என் சமையலறையில்....
நம்ம இணைய நண்பர்கள் சுடுதண்ணி வைப்பது எப்படி, அடுப்பு பற்ற வைப்பது எப்படி,அவித்த முட்டை சமைப்பது எப்படின்னு அசத்தறாங்க. நாம சும்மா இருந்தால் எப்படி. அதான் நான் சமைக்கிற அழகை நீங்க தெரிஞ்சிக்க ஒரு பதிவா போட்டிருக்கேன்
பேச்சிலர் லைப் ல எவ்வளவோ அட்ராசிட்டி இருக்குங்க. அதுல கிச்சன் னு ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கு பாருங்க. அங்கே ஒரு மணி நேரம் செலவு பண்ணாதவங்க அன்னைக்கு முழுக்க சாப்பாட்டுக்கு லோல் பட்டே ஆகணும் என்பது விதி . அந்த ஒரு மணி நேர கிச்சன் கலாட்டாக்களை பற்றி தான் நாம இப்ப சமைக்க போறோம் சீ பார்க்க போறோம்.எனக்கு கிடைச்ச
அனுபவத்துக்கு கிச்சன்க்கு வாய் இருந்தாலே சிரிச்சிடும். நீங்க சிரிக்க மாட்டீங்களா என்ன ?
அனுபவத்துக்கு கிச்சன்க்கு வாய் இருந்தாலே சிரிச்சிடும். நீங்க சிரிக்க மாட்டீங்களா என்ன ?
நைட் படுக்கிறப்ப, நாளைக்கு என்ன சமைக்கலாம் னு மனசுக்குள்ளேயே கணக்கு போட்டுட்டு படுப்பேன். அந்த ஓபனிங் எல்லாம் நல்லா தான் இருக்கும்.ஒரு ஸ்பூன் அளவு உதாரணம் சொல்லணும்னா, ஒரு நாள் சுண்டல் செய்யலாம் னு கொண்டக்கடலை முதல் நாள் இரவே ஊற வச்சிட்டு வந்து படுத்தேன். அடுத்த நாள் காலையிலே போய் பார்த்தா ஊறவே இல்லை பாத்திரத்தில் போட்டது போட்ட படியே இருக்கு. எப்படி ஊறும். நான் தான் தண்ணீர் ஊற்ற மறந்துட்டேனே.
தண்ணின்னு சொன்னவுடன் தான் ஞாபகம் வருது.ஒரு நாள் கிச்சன் மேடைல இருந்த அரிசி பாத்திரத்தில் தண்ணீர் ஊத்தறதுக்கு பதிலா எரிஞ்சிட்டிருக்கிற அடுப்பில் ஊற்ற போயிட்டேன்.இன்னொரு நாள், நைட் செம பசியோட வந்து சமைக்கலாம் னு எண்ணெய் சட்டியை கழுவிட்டு அவசரத்தில் அப்படியே அடுப்பில் வச்சிட்டேன் தண்ணீர் பட்டு அடுப்பு அணைஞ்சுடுச்சு. காஸ் ஸ்டவ்வை துடைச்சு எரிய வைக்க முயற்சி பண்ணி பார்க்கிறேன் முடியல.வேற வழியில்லாம பசி என் வயிற்றை கிள்ள, பசியை நான் கிள்ள இப்படியே இரவு கழிஞ்சது
எனக்கு குக்கர்ல வைக்கிற சாதம் பிடிக்காது. அதனாலே பழைய கால முறைப்படி சாதம் கொதிக்க வச்சி தான் வடிப்பேன்.சாதம் சரியான பதத்திற்கு வந்துருச்சானு பார்க்கிறதுக்கு ஒரு சோறு பதம் எடுத்து பார்ப்பாங்க இல்லீங்களா. நான் டைரெக்டா வாயில போட்டே பார்த்துட்டேன். நாக்குல சூடு போட்ட மாதிரி ஆகி போச்சு. பாத்திரத்தை எடுத்து வடிக்க போறப்ப நான் ஒரு கத களி ஆட்டமே ஆடிருவேன். பின்னே ரெண்டு கையிலயும் அந்த வடி தண்ணீர் சூடு பட்டால் டான்ஸ் தானே ஆட முடியும். ஒரு நாள் வடிச்ச சாதத்தை சாப்பிடறப்ப சாதம் ரொம்ப கம்மியா இருந்துச்சு. சரி இன்னிக்கு ஆண்டவன் நமக்கு இந்த அளவு தான்னு எழுதியிருக்கான் போலிருக்கு னு நினைச்சுகிட்டேன்.அப்புறம் பார்த்தா தான் தெரியுது பாதி சாதம் அந்த வடி தண்ணீர் லேயே விழுந்திருக்குனு. இது சாதத்தோட வரலாறு னா, சாம்பார் கதை இன்னும் டெரரா ல இருக்கும்.
