வெற்றிக்கோட்டில் மோகன்குமார்
இணைய நண்பர் மோகன்குமார் (என் ஊர்க்காரர்). அவரது வீடு திரும்பல்
தளம் நான் விரும்பி படிக்கும் தளங்களில் ஒன்று. தினமும் அவர் பதிவு
எழுதிவதை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
http://veeduthirumbal.blogspot.com/2013/12/2.html
வலைதளபதிவர்களின் முதல் திருவிழாவில் தான் இருவரும் சந்தித்து பேசினோம். இரண்டாவது திருவிழாவில் அவர் எழுதிய வெற்றிக்கோடு நூல் (சுய முன்னேற்ற கட்டுரைகள்) வெளியானது. அவருக்கு வாழ்த்து சொன்னேன்.புத்தகம் வாங்கியதும் உடனே படித்தும் விட்டேன்.பதிவு எழுதுவதில் தான் தாமதமாகி விட்டது.
நான் இந்த புத்தகத்தை வாங்கியவுடன் படிப்பதற்காக ரயிலில் கொண்டு சென்ற போது எங்களுடன் தொடர்ந்து ரயிலில் வரும் முதியவர் ஒருவர் படிப்பதற்கு கேட்டார். கொடுத்தேன். இருந்தும் வார இதழ் என்றால்
பரவாயில்லை. இது கட்டுரை தொகுப்பு. 45 நிமிடத்தில் அவர் என்ன படித்து விட முடியும் என்ற எண்ணம் எனக்கு. ரயில் சென்று சென்டரல் அடையும் போது அவர் புத்தகத்தை திருப்பி கொடுத்ததோடு மட்டும் இருந்திருந்தால் இங்கே அதை குறிப்பிட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அப்படி அவர் என்ன சொன்னார் இந்த பதிவின் கடைசியில் பார்க்கலாமே
மோகன் குமார் புத்தகத்தை பற்றி பார்க்கலாம்
ஒரு நல்ல ஐடியா கிடைப்பதே கஷ்டம் அதனை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டியது அந்த ஐடியா ஓனர் பொறுப்பு
காலையில் விரைவாக எழும் பறவைக்கு தான் நிறைய இறை கிடைக்கிறது ஒரு முயற்சியை பிறர் துவங்கும் முன் ஆரம்பித்தவர்கள் முன்னணியில் இருப்பார்கள்
ஒரு விசயத்தை சரியாக செய்து முடிப்பது தான் நம் வேலை.நமக்கு பிடித்தமான ரிசல்ட் வந்தால் அது ஒரு போனஸ் என்று எடுத்து கொள்ள வேண்டும்
கோபம் சங்கிலி தொடர் போல் அடுத்தவரையும் தொற்றி சென்று கொண்டே இருக்கும்.ஆனால் யாரேனும் ஒருவர் அதனை அப்படியே விழுங்க தான் வேண்டும்
பிறரின் வெற்றியில் நீங்களும் மகிழுங்கள்.பிறர் முன்னேற்றத்தில் நீங்களும் பங்கு பெறுங்கள்.உங்கள் முன்னேற்றம் இயல்பாய் நடக்கும்
எல்லோருக்கும் தர என்ன உண்டு என்னிடம் புன்னகையை தவிர
வாழ்க்கை என்ற நெடுந்தூர பயணத்தில் நமு முன் வரபோவது நம் குடும்பத்தார் மட்டுமே.உங்கள் இலக்கை உங்கள் குடும்பத்தாரும் அறிந்தால் நல்ல இலக்காய் இருக்கும் பட்சத்தில் அதன் சுமையை அவர்களும் சேர்ந்தே சுமக்க உங்கள் பாரமும் வலியும் குறையும்.இலக்கை அடைவது இன்னும் எளிதாகும்
கடவுளாலும் முடியாத ஒன்று உண்டு .
