பள்ளி பருவத்தில் கும்பகோணத்தில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள தியேட்டரில் நண்பர்கள் நாங்கள் மாலை வேளையில் சேர்வோம் .
அங்கே இருக்கும் டிக்கெட் கவுன்ட்டர் சுவர் மேல் அமர்ந்து பேசுவோம் ஏன் அங்கே அமர்கிறோம் என்றால் படம் ஓடும்போது படத்தின் ஒலி வெளியில் நன்றாக கேட்கும் வசனங்களை கேட்டு மகிழ்வோம் கூடவே பாடல் வரும் போது அதை கேட்டு எங்களுக்கு உற்சாகம் தொற்றிகொள்ளும்
வசன காட்சிகளை விட பாடல் காட்சி வரும் நேரத்தில் தவறாமல் வந்து விடுவோம் அங்கு வந்து அமர்ந்து பாடலை கேட்டு விட்டு செல்வோம் அப்படி நான் கேட்ட பாடல்களில் ஒன்று இதோ
இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசையில் என் மனம் கவர்ந்த அடுத்த பாடல் இது
மனம் கவர்ந்த பாடல்கள்
பூ விலங்கு படத்தில் இடம் பெற்ற
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு........
இந்த பாடல் படத்தில் இடம் பெறும் காட்சி என்னவென்றால் முரளியும்குயிலியும் (இருவரும் அறிமுகம்) வில்லன் ராதாரவியின் வீட்டில் பரணில் பதுங்கி இருப்பார்கள் ராதாரவி மனைவியுடன் உல்லாசமாய் இருப்பதை அவர்கள் காண நேர்ந்து இளமை தவிப்புடன் அவர்கள் இருக்கையில் வரும் பாடல் இது
இளையராஜா இந்த காதலர்களின் இளமை துள்ளலை தவிப்பை இந்த பாடலில் அள்ளி வழங்கியிருப்பார் அப்படியே நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருப்பார்
இந்த பாடலில் வரும் சில வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை வைரமுத்துவின் வைர வரிகளில் வரும் நெற்றி வேர்வை நனைச்சு போட்டு கொஞ்சம் அழியும் குங்குமத்து சிவப்பு வெட்கம் போல வழியும்......... எப்பொழுது கேட்டாலும் அந்த இளமை துடிப்பை உணர வைக்கும் இந்த பாடல்
பூ விலங்கு படத்தில் நான்கு பாடல்கள் அதில் இன்னொரு சூப்பர் ஹிட் பாடல் ஆத்தாடி பாவாடை காத்தாட .............
படம் பூ விலங்கு
நாயகன் நாயகி முரளி குயிலி
பாடல் வைரமுத்து
பாடல் பாடியவர்கள் K.J .ஜேசுதாஸ், S.ஜானகி
தயாரிப்பு கவிதாலயா
இயக்கம் அமீர்ஜான் (ரஜினியின் சிவா இயக்கம் இவர் தான் )
படம் வெளியான ஆண்டு 1984
பாடலின் வீடியோ லிங்க் முகவரி
http://www.google.co.in/url?sa=t&source=video&cd=6&ved=0CGEQtwIwBQ&url=http%3A%2F%2Fwww.in.com%2Fvideos%2Fwatchvideo-kannil-etho-5696940.html&ei=tSsGTfqcI4KzrAeNyOyQDw&usg=AFQjCNGHof7_BVyTL3-Q0sOM1DaReF9fLA&sig2=FvcVmANsYVYSy2V90ovXWw
ஆர்.வி.சரவணன்
thanks google you tube
பதிலளிநீக்குஅருமை நண்பரே எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் பணி
Arumaiyana padalin arimugam....
பதிலளிநீக்குraja endrum rajathaan....
என்னசார் நீங்க ராஜாசாரை விடுற மாதிரி இல்லை ;-) அருமையான பாடல்.
பதிலளிநீக்குஅருமையான பாடல் ...
பதிலளிநீக்குஎக்காலத்திலும் மறையா பாடல் .//
பகிர்வுக்கு மிக்க நன்றி
nice song.
பதிலளிநீக்குஇதுவரை இந்த பாடலை பார்த்ததில்லை... பார்த்திட்டு சொல்றேன்:)
பதிலளிநீக்குநல்ல பகிர்வுங்க சரவணன்..
பதிலளிநீக்குநன்றி குமார்
பதிலளிநீக்குநன்றி மாணவன்
நன்றி ஜீவதர்ஷன்
நன்றி அரசன்
நன்றி வானதி
நன்றி பிரியா
நன்றி இர்ஷாத்