பதிவர் திருவிழாவில் கவியரங்கில் வாசிக்க மறந்த கவிதை
ஒன்று சேர்ந்து
புது கடலொன்று உதயம்
பல திசைகளில் இருந்தும்
புறப்பட்ட
படையொன்று
ஒன்றாய்
புதிய திசை நோக்கி
குன்றுகள் பலவற்றின் அணி
வகுப்பில் ஒரு மலை தொடர்ச்சி
இதோ
எங்கெங்கோ பூத்த
மலர்கள் சேர்ந்து
அமைத்த
நந்தவனம் இதோ
மத்தாப்புகளின்
கூட்டணியில்
ஒரு மாபெரும்
வாணவேடிக்கை
நூற்றுகணக்கில்
தீபங்கள் ஒன்றிணைந்து
தந்திருக்கும்
யாகமொன்று
மழை துளிகள்
பல ஒன்றிணைந்து
அருவியாய்
இறங்கிய
அதிசயம்
புள்ளிகள்
பலவற்றை
ஒன்றிணைத்து
உருவான
அழகிய கோலம்
கனிகளின்
கூட்டமைப்பில்
ஒரு பழமுதிர்சோலை
எழுத்துக்கள் பல
கை கோர்த்து
உருவாக்கிய
கவிதை
இவை
அனைத்தும்
உணர்த்துவது
இந்த வலை பதிவர்
திருவிழாவை
தான்
என்பது
இங்கு
நான் சொல்லாமலே
அனைவருக்கும்
புரிந்திருக்கும்
இந்த
பதிவர் சந்திப்பின்
வெற்றியை
இவ் வையம்
இந்நேரம்
உணர்ந்திருக்கும்
வருங்காலம் நமதாகட்டும்
வெற்றி நம் வசமாகட்டும்
பதிவர் திருவிழாவில் கவியரங்கில் எல்லோரும் கவிதை வாசிக்கையில் எனக்கும் வாசிக்கும் ஆர்வம் வந்தது இருந்தும் நான் பெயர் கொடுக்கவில்லை என்பதால் வாசிக்க முடியவில்லை ஆகவே தான் அதை இங்கு இதோ இணைய மேடையில் வாசித்து விட்டேன்
ஆர்.வி.சரவணன்
அருமை... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஎன்ன சார் இப்படி...? பெயர் கொடுத்திருக்கலாமே...
நன்றி...
நன்றாகத்தானேயுள்ளது? ஏன் பெயர் கொடுக்காமல் விட்டுவிட்டீர்கள்?
பதிலளிநீக்குஇருப்பினும் அருமை நண்பரே!
செம ஸ்டைலா மைக்கில பேசுறீங்க.
பதிலளிநீக்குஅருமையான படைப்பு
பதிலளிநீக்குவாய்விட்டு சப்தமிட்டு படித்து மகிழ்ந்தேன்
மிகச் சிறப்பாக இருந்தது
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
சூப்பர்.,
பதிலளிநீக்குஅழகிய கவிதை சார் ...
பதிலளிநீக்குஇனி வரும் மேடைகளில் கவியரங்கத்தில் தவறாமல் பெயரை பதிவு செய்து விடுங்கள் ..
அழகிய பதிவு ...
சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html
தொடர் பதிவுக்கு அழைப்பு:-
நீக்குஎங்க ஊரு தேவதை! (4-ஆம் ஆண்டு துவக்கம்)!.
நன்றி தனபாலன் சார்
பதிலளிநீக்குநன்றி மோகன் சார்
நன்றி நிசமுதீன் சார்
நன்றி ரமணி சார்
நன்றி கருண்
நன்றி அரசன்
நன்றி சுரேஷ்
முகம் தெரியாத நம்மை ஒன்றினைப்பது எழுத்தே/எழுத்திற்கு அந்த சக்தியிருக்கிறது.அந்த எழுத்துக்கு முதலில் நன்றி. அடுத்து நம்மைப்போன்ற பதிவர்வகளுக்கும்,எழுத்தாளர்களுக்கும்/
பதிலளிநீக்குஅடுத்ததாக நம்மையெல்லாம் ஒன்றினைந்து சந்திக்க வைத்த சென்னை பதிவர்கள் சங்கமத்திற்கு/நல்ல கவிதை வாழ்த்துக்கள்.