வியாழன், மார்ச் 27, 2014

இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு




இளமை எழுதும் கவிதை நீ.... 
நூல் வெளியீட்டு விழா  நிகழ்ச்சி தொகுப்பு 


குடந்தையூர் தளம் தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடம் ஆரம்பித்து விட்டது.நான் இதை தொடங்கிய போது கண்டிப்பாக சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஆரம்பித்தேன். என் தளத்தில் நான் எழுதிய தொடர்கதை  இதோ  புத்தகமாக அச்சில் வந்து விட்டது. இந்த விழா பற்றிய அனுபவ குறிப்புகள் எழுத வேண்டும் என்று  நினைத்தாலும்
தொடர்ந்து அதை பற்றியே எழுதி சலிப்படைய வைக்க வேண்டாம் என்று எழுதாமல் விட்டு விட்டேன். இணைய நண்பர்கள் சிலர் விழா பற்றி ஒரு பதிவு தரலாமே வராதவர்கள் படிக்கவும் வந்தவர்கள் சுவாரஸ்யத்துடன் ரிபீட் செய்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்குமே என்று சொன்னார்கள். விழாவின் வீடியோ எனக்கு சமீபத்தில் தான் என் மாமா வீட்டிலிருந்து வந்து சேர்ந்தது. அதை பார்த்த போது, கலந்து கொண்டவர்களுக்கு நன்றி என்று ஒற்றை சொல்லில் சொல்வதை விட அவர்களின் பங்கை இங்கே அழகாக பதிவு செய்யலாமே என்று தோன்றியது இதோ பதிவிட்டு விட்டேன்

விழா 5 மணிக்கு என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா முதல் நாள் 5 மணிக்கே இறக்கை கட்டி கொண்டது  மனசு. இரவு முழுக்க தூக்கமில்லை காரணம் உள்ளுக்குள் உற்சாகம் தான். மறு நாள் காலை ஊரிலிருந்து என் அம்மா,மனைவி,பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் வந்து விட்டார்கள் என் தம்பி என்னை விட அதிக உற்சாகமாய் இருந்தான் .விழாவை இன்னும் சிறப்பாக்கி விட வேண்டும் என்ற வேகம் அவனிடம் மட்டுமல்லாது என் குடும்பத்தாரிடமும் இருந்தது. 

ஊரிலிருந்து என் தாய் மாமா (வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார்) மற்றும்  என் தங்கை கணவர் (அரசு துறை) நேராக டிஸ்கவரி புக் பேலஸ்க்கே  வந்து விட்டனர்.என் தம்பி எனக்கு முன்னமே விழா ஏற்பாடுகளை கவனிக்க அங்கு சென்று விட்டான் 

நானும் அரசனும் செல் போனிலேயே பேசி கொண்டு விழா ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்தோம் 

எனது அலுவலக நண்பர் தேவராஜ் விழாவுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு வரும் பொறுப்பை ஏற்றிருந்தவர் தான் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார் 

நான் புத்தக அரங்கம் சென்று சேரும் போது மணி 3.30.  என் மாமா,மற்றும் தங்கை கணவரை வரவேற்ற போது தான் கவனித்தேன் பக்கத்தில் உள்ள டீ ஸ்டாலில் பதிவுலக நண்பர்கள் வந்திருந்ததை கண்டு அருகில் சென்றேன். பாலகணேஷ்,சீனு,அரசன்,கோவை ஆவி, ஸ்கூல் பையன் 
வந்து விட்டிருந்ததை பார்த்து வரவேற்றேன். 

 எல்லோரும் உள்ளே நுழையும் போது என் தங்கை மகள் வைஷாலி ஆர்வத்தில் ஒரு பேனரை ரெடி செய்து அரங்க வாசலில் வைக்க வேண்டும் என்ற   அன்பு  கட்டளையுடன்அனுப்பியிருந்தார்.நான் ரொம்ப அலட்டி கொள்வதாக  நினைத்து விட போகிறார்கள் என்று என் தம்பியுடன் நான் சொன்ன போது, பாலகணேஷ் சீனு பார்த்து விட்டு நன்றக இருக்கிறது பேனர் கட்ட சொல்லு. அந்த பெண்ணை பாராட்ட வேண்டும் என்று சொன்னார்கள் (சீனு நன்றியுரையில் இதை குறிப்பிட்டு சொன்னார் )




எனது முக நூல் நண்பரும் ரஜினி ரசிகருமான நண்பர் ஆனந்த்
குமாரிடம் அரங்க மேடையில் வைப்பதற்காக. பேனர் டிசைன் செய்ய சொல்லியிருந்தேன்.(டிசைனிங்கில் பணிபுரிகிறார்) அவரும்  ஆர்வமாய் உருவாக்கி கொண்டு வந்திருந்தார்.




