அவன் வீட்டிலே விஷேசங்க
பாக்யராஜ் பட பெயர்களை வைத்து ஒரு மிக சிறிய கதைக்கு முயற்சித்திருக்கிறேன்
படித்து பாருங்கள்
தாவணி கனவுகள் கண்டு கொண்டிருக்க
எங்க சின்ன ராசா அவளை பார்த்து அந்த ஏழு நாட்களில்
இது நம்ம ஆளு என்று முடிவு செய்து அவளிடம்
டார்லிங் டார்லிங் டார்லிங் என்று சொல்ல
அவள் எதிர்ப்பு என்ற தூறல் நின்னு போச்சு ஆகவே
இன்று போய் நாளை வா வந்து விடியும் வரை காத்திரு
முந்தானை முடிச்சுக்கு என்று சொல்ல
அவன் சந்தோசத்துடன் பட்டு வேட்டி மடிச்சு கட்டி
திருமணத்திற்கு தயாரானான்
அவளுடன் ஆராரோ ஆரிராரோ பாட
ஆம்
இப்ப அவன் வீட்டிலே விஷேசங்க
இந்த பதிவும் நான் நான் தளம் ஆரம்பித்த போது எழுதியது தான்
ஆர்.வி. சரவணன்
ஒரு நிமிஷம்
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.
ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை சகவலைப்பதிவர்கள் தங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டு பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!
நன்றி: இந்நேரம்.காம்
நண்பர் அஹமது இர்ஷாத் தனது அலைவரிசை தளத்தில் உதவி செய்யலாமே என்ற தலைப்பில் இதை பற்றி எழுதியிருந்தார் அவரவர் தளங்களில் வெளியிடுங்கள் என்றும் சொல்லியிருந்தார் இதோ நானும்
அங்கங்கே கொஞ்சம் இடிக்குது....
பதிலளிநீக்குவித்தியாசமான முயற்சி.
உங்களின் இந்த கதையை பார்க்கும் போது, எனக்கு விஜய் பிடிக்காவிட்டாலும், நண்பன் ஒருவனுக்காக, விஜய்யை வாழ்த்தி, விஜய் படங்களை வைத்தே ஒரு வாழ்த்துரை எழுதியது நினைவுக்கு வருகிறது. நன்றி நண்பரே.
பதிலளிநீக்குவித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள் ...
பதிலளிநீக்குசார் இன்னும் சில காலங்களில் எங்க வீட்லயும் விஷேசம் வரும் ..
முன்னாடியே சொல்லி விடுகிறேன் ,.. வந்துடுங்க ...
உங்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅந்த மாணவரின் ஊர் எனது ஊருக்கு மிக அருகில் தான் உள்ளது...
சில நல்ல உள்ளங்கள் உதவ முன் வந்துள்ளதாக கேள்வி பட்டேன் ...
நல்லது நடக்க வேண்டிக்கொள்கிறேன்
கொஞ்சம் இடிக்குது....
பதிலளிநீக்குBUT... வித்தியாசமான முயற்சி.
கலக்கல் பகிர்வு.
பதிலளிநீக்குவித்தியாசமான முயற்சி!
பதிலளிநீக்குசமுதாய அக்கறைக்கு வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி..
பதிலளிநீக்குநல்ல முயற்சி!
பதிலளிநீக்குசமுதாய நோக்கமும் பாராட்டத் தக்கது.
Thanks saravanan..
பதிலளிநீக்கு