நடந்ததை மாற்ற அவராலும் முடியாது
சும்மா இருக்கும் மனம் சாத்தானின் இருப்பிடம். அதை சும்மா விட்டால் உங்களுக்கு செமையாய் வேலை வைத்து விடும்.அதனை உங்கள் வேலையாள் போல் நினைத்து நல்ல வேலைகள் தந்து கொண்டே இருக்க வேண்டும்
ஒரு வேலையை துவங்கும் வரை தான் தயக்கம்/ பிரச்னை.துவங்கிய பின்
அந்த வேலையே அதற்கு தேவையான வேலையை வாங்கி கொள்ளும்
பாராட்டி வளர்க்கப்படும் குழந்தை தன்னம்பிக்கையுடன் வளர்கிறது.திட்டி குறை சொல்லி ஒப்பீடு செய்து வளர்க்கப்படும் குழந்தை தாழ்வு மனப்பான்மையை பெறுகிறது
வாழ்க்கையென்ற வழுக்குப்பாறையில் ஏறும் போது கால்களை நன்றாக ஊன்றி, நம்மை கீழே தள்ள தயாராக உள்ள காரணிகளை புறந்தள்ளி விட்டு மேலேறுவோம்.
நான் இந்த புத்தகத்தை படிக்கும் போது பேனாவால் அடிக்கோடிட்டதில்
சிலவற்றை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன்.நம்மிடமுள்ள செயல்பாடுகளில் இருக்கும் தவறுகளையும் அதை களையும்
விதத்தையும், பின் பற்ற வேண்டிய நல்ல தன்மைகளையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் இதில் குறிப்பிட்டிருக்கிறார்
தன் அனுபவங்களுடன் சேர்த்து மிக எளிமையாய்
புத்தகத்தை இன்னும் கவனமெடுத்து சிறப்பாக செய்திருக்கலாம்.
சில வரிகளை நீக்கி கட்டுரையை இன்னும் நச்சென்று அமைத்திருக்கலாம் என்றெல்லாம் குறிப்பிடுவதை விட ,
இப்போது ரயிலில் அந்த முதியவர் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம். "நான் ஒரு அத்தியாயம் படிச்சேன் நல்லாருக்கு அந்த அத்தியாயம்
எனக்கு பொருந்துகிறது. எனக்கு நடந்தது" என்றார். நானும் ஆர்வமாய்
உடனே புத்தகத்தை புரட்டினேன். நீ கோபப்பட்டால் நானும் என்ற
அத்தியாயம் தான் அது.
சுஜாதாவின் மத்யமர் சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் மோகன்குமார்
எழுதிய விமர்சன கருத்து இடம் பெற்றிருக்கிறது.இப்போது தன் எழுத்தில் உருவான புத்தகம் வெளியிடும் அளவுக்கு உயர்ந்து வந்திருக்கிறார். இது
ஏதோ தற்செயலானது என்று நான் நினைக்கவில்லை.இல்லாமற் போகுமா சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு என்ற அவரது தளத்தின் கேப்சர் வரிகளின் தன்னம்பிக்கையோடு அவர் உழைத்திருப்பதையே இது காட்டுகிறது. வாழ்த்துக்கள் மோகன் சார்
FINAL PUNCH
இந்த பதிவுக்கு நான் தந்திருக்கும் தலைப்பு இரு வேறு
பொருள்களை தருகிறது.
ஒன்று : வெற்றிக்கோட்டில் (என்ன சொல்லியிருக்கிறார்) மோகன்குமார்
மற்றொன்று: வெற்றிக்கோட்டில் (நிற்கிறார்) மோகன்குமார்
ஆர் வி.சரவணன்
வெற்றிக் கோட்டைத் தா....ண்டி விட்டார் மோகன்குமார்.
பதிலளிநீக்குவிமர்சனம் நன்று... FINAL PUNCH - இது தான் PUNCH...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
சுருக்கமான நூல் விமர்சனம்
பதிலளிநீக்குவித்தியாசமான அருமையான விமர்சனம்
பதிலளிநீக்குபகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
அருமையான விமர்சனம் நன்றி
பதிலளிநீக்குமோகன் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நல்ல விமர்சனம்...
பதிலளிநீக்குமோகன் குமார் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_22.html சென்று பார்க்கவும்... நன்றி...