4.30 மணி இருக்கும் என் தம்பி போனில் கீழே வா என்று அவசரமாய்  குரல் கொடுத்தான்.மேலும்  சார் வந்து விட்டார் என்று எல்லோரும் என்னை நோக்கி பரபரப்பாய் வந்தார்கள். நான் படிகளை இரண்டிரண்டாக கடந்ததாய் நினைவு. காரிலிருந்து இறங்கினார் இந்த விழாவின் நாயகன் முனைவர் கவிஞர்  திரு. நா.முத்துக்குமார் அவர்கள்.கூடவே நண்பர் சங்கரும் (என்வழி ,ஒன் இந்தியா .காம் ) முத்துக்குமார் அவர்கள் தன் மகனை அழைத்து கொண்டு வந்திருந்தார்.கை கொடுத்து வரவேற்ற என்னை சிநேகமாய் புன்னகைத்து சங்கருடன் உள்ளே நுழைந்தார்.  

மற்றவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் . வந்த உடன் ஆரம்பித்து விடலாம் என்று நான் தகவல் சொல்ல, கவிஞர் அதனாலென்ன  பரவாயில்லை 
என்று கூறி விட்டு புத்தகங்களை புரட்ட ஆரம்பித்தார்.அங்கே
 வந்திருந்தவர்கள் ஆர்வமாய் பேச வர அவர்களுடன் உரையாட
 ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரத்தில் திருமதி சந்திரா.தங்கராஜ் மற்றும் அவர் கணவர் நண்பர் திரு. வி.கே.சுந்தர் வர வரவேற்றோம். அரங்க மேடையின் இருக்கைகளில் அமர வைத்தோம் 

 


விழா தொடங்கியது 

நண்பர் சுரேகா இனிய மாலையில் பல்வேறு அலுவல்களுக்கு இடையில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ளும் இவ் விழா தங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று தொடக்கத்திலேயே தன் காந்த குரலால்
சொல்லி அனைவரையும் விழா நிகழ்ச்சிகளுக்கு ஈர்த்தார் 

அரசன் எல்லோரையும் வரவேற்று பேசினார் (கோவை ஆவி நன்றியுரைக்கும் போது அரசனை தான் எல்லோரும் வரவேற்பார்கள் இங்கே அரசனே வரவேற்பாளர் என்று குறிப்பிட்டார் )





அடுத்து புத்தகம் வெளியிடப்பட்டது நான் கொஞ்சம் தள்ளி நின்றிருந்தேன்.முத்துக்குமார் என்னை கை பற்றி அருகே இழுத்து தன்னருகே நிறுத்தி கொண்டார். புத்தகத்தை அவர் வெளியிட  திருமதி. சந்திரா தங்கராஜ் அவர்கள் பெற்று கொண்டார் 


பின்  முன்னிலை வகித்த சங்கர் பேச அழைக்கப்பட, அவர்  பேசும் 
போது சரவணன் வேகமான மனிதர். தொடர்கதை ஆரம்பித்திருப்பதை என்னிடம் சொன்னவர் ஐந்து மாதங்களுக்கு பிறகு புத்தகம் ரெடி வெளியிடலாமா என்று கேட்டார். சினிமா திரைக்கதை போல் எழுதப்பட்ட 
இது படமாகும் வாய்ப்பிருக்கிறது தொடர்ந்து இது  போல் எழுத வாழ்த்துக்கள் என்று உற்சாகமாய் சொன்னார்  

(நண்பர் சங்கரை  இந்த விழா தொடர்பாக முப்பது தடவையாவது போன் செய்து பேசியிருப்பேன்.அவர் சலிப்படையாமல்  அக்கறையுடன்  விழா பற்றி ஆலோசனை தந்து எல்லோரிடமும் அழைத்து சென்று அறிமுகபடுத்தி விழாவில் என் வேண்டுகோளுக்கு ஏற்ப முன்னிலை ஏற்று  சிறப்பித்தார்.




