பதிவர் திருவிழா 2012 & 2013 - ஒரு பார்வை
இணைய நண்பர்களுக்கு வணக்கம். சென்ற வருடம் வலைபதிவர் திருவிழா 2012 மிக
சிறப்பாக நடைபெற்றது அந்த இனிய தருணங்களின் நிகழ்வுகள் நம்மை விட்டு அகலாமல் இருக்கிறதென்றால் அதுவே அந்த விழாவுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாகும்.
என்னை பொறுத்தவரை சென்ற வருட பதிவர் திருவிழா எனது நட்பு வட்டம்
பெரிதாக மிகவும் உதவியது என்று சொல்லலாம். என் இனிய நண்பர் கரை சேரா அலை
அரசன், அறிமுகத்தில், இந்த பதிவர் திருவிழா மூலமாக எனக்கு கிடைத்த நண்பர்கள்
பாலகணேஷ்மின்னல் வரிகள் ,ரமணி சார் தீதும் நன்றும் பிறர் தர வாரா,மோகன் குமார்
வீடு திரும்பல் ,சீனு திடங்கொண்டு போராடு, கேபிள் சங்கர், மயிலன்,சுரேகா, தென்றல் சசிகலா, மதுமதி, ஜெயக்குமார் ,கோகுல் கோகுல் மனதில், திண்டுக்கல் தனபாலன், வேடந்தாங்கல் கருண் .... என்று தொடர்கிறது நண்பர்கள் வரிசை. நினைத்து பார்த்தால் பெருமை மேலிடுகிறது. அந்த விழா வை பற்றிய எனது அனுபவ பதிவு
http://kudanthaiyur.blogspot.in/2012/08/blog-post_27.html
அந்த விழாவில் நான் மற்றும் அரசன் (கேமரா வை என் கையில் கொடுத்து விட்டு முடிந்த
வரை எடுத்து தள்ளுங்கள் சார் என்றார் ) எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறேன்.
சி.பி.செந்திகுமார் பேசி கொண்டிருக்க
மேடையில் கேபிள் சங்கர், சங்கவி
உரையாற்ற தோதாய் மீசை முறுக்கும் நண்பர் அரசன்
வரிகளில் சேட்டை நிகழ்த்துபவர்
நண்பர் பதிவர் ஆரூர் மூனா செந்தில்
மயிலன் பேசுவதை ரசிக்கும்
ஜெயக்குமார் ,சிபி . செந்தில்குமார் கேபிள் சங்கர்
லட்சுமி அம்மாவுக்கு நினைவு பரிசு வழங்குகிறார்
திரு . பட்டுகோட்டை பிரபாகர்
திரு . பட்டுகோட்டை பிரபாகர்
அரங்கத்தில் ஒரு பகுதி
சசிகலா அவர்கள் எழுதி வெளியிட்ட தென்றலின் கனவு
நூல் வெளியீட்டு நிகழ்வில்
ரமணி சார் , பி.கே.பி சார் ,ராமானுசம் அய்யா ,கவிஞர் திரு.கணக்காயன்
பி.கே.பி அவர்களின் உரை
பெரியோர்கள் முன்னிலையில்
சி.பி.செந்தில்குமார் ,மதுமதி, மோகன்குமார்
போட்டோ சிரிப்பு
சீனா அய்யா, ராமானுசம் அய்யா,கணக்காயன் அவர்களுடன் அரசன்
இயக்குனர் கேபிள் சங்கருடன் நானும் சீனுவும்
பால கணேஷ் சார், கோகுல், அரசனுடன்
திருவிழா அரங்கத்தின் வாயிலில்
திருவிழா அரங்கத்தின் வாயிலில்
இந்த படங்களை பார்க்கும் போது அந்த மகிழ்வான தருணங்கள் நம் கண் முன்னே
சிறகடிக்கின்றன. ஒரு வருடம் ஆனது போல் தெரியவில்லை. இதோ அடுத்த பதிவர்
திருவிழா வந்து விட்டது
செப்டம்பர் 1ம் தேதி மாதத்தின் முதல் நாள் முதல் தரமாய் முத்திரை பதிக்க விழா ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. சென்ற ஆண்டு இந்த பதிவர் திருவிழாவை முன்னின்று சிறப்பித்த குழுவே, இந்த ஆண்டும் இன்னும் மென் மேலும் சிறப்புடன் நடத்த முன்னேற்பாடுகள் செய்து வருகிறார்கள். பதிவர் திருவிழா 2013 க்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் அதன் விபரங்களை http://www.tamilbloggers.info/2013/07/blog-post_30.html சென்று தெரிந்து கொள்ளலாம்
இவ்வருடமும் பதிவர்களின் அறிமுகம், கோவை நண்பர் சங்கவி அவர்களின் கவிதை
நூல் வெளியீடு, சிறப்பு அழைப்பாளர் உரை, இதனோடு பதிவர்களின் பன் முக திறமைகளை வெளிபடுத்தும் நிகழ்ச்சி புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடனம்,பாடல், நடிப்பு,பல
குரல் பேசி அசத்துதல், மற்றும் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு நாடகம் என்று பதிவர்களின்
திறமைகள் உலகறிய செய்யும் நிகழ்ச்சி அரங்கேறுகிறது. பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், திரு.மதுமதி அவர்களின் 9894124021 என்ற அலை பேசி எண்ணிலோ, kavimadhumathi@gmail.com
என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிவிக்கலாம்.நானும் இதில் கலந்து கொண்டுள்ளேன் (அதுக்காக பயபடாதீங்க நீங்க பயபட்டால் நான் எப்படி மேடை ஏறுவது )
