வெள்ளி, ஜூன் 17, 2011

டென்சன் கள் பல விதம்


டென்சன் கள் பல விதம்

நான் நடைமுறை வாழ்க்கையில் டென்சன் ஆகும் தருணங்கள் சிலவற்றை டென்சனுடன் சாரி ஜாலியாய் இங்கே தந்திருக்கிறேன்

டென்சன் 1

ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர் நாம நடந்து வரப்ப பாத்தா காலியா தான் இருக்கும் ஆனா நான் கிட்டே நெருங்கி வரதுக்குள்ளே எங்கிருந்து தான் வருவாங்களோ தெரியாது நாலஞ்சு பேர் திடீர்னு வந்து நின்னுடுவாங்க அப்ப வரும் பாருங்க டென்சன்

டென்சன் 2

ரயில்லே ஜன்னலோர சீட் லே உட்காரலாம் னு ஆசைப்பட்டு ஏறுவேன் காலியாதான் இருக்கும் ஆனா பாருங்க கிட்டே போனவுடனே பார்த்தா சீட் லே சின்ன கர்சிப் அங்கே இருந்து நம்மளை டென்சன் ஆக்கும்

டென்சன் 3

பேருந்தில் ஏறி அமர்ந்து நிம்மதியா தூங்கிட்டு போகலாம்னு நினைச்சா அது நம்ம கையிலே இல்லை பக்கத்துலே உட்கார்ற ஆளை பொறுத்தது அது ஒன்னு அவர் தூங்கி நம் மேல் விழுகிறவர் ஆக இருக்கலாம் அல்லது சரக்கு அடிச்சிட்டு வந்து பேசிகிட்டே இருக்கிறவராகவும் இருக்கலாம் .அப்படி இருந்திட்டா நம்ம நிலைமை டென்சன் தான்

டென்சன் 4

நாம முதலாளி கிட்டே இன்க்ரிமென்ட் க்கு போராடி பேசி இவ்வளவு தான் தருவார் னு முடிவாகி சரி என்று ஒத்து கொண்டு வந்த பின்னாடி மற்ற ஊழியர்கள் பேசி அதற்கும் மேலேயும் அதிகமா இன்க்ரிமென்ட் வாங்கினா வரும் பாருங்க ஒரு டென்சன்

டென்சன் 5

ஹோட்டல் லே சாப்பிட்டு கை அலம்ப போவோம் அங்கே ஒருத்தர் தன் உடலையே, அதாவது ( கை , முகம் ) அலம்பிட்டிருப்பார் . இது வரைக்கும் அவர் வீட்டிலே முகமே அலம்பியிருக்க மாட்டோரோனு நினைக்கும் படி அவர் அலம்பி நம்ம கையை காய வைப்பார் பாருங்க அப்ப கிளம்பும் பாருங்க ஒரு டென்சன்

டென்சன் கள் தொடரும்

அது சரி நான் மட்டும் என் டென்சன் பற்றி சொல்லிகிட்டு இருக்கேன் நீங்க இதுக்கெல்லாம் டென்சன் ஆகறீங்கலானு கேட்கவே இல்லை பாருங்க நானு
சரி நீங்க எதுக்கெல்லாம் டென்சன் ஆவீங்க னு சொல்லுங்களேன்


ஆர்.வி.சரவணன்

**********************************ஒரு நிமிஷம் *******************************
ஈரோடு மாவட்ட கலெக்டர் திரு .ஆனந்தகுமார் அவர்கள் தனியார் பள்ளியில் படித்து வந்த தன் மகள் கோபிகாவை அரசு தொடக்கபள்ளியில் சேர்த்ததோடு மற்ற குழந்தைகள் சாப்பிடும் சத்துணவை தன் குழந்தைக்கும் வழங்குமாறு கேட்டு கொண்டுள்ளார்
இதன் மூலம் ஒரு முன்னுதாரணத்தை விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆனந்தகுமார் அவர்களுக்கும் அவர் மனைவி ஸ்ரீ வித்யா அவர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்
************************************************************************************

10 கருத்துகள்:

  1. r.v.s.,

    என்ன எழுதறதுன்னு டென்ஷனாக்கிட்டீங்களேப்பா!

    படம் நல்லா இருக்கு!

    உங்க டென்ஷன் அனேகமா எல்லோரும் அனுபவிச்சிருப்போம்!

    பதிலளிநீக்கு
  2. ஸ்ப்பா.. படிச்சு டென்சன் ஆயிட்டேன்:-‍)

    "ஒரு நிமிஷம்"... நல்ல தகவல்!

    பதிலளிநீக்கு
  3. நான் வர வர பஸ் போய்டும் ... செம டென்ஷன் ஆகிடும் :-)

    பதிலளிநீக்கு
  4. எனக்கும் இவை காமன் டென்ஷன்ஸ்!!
    முன்னுதாரண கலக்டருக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  5. எல்லா டென்ச‌ன்க‌ளையும் தான் நீங்க‌ளே சொல்லிடீங்க‌ளே.. அப்புற‌ம் நாங்க‌ எங்க‌ சொல்லுற‌து.. :)))

    பதிலளிநீக்கு
  6. நல்லா தான் டென்சன் வருது சார்,..
    எங்களுக்கும் டென்ஷன் வரும் ஆனால் வராது ..

    ஈரோடு ஆட்சியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியா
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்

    பதிலளிநீக்கு
  8. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரி
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதவி
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டீபன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்