ஒரு நாள், சாம்பார் பொடி டப்பா ஓபன்பண்ணி (ஸ்பூன் இல்லாதலால்)
மிளகாய் பொடி லைட்டா தூவினேன். மிளகாய் பொடி வெளில வர ஆசைப்பட்டு, மொத்தமா சாம்பார்ல விழுந்துருச்சு. உடனே கரண்டியை போட்டு (நல்ல வேளை அவசரத்தில கையை போடலை ) முடிஞ்ச வரை எடுத்துட்டு கொதிக்க வச்சி இறக்கினேன். இருந்தும் அன்னிக்கு எனக்கு கிடைச்சது மிளகாய் சாம்பார்
இதை விட மிக பெரிய காமெடி என்னன்னா நான் உப்புமா கிண்டறது தான். ஒண்ணு தண்ணீர் ஜாஸ்தியா போயிடும். இல்ல கம்மியாகிடும். ஒரு நாள் இப்படி தான் எண்ணெய் சட்டி வச்சி நான் வேகமா கிண்டின கிண்டல்ல சட்டி கோபப்பட்டு, என்ன ரொம்ப தான் கிண்டறே நீ, ன்னு கையோடு வந்துடுச்சு. அதோடு மல்லுகட்டிட்டு இறக்கி வச்சி சாப்பிடறப்ப என் முக எக்ஸ்ப்ரேசன் எப்படி இருந்திருக்கும் னு நீங்க பார்க்கலியே. அது வசந்த மாளிகை சிவாஜி சார் ரத்தம் கக்குற போஸ் ஒண்ணு இருக்கு பாருங்க. அதுக்கு நிகரா இருந்துச்சு
இப்படி தான் தினம் ஒரு அனுபவத்தை கிச்சன் எனக்கு ப்ரெசென்ட் பண்ணிட்டிருக்கு
FINAL PUNCH
இந்த பதிவு டைம் பாஸ் 19-10-2013 இதழ்ல " இது பேச்சிலர் சமையல்" என்ற தலைப்புல வெளி வந்தது. நன்றி டைம் பாஸ்
ஆர்.வி.சரவணன்
கலாட்டா அனுபவம்தான்! டைம் பாஸில் வந்ததற்கு வாழ்த்துக்கள்! புத்தகவெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள்! நன்றி!
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்திற்கு நன்றி சுரேஷ் சார்
நீக்குஅனுபவப் பகிர்வு அருமை
பதிலளிநீக்குஎனக்கும் இப்படி ஆகியிருப்பதால்
பதிவு படிக்கப் படிக்க சுவாரஸ்யம்
கூடுதலாக இருந்தது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்திற்கு நன்றி ரமணி சார்
நீக்குஹா... ஹா... சிவாஜி சார் அளவிற்கு போயிட்டீங்களா...?
பதிலளிநீக்குடைம் பாஸ் இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்..
சார் சும்மா நகைச்சுவைக்காக சொல்லியிருந்தேன்
நீக்குஉங்கள் வாழ்த்திற்கு நன்றி
செம கலாட்டா... டைம்பாஸ் இதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குநைட் படுக்கிறப்ப, நாளைக்கு என்ன சமைக்கலாம் னு மனசுக்குள்ளேயே கணக்கு போட்டுட்டு படுப்பேன்.//
ஓ... கணக்கு மட்டும்தானா? இந்த
வரலாறு, அறிவியல், புவியியல் இதெல்லாம்
போடமாட்டீங்களா? (1)
//கொண்டக்கடலை முதல் நாள் இரவே ஊற வச்சிட்டு வந்து படுத்தேன்//
பதிலளிநீக்குஹை... தண்ணியே ஊத்தாமல் எப்படிங்க கோ.க. ஊற வச்சீங்க?
(2)
நானும் பாச்சுலர் லைஃப் போலதான். ஸோ சமையல் தன் கையே தனக்குதவி தான்! உங்கள் பதிவு அருமை!
பதிலளிநீக்கு//பதிவு டைம் பாஸ் 19-10-2013 இதழ்ல //
பதிலளிநீக்குஅந்தப் பக்கத்தை அப்படியே ஒரு ஸ்கேன் செய்து பதிவுடன் இணைக்கலாமே சார்? (6)
//நீங்க சிரிக்க மாட்டீங்களா என்ன ?//
பதிலளிநீக்குமனம் விட்டு வாய் விட்டு சிரித்தேன் சார்! (7)
நூல் வெளியீட்டிற்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள் சார்! (8)
பதிலளிநீக்குசூப்பருங்கண்ணா.......... டைம்பாஸ்க்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குவாழ்த்துகள் பாஸ்!!
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குடைம் பாஸ் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குஅ. முஹம்மது நிஜாமுத்தீன் says
//இது சாதத்தோட வரலாறு னா, சாம்பார் கதை இன்னும் டெரரா ல இருக்கும். //
அட... 'இன்றைய செய்தி; நாளைய வரலாறு' என்பது இதுதானா? ஆக வரலாறு புஸ்தகத்துல உங்க பேரும் இடம் (வலம் அல்ல இடம்) பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்!!!
(3)
அ. முஹம்மது நிஜாமுத்தீன் says
பதிலளிநீக்கு//அன்னிக்கு எனக்கு கிடைச்சது மிளகாய் சாம்பார்//
அப்படின்னா....
'சிவாஜி' படத்துல ரஜினி மிளகாய் சாப்பிட்டதும் பாத்துரூமுக்குப் போயீ சவுண்டு விடுவாரே, அதமாதிரி எதுவும் சவுண்டு விடலையா நீங்க? (4)
அ. முஹம்மது நிஜாமுத்தீன் says
பதிலளிநீக்குhttp://nizampakkam.blogspot.com/
//அது வசந்த மாளிகை சிவாஜி சார் ரத்தம் கக்குற போஸ் ஒண்ணு இருக்கு பாருங்க.//
சிவாஜி சார் படத்துல பாத்திரத்தோட ஒன்றிடுவாறாமே, அந்த மாதிரி அந்த உப்புமா எப்பவாவது பாத்திரத்தோட ஒன்றிருக்கா சார்? (5)
Anna ithu sema galatta
பதிலளிநீக்கு