புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-2
(சனிசிக்னாபூர்,ஷிர்டி )
சனி சிக்நாபூரில் நாங்கள் அதிகாலை 4 மணிக்கு,காரை விட்டு
இறங்கி ரிலாக்ஸ் செய்து கொள்ள கூட நேரமின்றி உடனே குளிக்க கிளம்பினோம்.கோவில் அருகிலேயே இருந்த மிக பெரிய
காம்பௌண்டில் தான் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நிறைய கடைகளும் இருந்தன. அங்கிருந்த கடைகளில் எதிலும் கதவுகள்
இல்லாமல் இருந்தது . அங்கே ஒரு பக்கத்தில் கட்டபட்டிருந்த பாத்ரூம்களில் கூட கதவுகள் இல்லை. இது ஆச்சரியத்தை கொடுத்தது.கேட்டதற்கு இந்த ஊரில் அப்படி தான். வீடுகளில் கூட கதவு கிடையாதாம். திருட்டு நடக்காது என்றும் மீறி திருடினாலும் எல்லை தாண்டுவதற்குள் சனி பகவானின் தண்டனை கிடைத்து விடும் எனவே திருட்டு பயம் இல்லை என்பதால் கதவு கிடையாது என்றனர் இது பற்றி நான் ஏற்கனவே கேள்விபட்டிருந்தாலும் நேரில் பார்க்கையில் ஆச்சரியம் இருக்க தான் செய்தது
நாங்கள் குளித்து முடித்து கோவிலுக்கு கிளம்பினோம். கடையில் அர்ச்சனைக்கு என்று தட்டு வாங்கினோம். உள்ளே நிறைய பொருள்கள் இருந்தது. மேலும் 50 ரூபாயில் ஒரு தட்டும் 150 ரூபாயில் ஒரு தட்டும் இருந்தது. கேட்டதற்கு மூன்று முறை வந்து அர்ச்சனை செய்ய 50 ரூபாய் தட்டு என்றும் (பரிகாரம்) ஒரு முறை அர்ச்சனை தட்டு 150 ரூபாய் என்றும் சொன்னார்கள். நாங்கள் 150 ரூபாய் தட்டு வாங்கி கொண்டோம்
கடைக்கார பையன் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்தோம்.
சிதறு தேங்காய் உடைப்பதில் இருந்து சூடம் ஏற்றுவது வரை அத்தனையும் அவர் சொன்ன படியே செய்தோம். நாங்கள் கோவிலுக்குள் நுழைந்தது 5 மணி என்பதால் கூட்டமில்லை. உடனே சன்னதி சென்று விட்டோம் திறந்த வெளி இடத்தில ஒரு பெரிய கல் மிக பெரிய மேடை மேல் இருக்கிறது. அது அலங்கரிக்கப்பட்டு வைக்கபட்டிருந்தது. படிகள் வைத்திருந்தார்கள். எதிரே ஒரு மேடை அதில் அமர்ந்து கொண்டு சாமியை பார்க்கலாம். தியானம் செய்யலாம்
இணையத்தில் எடுத்த படம்
அந்த அதிகாலை வேளையில் அந்த தரிசனம் மனதிற்கு புத்துணர்வை
தந்தது.பாலிமர் டிவியில் சனி பகவான் மகிமை என்ற புராண தொடர் வந்த போது அதில் இந்த இடத்தை காட்டுவார்கள்.(செட்டிங் தான் ) இந்த ஊரை பற்றியம் சொல்லியிருப்பார்கள். இந்த இடத்திற்கு எல்லாம் எப்போது
போக போகிறோம் என்று அப்போது நினைத்தது இப்போது நிறைவேறியதில்
ஒரு மன நிறைவு வந்தது.
கிளம்பினோம்.இருட்டு விலகும் முன்பே நாங்கள் அங்கிருந்து
கிளம்பி விட்டோம்.
அங்கிருந்து 80 கிலோ மீட்டரில் ஷிர்டி. அந்த புண்ணிய தலத்தை
நோக்கி பயணமானோம்.வருகின்ற இடங்களை ஊர் பெயர்களை பார்க்கலாம் என்று நினைத்தும் முடியாமல் தூக்கத்தை தொடர்ந்தோம். இங்கே ஒன்று சொல்லியாக வேண்டும். முதல் பதிவில் டிரைவர் தவிர எல்லோரும் தூங்கி விட்டோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.அதற்கு ஸ்ரீனிவாசன் நான் தூங்கலை ப்பா டிரைவருக்கு துணையாக பேசி கொண்டு வந்தேன் நீ தூங்கிட்டேன்னு எழுதிட்டியே என்றார் சிரித்து கொண்டே. சரி சார் நீங்க தூங்கலை நம்பிட்டோம்.(இதோ எழுதி விட்டேன் )
நாங்கள் ஷீரடிஎன்ற அந்த புண்ணிய பூமியில் வந்து இறங்கிய போது
காலை 8 மணி.கேமரா அனுமதியில்லை என்பதால் காரிலேயே வைத்து விட்டு சென்றோம் கோவிலில் நுழைந்து வரிசையில் நின்றோம்.அன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் மற்ற நாட்களை விடவும் அதிக கூட்டம் இருந்தது. ஒரு மணி நேரத்தில் சாய்பாபா தரிசனம் கிடைத்தது. திருப்பதி போல் இங்கேயும் நிற்க விடவில்லை உடனே வெளியேற்றி கொண்டிருந்தார்கள்.(கூட்டத்தின் காரணமாக )
இணையத்தில் எடுத்த படம்
பிச்சு அய்யருடன் வைத்யா
கோவிலின் முன் நின்று நண்பர்கள் போட்டோ எடுத்து கொண்டோம்.
