செவ்வாய், ஜூலை 13, 2010

தொலைக்.................................காட்சி


தொலைக்.................................காட்சி

டிவி பார்க்கும் போது எனக்கு தோன்றிய சில குட் கொஸ்டின் களுக்கு உங்கள் யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்


*இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று சொல்லி ஒரு புதிய படத்தை ஒளிபரப்புபவர்கள் ஏற்கனவே நிறைய முறை ஒளி பரப்பான படங்களை போடும் போது மட்டும் இத்தனையாவது முறையாக எங்கள் சானலில் ஒளி பரப்பாகிறது என்று ஏன் சொல்வதில்லை


*விளம்பரங்களுக்கு பிறகு நிகழ்ச்சி தொடரும் என்று இருக்கும் நிலை வருங்காலத்தில் விளம்பரங்களுக்கு பின் நேரமிருந்தால் நிகழ்ச்சி ஒளி பரப்பாகும் என்று சொல்லப்படுமோ


*ஒரு சேனல் ஒரு புதிய நிகழ்ச்சியை உருவாக்கி ஒளி பரப்பும் போது மற்ற சானல்களும் அதே போல் ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி அதே நேரத்தில் ஒளி பரப்பி நிகழ்ச்சி பார்க்கும் நம் சுவாரஸ்யத்தை அடியோடு குறைத்து விடுகிறார்களே ஏன்


*விடுமுறை நாட்களில் நல்ல படம் ஏதேனும் போடுவார்களா பார்க்கலாம் என்று நாம் ஆர்வமுடன் அமரும் போது நல்ல படங்கள் போடாமல் வேலை நாட்களில் நல்ல படங்களை போட்டு நம்மை வெறுப்பேற்றுவது ஏன்

ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

  1. அது தொலைக்காட்சிய‌ல்லா.... தொல்லைக்காட்சி... அத‌ன‌ல‌ தான்..

    பதிலளிநீக்கு
  2. எப்பொழுதும் "முதல்" க்கு ஒரு தனி சிற‌ப்பு இருக்கிறது அல்லவா... (இப்போ நான் முத‌லாவ‌தா வ‌ந்து க‌மெண்ட் எழுதுறேன் இல்ல‌, அது மாதிரி:)

    //நிறைய முறை ஒளி பரப்பான படங்களை போடும் போது மட்டும் இத்தனையாவது முறையாக //...ஒருவேளை நூறாவது முறை ஒளிப்பரப்பினால் சொல்வார்களோ என்னவோ:)

    பதிலளிநீக்கு
  3. டிவி பார்க்கும் போது
    கேள்வி எழும்பக் கூடாது
    என்பது பொது விதியாக்கும்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் சந்தேகங்களை முடிந்தால் கலாநிதிமாறனுக்கு தெரிவித்து விடுகின்றேன், அதுவும் குறிப்பாக மூன்றாவது கேள்வியை :-)

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஸ்டீபன்
    நன்றி பிரியா
    நன்றி தேவதர்ஷன்
    நன்றி madhumita

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்