படித்தது
பொன்னியின் செல்வனின் ரசிகன் நான் எத்தனைமுறை படித்தாலும் அலுக்காத கல்கி அவர்களின் இந்த கலை பொக்கிஷம் இப்போது நண்பர் வினோ அவர்களின் என்வழி தளத்தில் தொடராக வந்து கொண்டிருக்கிறது இது வரை படிக்காதவர்கள் படிக்கவும் படித்தவர்கள் மீண்டும் அந்த வரலாற்றில் பயணிக்கவும் ஒரு வாய்ப்புகேட்டது
நீடாமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் நான் நின்று கொண்டிருந்த போது பால்காரர் ஒருவர் டூ வீலரில் வந்தார் ரோடின் நடுவில் நின்று கொண்டிருந்த ஒருவரை பார்த்து அவர் சொன்னது
"தம்பி ரோடு உன்னுடையதாக இருக்கலாம் ஆனா வர்ற வண்டிங்க உன்னுடையதில்லை அதனாலே உன் நல்லதுக்கு சொல்றேன் ஓரமா நில்லுப்பா "
ஒரு வார்த்தைசொன்னாலும் சரியா தான் சொன்னாரு என்று நினைத்து கொண்டேன்
மகிழ்ந்தது (நெகிழ்ந்தது னும் சொல்லலாம்)
சென்ற வாரம் என் உறவினர் ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்கு A நெகடிவ் குரூப் ரத்தம் மூன்று பாட்டில் தேவைப்பட்டது
உறவினர்கள் நண்பர்கள் மூலமாகமுயன்றதில் மூவர் வந்திருந்து
ரத்த தானம் செய்தனர் அதில் ஒருவர் பெண்
ஒருவர் நேரமாகி விட்டபடியால் ஆட்டோ பிடித்து வந்து ரத்த தானம் அளித்தார்
அவர்கள் அனைவருக்கும் மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தோம்
இது சாதாரண ஒன்று எதற்கு நன்றி எல்லாம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு சென்றனர்
FINAL PUNCH
சுதந்திரம் தருபவர் முன் அடங்கி இரு
அடக்குபவர் முன் சுதந்திரமாய் இரு
நொந்தவன் வாழ்க்கையை படிப்பினையாக எடுத்துக் கொள்
காலெண்டரில் ( நாட் காட்டியில்) நான் ரசித்த சில வரிகள் இவை
ரத்த தானம் ஓர் உன்னத விஷயம்.
பதிலளிநீக்குஅவர்களுக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
பொன்னியின் செல்வன் நான் வெகுநாட்களாக படிக்க எண்ணி கொண்டிருக்கும் ஒரு புத்தகம்.
பதிலளிநீக்குநெகிழ்ந்ததை படித்தவுடன் தோன்றியது. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.
பன்ச்களும் அருமை.
வாழ்த்துக்கள் நண்பரே....
அனைத்தும் நல்லா(யிருக்கு); (சுவையா)யிருக்கு.
பதிலளிநீக்கு'நான் என்ன சொல்றென்னா?" என்கிற தலைப்பை
ஏன் இந்த இடுகைக்குப் போடவில்லை?
கலக்கல் ... தொகுத்த விதம் அருமைங்க
பதிலளிநீக்குநன்றி சரவணன்... 100 வது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு-வினோ
ஆடுகளம் படம்.. நானும் பார்த்தேன்.. சேவல் சண்டை விடும் போதெல்லாம்.. விருவிருப்பா இருந்தது..
பதிலளிநீக்குதனுஷ்.. நல்ல நடிப்பு தான்.. "யாத்தே யாத்தே..." எனக்கும் ரொம்ப பிடிச்ச பாடல்..
ரத்ததானம் செய்வது.. உயிர் காக்கும் விஷயம்.. நானும், முடியும் போது செய்கிறேன்.. அப்படி, செய்யும் போது மனதிற்கு வரும் நிம்மதி, மகிழ்ச்சிக்கு விலை இல்லை..
பொன்னியின் செல்வன்.. லிங்க் கொடுத்ததற்கு நன்றிங்க.. :-)
அருமையான தொகுப்பு....
பதிலளிநீக்குநன்றி மதுமிதா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்குநன்றி பாலா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நன்றி சங்கவி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்குநன்றி குமார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நன்றி நிஜாமுதீன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்குநன்றி அரசன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நன்றி வினோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நன்றி ஆனந்தி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்குநன்றி பிரஷாஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி