வான் வழியே நானும்
நான் இது வரை விமானத்தில் சென்றதில்லை என் உறவினர்கள் செல்லும் போதும் வரும் போதும் ஏர்போர்ட் சென்று வந்திருக்கிறேன் முதல் முறையாய் நானும் விமானத்தில் சென்று வந்தேன்
என் அலுவலகத்தில் என் துறை சம்பந்தப்பட்ட வேலை ஒன்றை முடிக்க வேண்டி வர நான் இந்தோர் (மத்யப்ரதேசம் ) செல்லுமாறு பணிக்கப்பட்டேன் ஒரே நாள் தான் வேலை.
ஞாயிறு இரவு கிளம்பி மும்பை சென்று அங்கு இரவு தங்கி விட்டு மறுநாள் அதிகாலை மும்பையிலிருந்து நான் இந்தோர் சென்று வேலை முடித்து விட்டு அன்று இரவே மும்பை திரும்பி மறுநாள் அதிகாலை மும்பையிலிருந்து சென்னை வந்து இறங்கி நேராக அலுவலகம் வந்து விட்டேன்
என்ன ரெண்டு நாள் தூக்கம் போச்சு
அந்த அனுபவங்களை செய்தி துளிகளாய் தருகிறேன்
எட்டு பத்து விமானத்திற்கு நான் ஏர்போர்ட் சென்று நுழைந்தது எழு முப்பது மணிக்கு நான் ஏறிய ஆட்டோ செய்த மக்கர் மற்றும் ஆட்டோகாரர் சென்ற வழியினாலும் நேரமாகி விட்டது .ஆட்டோ பாஸ்ட் ஆக பறந்ததோ இல்லியோ பதட்டத்தில் என் மனசு அதை விட வேகமாக பறந்தது
முதல் முறை விமானத்தின் உள்ளே கால் வைக்கும் போது கடவுளை வேண்டி கொண்டு உள் நுழைந்தேன் (முதல் முதலாய் செல்கிறோம் வேலை இனிதாய் அமைய வேண்டும் என்று தான் )
எனது டிராவல் பேகை எனது சீட்டின் கால்களுக்கு அருகாமையில் வைத்து கொண்டு அமர்ந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்தவர் மேலே வைக்கலாம் என்று சொன்ன பின்பு தான் , சீட்டுக்கு மேல் அதற்கென்று தனி இடம் இருப்பது எனக்கு தெரிய வந்தது
நான்கு விமான பயணத்திலும் ஒரு முறை மட்டுமே ஜன்னலோர சீட் கிடைத்தது அதுவும் இரவில் செல்லும் போது மட்டும்
விமானம் மேலே உயரும் போது பயமாயிருக்குமோ என்று நினைத்தேன்
அவ்வளவாக பயம் ஏற்படவில்லை
இரவில் விமானம் மேலே உயரும் போது வெளிச்ச பூக்களில் மின்னிய சென்னையையும் மும்பையையும் பார்த்து பிரமிப்பானேன்.
விமானத்தில் ஒரு முறை கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி சாப்பிட்டேன் இன்னொரு முறை டீ வாங்கி சாப்பிட்டேன் டீ பதட்டத்தில் என் கை பட்டு சிதறி என் மேலும் விழுந்து பக்கத்தில் இருப்பவர் மேலும் விழுந்து அவரது முகச்சுளிப்பை அவஸ்தையுடன் ,அசடு வலிந்து கொண்டே பெற்று சீட் எனது பான்ட் எல்லாம் துடைத்து ஒரு வழியாய் மிச்சமிருக்கும் டீயை குடித்து முடித்தேன் (டீ சிதறியவுடன் ஏர் ஹோஸ்டஸ் உடனே வேகமாய் சென்று டிஸ்யு பேப்பர் தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து கொடுத்தார்)
விமானத்தில் செல்வதற்காகவே தனியாக ஒரு ஆயிரம் ரூபாய்க்கு என் சொந்த செலவில் பர்சேஸ் செய்து கொண்டேன்
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் விமான பயணம் பற்றி ஒரு லெக்சர் கொடுத்தேன்
நான் சென்று வந்த வேலை வெற்றிகரமாய் முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி
இந்த விமானப்பயணம் அடுத்து எப்போது செல்வோம் என்ற ஆசையை
என் மனதில் விதைத்து விட்டது என்னவோ உண்மை .
ஆர்.வி.சரவணன்
Vaanathin Keezhe... சொன்னது…
பதிலளிநீக்குஅடிக்கடி இந்த அனுபவம் வாய்க்க வாழ்த்துக்கள்!
27 ஜூன், 2011 8:21 am
நன்றி வினோ
பதிலளிநீக்குr.v.s.,
பதிலளிநீக்குsuperb experience!may you be blessed with such experiences!
Aaha, naan innum vimaanaththil ponathe illai; :-(
பதிலளிநீக்குThanks for sharing
சார் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் பொது கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இருக்காது தான் ..
பதிலளிநீக்குஎன்ன நீங்க சென்றதும் தெரியவில்லை வந்ததும் தெரியவில்லை .. ஒரு நாளில் நான்கு முறை விமான பயணம்...
இனி வாய்ப்பு அடிக்கடி கிட்டும் என்று நம்புகிறேன் .. வாழ்த்துக்கள் /.//
முதல் முறை போகும் போது இப்படி தான் இருக்கும். பின்னர் எப்படா விமானம் தரையிறங்கும் என்று இருக்கும். எல்லாம் சொந்த அனுபவம் தான்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குநமக்கு இன்னும் அந்த வாய்ப்பு கிடைக்கலை. எப்ப றெக்கை முளைக்குதுன்னு பாப்போம் ஹும் .
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தென்றல் சரவணன்
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதவி
விமான பயணம் செல்லும் வாய்ப்பு விரைவில் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அரசன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சிவகுமாரன் விமான பயணம் செல்லும் வாய்ப்பு விரைவில் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்
பயணங்கள் எப்பொழுதும் இனிமையானவைகள்! ஆனா தொலைதூர விமான பயணம் ரொம்ப கஷ்டம் எனக்கு! உங்க அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி!
பதிலளிநீக்குசரவணன் முதல் பயணம் எப்போதுமே சுவாரசியமானது தான் :-) நான் இன்னும் நிறைய அனுபவங்களை எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
பதிலளிநீக்குமேலும் பல பயணங்கள் அமைய என் வாழ்த்துக்கள்..