அடுத்து பேசிய பாலகணேஷ்  தான் படிக்கும் கதைகளை சினிமா காட்சி போல் கற்பனை செய்வதுண்டு என்றும் இந்த நாவல் என் கற்பனைக்கு இடம் வைக்காமல் சினிமா காட்சிகளாக  இருக்கும் விதம் பற்றி சொன்னதுடன்,
 கதையில் வரும் பயோடேட்டா பாலு குறிப்பிடும் வசனங்களை பற்றி குறிப்பிட்டார். இதில் உள்ள குறைகளை தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கிறேன் என்றும் இந்த மரம் பெரிதாக வர போகிறது 
என்பது இந்த விதையிலேயே தெரிகிறது என்று குறிப்பிட்டு வாழ்த்தினார் 






தொடர்ந்த நிகழ்ச்சிகள் நாளைய பதிவில் 


அன்புடன் 

ஆர்.வி.சரவணன் 






26 கருத்துகள்:

  1. தங்கு தடையில்லாத எழுத்து! விழாவுக்கு வருகை தராதவர்கள் விழா நிகழ்வை உணரும்படி அழகாகச் சொல்லிருக்கீங்க சரவணன். தொடருங்கள்...!

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு நிகழ்வையும் நன்றாக சொல்லி உள்ளீர்கள்... மேலே வாத்தியார் சொன்னது சரி...

    வைஷாலி அவர்களுக்கும் பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் ஒருமுறை விழாவில் பங்கேற்ற அனுபவம் கிடைத்தது.. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்..

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் சரவணன்

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் சரவணன். விழாவிற்கு வரமுடியாத என் போன்றவர்களுக்கு இங்கே படிக்கும் வசதி....

    பதிலளிநீக்கு
  6. அரசன் பேசினார் என்பது தவறு உளறினார் என்பது தான் சரி.... சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழா முடிய போகும் நேரத்தில் நான் பேசும் போதே தடுமாறினேன். ஆரம்பத்திலேயே பேசுவதால் கொஞ்சம் பதட்டம் இருக்க தான் செய்யும் அரசன் கோவை ஆவி சொன்னது போல் அரசனை தான் எல்லோரும் வரவேற்பார்கள் இங்கே அரசனே வரவேற்றது ஆச்சரியம் தானே

      நீக்கு
  7. நிகழ்வுகளை மிகவும் அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள் அண்ணா....
    விழாவில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் விழாவில் இருந்தது போல் ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்தது... பாராட்டுக்கள் அண்ணா....

    குறிப்பாக மருமகள் வைஷாலிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அப்பாவின் வளர்ச்சியில் பெருமைப்படும் மகளைப் பெற்றதற்கு நீங்க கொடுத்து வச்சிருக்கனும் சகோ! வாழ்த்துகள்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்திற்கு நன்றி சகோதரி.அவர் எனது தங்கை மகள் எனக்கு (மறு)மகள்

      நீக்கு
  9. வாழ்த்துக்கள் சார்! இந்த புத்தகத்தை புத்தகச் சந்தையில் வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்! அருமையான நாவல்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. இந்தப்பதிவை முன்பே வெளியிட்டிருக்கலாமே சார், இருந்தாலும் மீண்டும் புத்தக வெளியீட்டுக்கு வந்த உணர்வு... அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து அதை பற்றியே பதிவுகள் வருவது சலிப்படைய வைக்கும் என்பதால் எழுதவில்லை.நன்றி சரவணன்

      நீக்கு
  11. வாழ்த்துக்கள் அண்ணா...

    நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்துள்ளீர்கள்...

    தொடர்ந்து விழா பற்றி பதிவிடுங்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  12. நன்றாக எழுதுகிறீர்கள் தம்பி! விரைந்து முன்னுக்கு வருவீர்கள்!

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள் சரவணன், தொகுப்பு அருமை..

    பதிலளிநீக்கு
  14. விழாவிற்கு வந்திருந்த உணர்வை தந்தது.. ஒவ்வொரு காட்சியாக உங்கள் கதைப்படிப்பார்த்தால் சினிமா பார்ப்பது போல . என்ன வர இயலாமை குறித்து தான் வருத்தப்படுகிறேன். அதனால் என்ன அடுத்த விழாவிற்கு கண்டிப்பாக வந்து விடுவோம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. சரவணன் வேகமான மனிதர் இல்லை.. அவர் சூப்பர் பாஸ்ட் :-)

    வைஷாலி உங்கள் மீது வைத்து இருக்கும் அன்பு உண்மையில் நெகிழவைத்து விட்டது. இது போல எல்லாம் யாருங்க இப்ப நினைக்குறா!

    நன்கு நினைவு வைத்து எழுதி இருக்கீங்க.. எனக்கெல்லாம் உடனே மறந்து விடும் :-)

    பதிலளிநீக்கு
  16. நிகழ்வுகளை மிகவும் அழகாக தொகுத்து தந்திருக்கிறீர்கள்.... வாழ்த்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்