கமாக சொல்லி, அருமையாக முடித்துள்ளது சிறப்பு... பாராட்டுக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. தங்கள் வருகைக்கு நன்றி குமார்

    தங்கள் வருகைக்கு நன்றி ரத்னவேல் நட்ரராஜன் சார்

    தங்கள் வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு சரவணன். சில நொடிகளில் வாழ்க்கையே தடம் மாறி போகக்கூடிய இடம் சாலைகள்

    உங்கள் ப்ளாகில் பதிவுகள் font- மிக சின்னதாய் உள்ள மாதிரி தெரிகிறது. சரி பாருங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  5. பாதையில் பயணம் போகலாம்; போதையில் பயணம் போகலாமா?

    பதிலளிநீக்கு
  6. சாலை விபத்திற்கான 2 முக்கிய காரணங்கள்:

    1.போதையில் வாகனம் ஓட்டுதல்.

    2.செல்ஃபோன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுதல்.

    பதிலளிநீக்கு
  7. 200-ஆவது பதிவிற்காக,
    முன்னதாக (advance) வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு..அண்ணே..

    பதிலளிநீக்கு
  9. அவசர உலகத்திற்கு தேவையான அவசிய பதிவுங்க சார் ...
    நிதானமா போவோம் நிம்மதியா வாழ்வோம் ..
    என் நன்றிகள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்