வியாழன், ஜூன் 02, 2011

இந்த மான் உந்தன் சொந்த மான் ....

இந்த மான் உந்தன் சொந்த மான் ....

மனம் கவர்ந்த பாடல்கள்

நம் இசை அரசர் இளையராஜா அவர்களின் பாடல்கள் கேட்பது ஒரு சுகம் என்றாலும் அவரது குரலிலும் கேட்கும் போது இரட்டிப்பு போனஸ் கிடைத்த மகிழ்ச்சி தான் எனக்கு ஏற்படும் . அப்படி ஒரு பாடலை தான் இப்போது நான் சொல்ல போகிறேன்

கரகாட்டக்காரன் படத்தில் வரும் இந்த மான் உந்தன் சொந்த மான்
பாடல் தான் அது

அந்த பாடல் ஆரம்பிக்கும் போது வரும் இசை உச்சி வெயில் நேரத்தில் ஒரு நதியின் குளிர்ந்த நீரில் நீராடுவதற்காக கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும் போது அந்த குளிர்ந்த நீர் நம் உடலில் தழுவும் போது என்ன உணர்வு கிடைக்கும் யோசித்து பாருங்கள் அந்த உணர்வு தான் எப்போதுமே எனக்கு இப்பாடலின் ஆரம்ப இசை கேட்கும் போது தோன்றும் .

தொடர்ந்து கேட்கும் போது நதி நீரில் நீந்தும் உணர்வுகளும், பாடல் முடியும் போது திருப்தியுடன் கரை ஏறும் உணர்வும் ஏற்படும்

சின்ன குயில் சித்ராவுடன் இணைந்து இசை அரசர் பாடும் இந்த பாடலில் அன்னமே என்று ராகம் இழுக்கும் போது கூடவே நம் மனதையும் அல்லவா சேர்த்து இழுப்பார்

அதே போல் பக்கம் வந்து தான் என்று பாடும் போதும் சந்திக்க வேண்டும் தேவியே என்று பாடும் போதும் வேல் விழி போடும் தூண்டிலே என்று பாடும் போதும் அந்த வரிகளுக்கான குரல் இனிமை என்னை மிகவும் கவரும்

படம் வெளியான நாள் முதல் இன்று வரை ஏன் எப்போதுமே என்னை கவர்ந்த பாடல் இது என்று உறுதியிட்டு சொல்வேன்

படம் கரகாட்டக்காரன்

பாடல் கங்கை அமரன்

படம் வெளியான ஆண்டு 1989




இன்று நம் இசை அரசர் இளையராஜா அவர்களுக்கு பிறந்த நாள்

ராக தேவனே உன் இசை,

தூக்கம் வாராத இரவுகளில் என்னை
தாலாட்டுகிறது


துக்கமான நேரங்களில் என் மனதை
மயிலிறகாய் வருடுகிறது


உற்சாகமான நேரங்களில் சந்தோச சிகரத்திற்கு
என்னை கை பிடித்து அழைத்து செல்கிறது


தோல்விகளில் துவளும் போது தட்டிஎழுப்பி
அமர வைக்கிறது


வாழ்க்கையில் நான் வெற்றிகளை தொடும் போது
கை தட்டி ஆர்ப்பரிக்கிறது


இசை தேவனே உன் இசை இவ்வையகம் உள்ள வரை வையகத்தை ஆளட்டும்


ஆர்.வி.சரவணன்

15 கருத்துகள்:

  1. அருமையான பாடல் இந்த பாடலின் காட்சியமைப்பு சுமார் ரகம்தான் என்றாலும் இந்த பாடல் இசை காலத்தால் அழியாத ராக தேவனின் அற்புதமான இசை.

    பதிலளிநீக்கு
  2. மனதை மயிலிறகாய் வருடும் அழகான பாடல்!

    பதிலளிநீக்கு
  3. இசை தெய்வத்துக்கு என் வணக்கங்கள்.

    அருமையான வாழ்த்து.

    பதிலளிநீக்கு
  4. இளையராஜா.... இளையராஜா தான்...

    பதிலளிநீக்கு
  5. இசை அரசர் இளையராஜா நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. இளையராஜாவின் இசையில் எப்போதும் இளமை பொங்கும்!

    பதிலளிநீக்கு
  7. எல்லோருக்கும் பிடித்த‌ பாட‌ல் ச‌ர‌வ‌ண‌ன்.. ர‌ச‌னையான‌ ஆளாக‌த்தான் இருப்பீங்க‌ போல‌.. :)

    பதிலளிநீக்கு
  8. இசை அரசரின் இசையை கேட்க ஆரம்பித்து விட்டால் பசி கூட மறந்து போகும் ..
    அவரின் இந்த பாடலும் இனிமையை கூட்டகூடியது ,....
    நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் இதுவம் ஒன்று ,.,...

    பகிர்வுக்கு நன்றிங்க சார் ...

    பதிலளிநீக்கு
  9. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலாநேசன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவதர்ஷன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியா

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  10. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கவி

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதவி

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்

    பதிலளிநீக்கு
  11. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஅஹமது இர்ஷாத்
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஅரசன்

    பதிலளிநீக்கு
  12. ந‌ல்ல‌ பாட‌ல் ச‌ர‌வ‌ண‌ன்.. ப‌கிர்வுக்கு ந‌ன்றி..

    இசைஞானிக்கு வாழ்த்துக்க‌ள்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்