கோவில் முகப்பில் முரளி வைத்யா
அணுக நான் யோசிக்கும் போதே அவர் அதே எண்ணத்துடன் என்னிடம் கேட்டார். அவர் நண்பர்களை வைத்து அவர் கேமராவில் படம் எடுத்து
கொடுத்தேன். என்னை அவர் படம் எடுத்து கொடுத்தார். நான் எதிர்பார்த்த அளவு படம் சரியாக இல்லை என்பதால் மீண்டும் எடுக்க சொன்னேன்.
கோவில் முன் நான்
அங்கிருந்து கிளம்பி நாங்கள் சென்றது 80 கிலோ மீட்டர் தொலைவில்
உள்ள நாசிக். கிளம்பிய போது ஒரு இடத்தில வெங்காயம் விற்று கொண்டிருந்தார்கள்.ஆர்வமுடன் இறங்கி விலை விசாரித்தார்கள் நண்பர்கள் 12 கிலோ மூட்டை 750 ரூபாய் ஆனால் அதை வாங்காமல் பக்கத்தில் இருந்த கொய்யாபழம் வாங்கி கொண்டு வந்தார்கள். மலைகள் சூழ்ந்த இடம் என்பதால்வழியெங்கும் மேடு பள்ளம் என்று சாலைகள்.
ஏறி இறங்கின.அந்த பகல் வேளையில் இயற்கையின் அழகை
ரசித்து கொண்டே நிற்க வேண்டும் போல் இருந்தது. நான் போட்டோ எடுக்கலாம் என்று டிரைவரிடம் வண்டியை நிறுத்த சொன்னேன். வண்டி நிறுத்த தோதுவாக இடமில்லை.மேலும் பின்னால் தொடர்ந்து வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. எனவே வண்டியை நிறுத்த முடியவில்லை. ஆகவே வண்டி செல்லும் போதே காமெராவை கிளிக்கினேன். பல க்ளிக்குகளில் ஒரு க்ளிக் இங்கே
காரிலிருந்த படி ஒரு க்ளிக்
வனவாசம் செய்ய இங்கு வந்து தான் வசித்தார்கள் என்றும்
அவர்கள் வசித்த குடில்கள் அங்கு இருக்கின்றன என்பதை
கேள்விப்பட்டவுடன் மிகுந்த ஆர்வமானேன்.
அதை அடுத்த பதிவில் பார்க்கலாம். (இந்த படம் நாசிக்கில்
எடுத்தது தான்)
ஆர்.வி.சரவணன்
கதவே இல்லாத கடைகள், வீடுகள்
பதிலளிநீக்குவிந்தையாக இருக்கிறது நண்பரே
இந்தியாவில் இப்படியும் ஒரு ஊரா
ஆச்சரியம் தான் சார் அது வீடுகளில் கதவுகள் இல்லாமல் திரை சீலைகள் தான் இருக்கின்றன என்று ஸ்ரீனிவாசன் சொன்னார் தங்கள் வருகைக்கு நன்றி
நீக்குஇனிய பயணப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி
நீக்குஅருமையான படங்களுடன் அழகான புனிதப் பயணக்கட்டுரை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சார்
நீக்குஉங்கள் பயண அனுபவத்தை அழகாக படத்துடன் சொல்லியுள்ளிர்கள் ... நன்றி
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி ராஜா
நீக்குசுவாரஸ்யமாக இருக்கிறது பயண அனுபவம்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சுரேஷ் சார்
நீக்குபடங்களும் இனிய பயணம் அருமை... வாழ்த்துக்கள் சார்...
பதிலளிநீக்குபஸ்ஸில் நண்பர் தூங்கினாரா இல்லையா என்பது அவர் சொன்னால்தான் தெரியும், நம்பித்தான் ஆக வேண்டும், ஹா ஹா... மூன்று தலைமுறைகளாக ஹோட்டல் நடத்தும் பாலக்காடு ஐயர், போட்டோக்கள் என பதிவு சுவாரஸ்யம்....
பதிலளிநீக்குஇனிய பயணத்தை விவரிக்கும் விதம் சிறப்பு!.
பதிலளிநீக்குஉங்களுடன் நானும் பயணம் செய்தது போல இருக்கின்றது.
பயணக் கட்டுரையை,
பதிலளிநீக்குகோர்வையாகவும் சுவைகுன்றாமலும்
தந்துள்ளீர்கள், நன்று!
சுவையான பகிர்வு.. தொடர்ந்து எழுதுங்கள் வருகிறோம்!!
பதிலளிநீக்கு+1
பதிலளிநீக்குஇனிய பயணப் பகிர்வு...
பதிலளிநீக்குதொடருங்கள் அண்ணா...
அங்குள்ள கடைகளில், பாத்ரூம்களில், வீடுகளில் கதவுகள் இல்லையென்பது ஆச்சரியமான விஷயம்தான். அதற்காக பாத்ரூம்களில் கூட கதவு வேண்டாம் என்ற நம்பிக்கை ... சாரி! .. கொஞ்சம் ஓவர்தான்!
பதிலளிநீக்கு