செவ்வாய், ஜனவரி 25, 2011

ஜெய் ஹிந்த்




ஜெய் ஹிந்த்

குடியரசு தினம் அன்று பள்ளிக்கு சென்று வந்த ஹரிஷ் , ஜனனி இருவரும் வீட்டுக்கு வந்தவுடன் தன் தந்தை தாயிடம் பள்ளியில் கொடி ஏற்றியது முதல் மிட்டாய் கொடுத்தது வரை அனைத்தையும் சொல்லி மகிழ்ந்தார்கள்


அவர்கள் இருவருக்கும் ஒரு ஐடியா தோன்றியது தாங்களும் அது போல் கொடி ஏற்றுகிறோம் என்று சொல்லி தங்கள் வீட்டு தோட்டத்தில் கம்பம் நட்டு தன் தந்தை தாயிடம் அடம் பிடித்து தேசிய கொடி வாங்கி வர செய்து தனது தோழர் தோழியர்களுடன் சேர்ந்து கொடி ஏற்றி வணக்கம் தெரிவித்தார்கள் .


அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தார்கள் . மாலையில் கொடியை இறக்கி வீட்டில் உள்ள தங்களது புக் செல்பில் மரியாதையுடன் வைத்து கொண்டார்கள் .

தினமும் காலையில் நாம் இது போல் கொடி ஏற்றலாம் "என்றனர் தன் தோழர் தோழிகளிடம்.

மறு நாள் அதே போல் ஹரிஷ் ஜனனி இருவரும் தங்கள் நண்பர்களுடன் தேசிய கொடி ஏற்ற தயாராக, அவர்களின் தந்தையும் தாயும் அதை பார்த்து விட்டு

"டெய்லி எல்லாம் ஏற்ற கூடாது அதற்கென்று சம்பிரதாயங்கள் இருக்கு அதை ஒழுங்காக கடைபிடிக்கணும் நீங்க சின்ன பசங்க உங்களுக்கு தெரியாது சுதந்திர தினம், குடியரசு தினம் அன்னிக்கு மட்டும் நாம் கொடி ஏற்றினால் போதும் தினமும் ஏற்ற வேண்டாம் "என்றனர்

அதற்க்கு அவர்கள் முடியாது என்று மறுத்து " அப்பா அம்மா நீங்களெல்லாம் தீபாவளி பொங்கல் பண்டிகை அன்னிக்கு மட்டுமா சாமி கும்புடுறீங்க எல்லா நாளும் விளக்கேற்றி சாமி கும்பிடறீங்க இல்லியா ",
"அதே போல் தான் நாங்கள் நம் பாரத மாதாவுக்காக நம் நாட்டிற்க்காக தினமும் தேசிய கொடியேற்றி வணங்க போகிறோம்"
என்றவர்களை ஆச்சரியத்துடன் பார்த்த ஹரிஷ் ஜனனியின் தாய் தந்தை இருவரும் பெருமிதத்துடன் எழுந்து நின்று தங்கள் செல்வங்களை அன்பாய் அணைத்து அவர்கள் ஏற்றிய தேசிய கொடியை பார்த்து ஜெய் ஹிந்த் என்று உரக்க சொல்லி வணங்கினர்

அனைவருக்கும் குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்