இவ் விழாவில் கலந்து கொள்ளும் பதிவர்கள் முன்னதாகவே கீழ் காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு (உணவு மற்றும் உப்சரிப்புக்காக) தங்களின் வருகையை மின்னஞ்சலில் உறுதிபடுத்தி கொள்ளுங்கள்
ஆரூர் மூனா செந்தில்
· அஞ்சாசிங்கம் செல்வின்
· சிவக்குமார் – மெட்ராஸ்பவன்
· பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
· தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
· சதீஷ் சங்கவி – கோவை
· வீடு சுரேஷ்குமார் – திருப்பூர்
· கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
· தனபாலன் - திண்டுக்கல்
விழா சிறக்க பொருளாதாரம் முக்கியமல்லவா.எனவே நன்கொடை தர விரும்பும் பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்
பதிவர் திருவிழா 2013 நடைபெறும் இடம், சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை
ஒட்டி இடது புறத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்தமான கட்டடம்
எங்கெங்கோ பூத்த மலர்கள் சேர்ந்து உருவாக்கும் நந்தவனம் இங்கே தான்
பதிவர் திருவிழா 2013 நடைபெறும் இடம்
நம் எழுத்துக்கள் நமக்கு உருவாக்கி தந்த இந்த அறிய நட்பை மகிழ்ந்து
கொண்டாடுவோம் வாருங்கள் தோழர்களே
வருங்காலம் நமதாகட்டும்
வெற்றி நம் வசமாகட்டும்
ஆர்.வி.சரவணன்
வாங்க வாங்க வரவேற்க காத்திருக்கிறோம்
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கும் வரவேற்புக்கும் நன்றி செல்வின் சார்
நீக்குசந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்
நீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள். . . நானும் வருகிறேன்.. . .வாருங்கள் சேர்ந்து கலக்கலாம். . .
பதிலளிநீக்குஉங்களை சந்திக்கவும் ஆவலோடு காத்திருக்கிறேன் ராஜா
நீக்குஇத்தனை நாள் உங்கள் பிளாக்கை எப்படி தவறவிட்டேண் என தெரியவில்லை. . . .
பதிலளிநீக்குசென்ற ஆண்டின் நினைவுகள்
பதிலளிநீக்குமீண்டும் என்னுள் வஸந்தமாய்த் துளிர்த்தது
படங்களுடன் பகிர்வு அருமை
வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார்
நீக்குஅன்பின் சரவணன் - பதிவு நன்று - பதிவர் சந்திப்பு திருவிழா நல்ல முறையில் திட்டமிட்டு சிறப்புடன் நடைபெற அனைத்து ஏற்பாடுகளூம் நடந்து கொண்டிருக்கின்றன என அறிகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குதங்களது வாழ்த்திற்கும் நன்றி சீனா அய்யா
நீக்குவரும் பதிவர் திருவிழாவும் சிறக்க வாழ்த்துகள்...!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்கு2012 பதிவர் விழா போட்டோக்கள் அருமை...
பதிலளிநீக்குஇந்த வருட விழாவும் சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி குமார்
நீக்குபதிவர் மாநாடு, பெரும் விழாவாய் நடைபெற்றிட
பதிலளிநீக்குஎனது வாழ்த்துக்கள்!
நன்றி நிசாமுதீன்
நீக்குஅண்ணா...
பதிலளிநீக்குதாங்கள் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்... நேரம் இருக்கும் போது எழுதுங்கள்...
http://vayalaan.blogspot.com/2013/08/blog-post_10.html
படங்கள் அட்டகாசம் சார் ... சென்ற சந்திப்பை நினைவூட்டி வருகிற சந்திப்புக்கு ஆயத்தமாக்குகிறது இந்த பதிவு ..
பதிலளிநீக்குமறக்க முடியாத மலரும் சென்ற ஆண்டின் நினைவுகள் அழகாக படங்களுடன் தந்து இந்த வருடமும் அந்த மகிழ்வான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கும் விதம் சிறப்பு.
பதிலளிநீக்குகும்பகோணத்தைத்தான் குடந்தையூர் என்று அழைக்கின்றீர்களா? அல்லது குடந்தையூர் என்று சிற்றூர் ஏதேனும் உளதா?சென்ற ஆண்டின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இவ்வாண்டையும் பெருமையுடன் வரவேற்கும் உங்கள் என்ணம் நிச்சயம் நிறைவேறும். வாழ்த்துக்களுடன்,
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி சார். கும்பகோணத்தின் இன்னொரு பெயர் தான் குடந்தை. (திரு.கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலில் கூட குடந்தை என்று வரும்.) நான் அதனுடன் ஊர் என்று சேர்த்து குடந்தையூர் என்று வைத்து கொண்டேன். பிறந்து வளர்ந்த ஊர் மீது கொண்ட பாசத்தால் இந்த பெயரை என் தளத்திற்கு வைத்திருக்கிறேன்.நன்றி
பதிலளிநீக்கு