வெள்ளி, ஜூன் 29, 2012

ஆனந்த விகடன் என் விகடன் வலையோசையில் நானும்



ஆனந்த விகடன் என் விகடன் வலையோசையில் நானும்

நான் சென்னையில் வேலையில் இருப்பதால் வார வாரம் சனி ஞாயிறு ஊருக்கு செல்லும் போது அந்த வார விகடனில் யார் வலையோசையில் வந்திருக்கிறார் என்று ஆர்வமாய் படிப்பேன் நம் தளம் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கம் தோன்றி மின்னலாய் மறையும்.

இவ் வேளையில் தான் நேற்று என் நண்பர் போன் செய்தார். என் விகடன் திருச்சி பதிப்பு இவ் வார விகடன் வலையோசையில் எனது தளம் இடம் பெற்றிருப்பதாக சொன்னவுடன் ஒரு நிமிடம் நான்சந்தோசத்தில் கண் கலங்கி நின்று விட்டேன். ஆம் எனது நெடு நாளைய அதாவது இருபத்தி ஐந்து வருட கனவு ஒன்று இப்போது விகடனின் மூலம் நிறைவேறியிருக்கிறது ஏறக்குறைய முப்பது வருடங்களாக விகடனை படித்து வரும் எனக்கு அவ் விகடனிலேயே என் எழுத்துக்கள் அச்சுக்களில் வந்திருப்பதை காணும் போது என் மகிழ்ச்சிக்கு தான் எல்லையேது




விகடனில் இரண்டு வருடங்களுக்கு முன் வலைப்பூ என்ற வாய்ப்பு என்ற தலைப்பில் இணைய தளத்தில் ப்ளாக் எழுதுவது பற்றி கட்டுரை வெளியிட்டிருந்தார்கள் அப்பொழுது தான் நான் இணைய தளத்தில் நுழைந்து தேடலை தொடங்கியிருந்த நேரம் அது இந்த கட்டுரை படித்ததும் நாமும் ப்ளாக் தொடங்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் தோன்றியது கூடவே ஆர்வத்துடன் நானும் குடந்தையூர் என்ற இத் தளத்தை தொடங்கினேன். எனது நூறாவது இடுகை விகடனின் இணையதளத்தில் குட் ப்ளாக் பகுதியில் இடம் பெற்றது . இப்போது நான் தளத்தில் பதிவு, இருநூறை நெருங்கும் இவ் வேளையில், என் சொந்த ஊரிலேயே என் விகடன் சோழ மண்டல வலையோசை யில் இத் தளமும் எனது பதிவுகளும் வெளியாகி இருக்கிறது. இது எனக்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் என்பதால் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஆம் நண்பர்களே சாதாரண கல்லுக்கு என்ன மரியாதை இருக்க போகிறது உளிகளாகிய உங்களின் கருத்துரைகள் மற்றும் தொடர்ந்த ஆதரவால் தான் இது சிற்பமானது. இந்த சிறு சிற்பத்திற்கு தான் விகடன் எனும் கோயிலில் இடம் பெறும் வாய்ப்பு ஓரிடத்தில் கிடைத்திருக்கிறது .

நன்றி என்ற ஒற்றை சொல்லில் அடக்கி விட முடியுமா இதை. எனினும்,
என் நெஞ்சம் நிறைந்த நன்றியை ஆனந்த விகடனுக்கும் இணைய தள நண்பர்கள் அனைவருக்கும் நான் உரக்க சொல்லும் நேரமிது

ஆர்.வி.சரவணன்

25 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் நண்பரே! உங்களுக்கு இன்னும் பிரகாசமான எதிர்காலம் அமையவுள்ளது. பத்திரிகைகளுக்கு தொடர்ந்து எழுதுங்கள். (ஆரம்பம்: விகடனுக்கு நானே கேள்வி-நானே பதில், ட்ரிபிள் ஷாட்...)

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் அண்ணா...
    கலக்குங்க...

    பதிலளிநீக்கு
  3. சார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சார். இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. மன நிறைவுடன் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. r.v.s.,அருமை!வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லாஜூன் 30, 2012 9:00 AM

    ஆஆஆஆஆஅ சூப்பர் அண்ணா ...

    எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க வந்தது ...


    கலக்குங்க ...


    வாழ்த்துக்கள் அண்ணா

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகள் சரவணன் :-)

    "முப்பது வருடங்களாக விகடனை படித்து வரும் எனக்கு அவ் விகடனிலேயே என் எழுத்துக்கள் அச்சுக்களில் வந்திருப்பதை காணும் போது என் மகிழ்ச்சிக்கு தான் எல்லையேது"

    உண்மை தான் :-)

    மறுபதிப்புகளை குறைத்துக்கொண்டு புதிதாக எழுத முயற்சியுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. உங்களை விட எனக்கு இன்னும் மகிழ்ச்சி கூடுதலாகவே உள்ளது சார் ,...
    உழைப்பின் மதிப்பை அங்கீகரித்த விகடனுக்கு என் நன்றிகள் ..

    தொடர்ந்து மென் மேலும் சிறப்படைய என் உள்ளம் நிறைந்த வாழ்துக்கள் ..

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தனபாலன்

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மாதவி

    பதிலளிநீக்கு
  11. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நிசாமுதீன்

    பதிலளிநீக்கு
  12. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  13. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பாலா

    பதிலளிநீக்கு
  14. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தென்றல் சரவணன்

    பதிலளிநீக்கு
  15. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரத்னவேல் சார்

    பதிலளிநீக்கு
  16. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கலை

    பதிலளிநீக்கு
  17. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கிரி

    பதிலளிநீக்கு
  18. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மாலா வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  19. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அரசன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்