புதன், ஜூலை 06, 2011

அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா




அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா


அரசியலில் எனக்கு கிடைத்த அனுபவம் ஒன்றை
உங்க கிட்டே சொல்றேன்

முன்னொரு காலத்தில் அதாவது 1991 ஆம் வருடத்தில் நான் ஒரு ஸ்க்ரீன் பிரிண்டிங் கம்பெனியில் வேலை பாத்துகிட்டு இருந்தேன் நான் பேருந்தில் தான் அலுவலகம் வருவேன் அப்போது பேருந்தில் தினம் பயணம் செய்பவர்களில் ஒருவர் (பார்த்தா சிரிக்கிறது அவ்வளவு தான் நட்பு ) ஒரு நாள் என்னிடம் பேசி கொண்டிருந்த போது என்ன பண்றீங்க என்றார்.

நான் (சும்மா இருந்திருக்கலாம் வம்பை விலை கொடுத்து வாங்கனுமா) வேலை பார்க்கும் கம்பெனி பற்றி சொன்னேன் சொன்னவுடன் அவர் உடனேஎனக்கு விசிடிங் கார்டு நூறு போட்டு கொடுங்க என்றார் .நான் என்னோடது மார்க்கெட்டிங் வேலை இல்லை என்றேன் அதனாலென்ன ஆர்டர் கொடுத்தா வேண்டாம் னாசொல்ல போறாங்க நீங்க போட்டு கொடுங்க என்று என் கையில் ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டார். தான் உறுப்பினராய் இருக்கும் கட்சி யின் பேர் சொல்லி கட்சி தலைவரின் போட்டோவுடன் விசிடிங் கார்டு போட்டு கொடுத்துடுங்க என்றார்.

நான் எனது கம்பெனியில் விசாரித்த போது மேனேஜர் நீ ஆர்டர் எடுத்திருப்பது மகிழ்ச்சி தான் இருநூறு ரூபாய் ஆகும் சொல்லிடு இருந்தாலும் ஆள் கரெக்டா காசு கொடுப்பாரா என்றும் பார்த்து கொள் என்று சொல்லவும் நான் கொஞ்சம் உஷாராகி மறு நாள் அந்த ஆளை பார்க்கும் போது இருநூறு ரூபாய் ஆகுமாம் என்று சொல்லி கழண்டுகொள்ளலாம் என்று நினைத்தேன்.

அவர், அதனாலென்ன போட்டுடுங்க என்று உறுதியாக சொன்னவுடன் நானும் கார்டு போட சொல்லி விட்டேன். கார்ட் ரெடியானவுடன் எடுத்து கொண்டு சென்று அவரை பேருந்து நிலையத்தில் பார்த்து கொடுத்தேன். பார்த்து விட்டு நல்லாருக்குப்பா தாங்க்ஸ் என்றார் . மீதம் ரூபாய் 150 கேட்ட போது அவர் அதனாலென்ன நாளை தருகிறேன் என்றார். மறு நாளிலிருந்து அவரை பார்க்க முடியவில்லை.

ஒருவாரம் கழிந்தவுடன் எனது மேனேஜர் என்னை பார்த்து சிரித்து, தப்பா நினைச்சுக்காதே காசு வரலைன்னா உன் சம்பளத்தில் இருந்து தான் பிடிச்சிருவாங்க என்றார்.

நான் டென்ஷன் தாளாமல் அடுத்த நாள் அவரது வீடு எங்கே என்று விசாரித்து கொண்டு சென்றேன். வீட்டில் அவர் இல்லை. அவரது தாயிடம் வந்த விபரத்தை சொல்லி விட்டு வந்தேன். அடுத்த நாள் அவரை பேருந்து நிலையத்தில் பார்த்த போது அவர், எப்படி என் வீட்டுக்கு வரலாம் நீ என்று கோபமாய் கேட்டார். அலுவலகத்தில் என்னை நெருக்குவதால் வந்ததாக சொன்னேன் அதுக்காக வீட்டுக்கு வந்துடுவியா நீ இனிமே வீட்டுக்கு எல்லாம் வர்ற வேலை வச்சிக்காதே என்று கறாராய் சொல்லிவிட்டு காசு தருவதை பற்றி ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார்.

பிறகென்ன என்கிறீர்களா.

அந்த மாதம் அலுவலகத்தில் எனது சம்பளம் 350 ரூபாயில் இந்த 150 ரூபாயை கழித்து கொண்டு தான் கொடுத்தார்கள் . மனசு வெறுத்து போனது


இதை பத்தி இப்ப நினைக்கிறப்ப நம்ம கவுண்டமணி சொன்ன டயலாக்
தான் நினைவுக்கு வருது

அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா

(அரசியலில் நல்லவர்களால் நல்ல அனுபவங்களும் எனக்கு கிடைத்திருக்கின்றன அவ்வப்போது அதை பகிர்ந்து கொள்கிறேன்)

படம் நன்றி கூகுள்


ஆர்.வி.சரவணன்




7 கருத்துகள்:

  1. :-))
    /அந்த மாதம் அலுவலகத்தில் எனது சம்பளம் 350 ரூபாயில் இந்த 150 ரூபாயை கழித்து கொண்டு தான் கொடுத்தார்கள் / அநுபவ பாடத்துக்கான ஃபீஸ்!

    பதிலளிநீக்கு
  2. அரசன் சொன்னது…


    நல்லவேளை சார்...
    அந்த ஆள் விசிட்டிங் கார்டு அடிக்க சொன்னார் ..
    கட்சிக்காக 500 சுவரொட்டி அடிக்க சொல்லி அதன் மதிப்பு 1500 ஆக இருந்திருந்தால் என்ன ஆகிருப்பிங்க...

    இப்படி இருந்தும் ...
    சேற்றுக்கு நடுவில் செந்தாமரையும் இருக்கத்தான் செய்கிறது ...
    அனுபவம் அசத்தல் சார்... தொடருங்க

    பதிலளிநீக்கு
  3. விடுங்க பாஸ், அனுபவம் ஒரு நல்ல ஆசான்.

    பதிலளிநீக்கு
  4. என்ன செய்வது r.v.s., சில சமயம் அதிக விலை கொடுத்து தான் அனுபவம் பெற முடிகிறது!

    பதிலளிநீக்கு
  5. என்னங்க நீங்க? டெய்லி டீவில இலவசமா சொல்லி கொடுக்குற பாடத்துக்கு, 200ரூபாய் கட்டி படிச்சிருக்கீங்க?

    பதிலளிநீக்கு
  6. எந்த கட்சின்னு எனக்கு தெரியும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்