வியாழன், ஜூலை 15, 2010

சின்னஞ் சிறு உள்ளங்களே


சின்னஞ் சிறு உள்ளங்களே

ஜூலை 16 ,2004 கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நடந்தது. அந்த சின்ன சிறு உள்ளங்களுக்காக உலகமே கலங்கியது. என்னை இது மிகவும் பாதித்தது . என் அன்றாட வாழ்வில் நெருப்பு எப்பொழுது எனை தீண்டினாலும் எனக்கு அந்த சிறுவர் சிறுமியரின் ஞாபகம் வரும் என் கண்கள் கலங்கும்

இதோ அந்த பிஞ்சு உள்ளங்களுக்காக நான் எழுதியதை இந்த நினைவு நாளில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்


சீவி சிங்காரித்து வகுப்பறைக்கு சென்ற சின்ன சிட்டுகளே கருகி போய் வந்த மொட்டுக்களே

அறிவை தரும் கல்விச்சாலை உங்களுக்கு மட்டும் ஏன் யாகசாலையாய்

இரக்கமில்லா அக்னி உங்களை அரவணைத்தது எமது விழிகளை கண்ணீரில் நனைத்தது

ஈரமில்லா நெஞ்சமுள்ள வருணனும் மழையாய் உங்களை காக்கவில்லை பெற்றோரிடம் உங்களை மீட்டுத் தரவில்லை

உங்களை பொசுக்கிய தீ அணைந்து போனது இங்கு பெற்ற வயிறோடு பெறாத வயிறுகளும் தீ பற்றி கொண்டது

இறைவன் உங்களை தன்னருகே சேர்த்து கொண்டான் நாங்கள் துன்பத்தை வார்த்துக் கொண்டோம்

இப்போது இறைவனின் மடியில் நீங்கள் எப்போதும் உங்களின் நினைவில் நாங்கள்

ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

  1. //பெற்ற வயிறோடு பெறாத வயிறுகளும் தீ பற்றி கொண்டது //...உண்மைதான்.

    கண்களை கலங்கவைக்கும் வலியான வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  2. //ஈரமில்லா நெஞ்சமுள்ள வருணனும் மழையாய் உங்களை காக்கவில்லை பெற்றோரிடம் உங்களை மீட்டுத் தரவில்லை //

    துய‌ர‌ ச‌ம்ப‌வ‌ம்...

    பதிலளிநீக்கு
  3. நினைத்தாலே மனசு நடுங்குது

    பதிலளிநீக்கு
  4. பிஞ்சுகளின் ஆத்மாக்காக இறைஞ்சுகிறேன், எனது ஆழ்ந்த அஞ்சலிகள்

    பதிலளிநீக்கு
  5. //உங்களை பொசுக்கிய தீ அணைந்து போனது இங்கு பெற்ற வயிறோடு பெறாத வயிறுகளும் தீ பற்றி கொண்டது //

    ரொம்ப ரொம்ப மனத்தைக் கஷ்டப்படுத்திய நிகழ்வு.. :-((
    உங்க வரிகளில், உங்க மனக்கலக்கம் தெரிகிறது..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்