மகிழ்வான தருணங்கள்.... ( தொடர் பதிவு)
இப்படி ஒரு தலைப்புல தொடர் பதிவு பதிவுலகில் தொடர்ந்திட்டிருக்கு.முதன் முதலில் ப்ளாக் ஆரம்பிச்சு தளத்தில் எழுதிய மகிழ்வான தருணத்தை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டுமாம். நானும் எழுதணும்னு அழைப்பு விடுத்த பதிவுலக தோழி தென்றல் சசிகலா அவர்களுக்கு நன்றி.
பதினான்கு வயது முதல் எழுத ஆரம்பித்தேன். வார இதழ்களில் என் படைப்புகள் வெளியாக வேண்டும் என்று நான் விரும்பி அனுப்பிய எதுவும் அவர்கள் விரும்பாததால் வெளி வரவில்லை. சீசீ இந்த பழம் புளிக்கும் போலிருக்கிறது என்று நான் முயற்சியை கை விட்டு விட்டேன். ஏக்கமுடன் மற்றவரின் படைப்புகளை மட்டுமே படித்து வந்தவனுக்கு இணையம்
(கை கொடுத்தது) கீ போர்டு கொடுத்தது. இணையம் பால் ஈர்க்கப்பட்டேன். பதிவுகளை படித்து கருத்துரை இட ஆரம்பித்தேன். அதற்கு பதில் கமெண்ட் வந்ததை பார்த்தவுடன் சுவாரசியம் இன்னும் அதிகமாகவே இணையத்தில் படிப்பதை தொடர்ந்தேன்.(என் கமெண்டுக்கு வந்த பதில்கமெண்ட்டையே
ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொண்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்) இப்படியே செல்கையில் மிக முக்கியமான் மூவர் அப்போது எனக்கு நண்பர்களாக அறிமுகமானார்கள்
என்வழி வினோ என் வழி
கிரி ப்ளாக் கிரி http://www.giriblog.com/
எப்பூடி ஜீவதர்ஷன் எப்பூடி
அவர்களின் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.விரும்பி படித்து பின்னூட்டமிட்டு நட்பை வளர்த்து கொண்டேன். இதில் என்வழி வினோ நீங்களும் படைப்புகள் எழுதலாமே என்று எழுத அழைத்தார். சொன்னவுடன் (இதுக்காக தானே காத்துகிட்டு இருந்தோம்) எழுதினேன் ஒரு கவிதை.அது
என் வழியில் வெளியாக அதற்கு வந்த கமெண்ட் எனக்கு தொடர்ந்து எழுதும் எண்ணத்தை தூண்டியது. அடுத்து இளையராஜா பாடல்கள் பற்றி எழுதிய பதிவு க்கு வந்த பின்னூட்டம் பார்த்து இன்னும் சந்தோஷம் கரை புரண்டது. அப்போது தான் எனக்கும் ஆர்வம் அதிகமாகி நாமும் தளம் தொடங்குவோம்
என்று ஆரம்பித்தது தான் குடந்தையூர். என்ற எனது இந்த தளம். நண்பர்கள் மூவருக்கும் தெரிவித்தேன் சந்தோசமாய் வாழ்த்தினர்.
என் எழுத்துக்கள் படித்து யாரும் முகம் சுளிக்க கூடாது. களிப்படையும் வண்ணம் இருக்க வேண்டும் என்று கவனமுடன் தொடங்கினேன்.
முதல் பதிவாக கடவுள் பற்றிய கட்டுரை தான் எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன். நான் திருப்பதி சென்றிருந்த போது எனக்கு கிடைத்த அனுபவத்தை முதல் பதிவாக எழுதினேன்.அவருக்கு முன்னால் எல்லோரும் ஒன்று தான் நான் புரிந்து கொண்டது அன்று தான் (படித்து பாருங்கள் ஒரு சிலிர்ப்பான அனுபவம் கிடைக்கும் உங்களுக்கு) இதை எழுதி விட்டு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ப்ளாக் ஓபன் செய்து எத்தனை பேர் படித்தார்கள்
என்று பார்த்தது தனி கதை. இரவில் கண் விழிக்கும் போது இப்போது யாரேனும் படித்து கொண்டிருப்பார்களோ என்றெல்லாம் நினைத்து கொள்வேன். அடுத்தடுத்து பதிவுகள் எழுத ஆரம்பித்தேன்.கூடவே தினம்
ஒரு தளமாக சென்று இணைந்து பதிவுகள் படிக்க ஆரம்பித்தேன்.நண்பர் ஜீவதர்ஷன் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார் எனது ஐம்பதாவது பதிவாக கேள்வி பதில் பாணியில் அமைந்திருந்தது. அந்த பதிவு
பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என்பது தலைப்பு
http://www.kudanthaiyur.blogspot.in/2010/08/blog-post_21.html
* தொடர்ந்து எழுதி நான் நூறை எட்டினேன். அந்த நூறாவது
பதிவு ஆனந்த விகடனின் குட் ப்ளாக் பகுதியில் இடம்
பிடித்தது. http://kudanthaiyur.blogspot.in/2011/02/blog-post_08.html
* என் விகடனில் இரண்டு பக்கங்கள் என் தள பதிவுகள் வந்தது.
* இணையம் மூலம் அறிமுகமான நண்பர் திரு எஸ்.எஸ்.பூங்கதிர் பாக்யா
வார இதழில் எனது கருத்துக்களை தொடர்ந்து இடம் பெற வைப்பதோடு
திரு.கே.பாக்யராஜ் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசையையும் அவருடன் நான் நண்பரான ஒரு மாதத்திலேயே நிறைவேற்றி கொடுத்தார்.
இரு அனுபவ கட்டுரை கூட பாக்யாவில் வெளி வந்தது.
* ஜூலை மாதம் டைம் பாஸ் வார இதழில் நான் எழுதிய ஒரு
கட்டுரை வெளி வந்தது.
* என் தளத்தில் நான் எழுதிய இளமை எழுதும் கவிதை நீ http://kudanthaiyur.blogspot.in/2011/10/blog-post_23.html தொடர்கதை யை
(பதிவுலக நண்பர்களின் ஊக்கத்தால்) வெற்றிகரமாய் எழுதி
முடித்தேன்.
வாழ்க்கையில் நாம் எடுக்கும் சில முடிவுகள் நம் வாழ்க்கைக்கு ஏற்றமும் ஆற்றலும் தரும் என்று சொல்வார்கள். அப்படி ஆர்வத்தில் முடிவெடுத்து
அவரசரத்தில் தொடங்கிய என் தளம் இன்று முன்னூறு இடுகைகளை
நெருங்கி கொண்டிருக்கிறது. மூன்று நண்பர்களுடன் இருந்த எனது
நட்பு வட்டம் (முக நூல் நண்பர்கள் உட்பட) இன்று முன்னூறுக்கும் மேல்.
என் எழுத்து எனக்கு வழங்கிய கொடையாகவே இதை நினைத்து மகிழ்கிறேன்
எனக்கு பிடித்த துறையில் செயலாற்றும் மகிழ்ச்சி இப்போது எனக்கு கிடைத்திருக்கிறது ஆத்ம திருப்தியுடன் எழுதி வருகிறேன். என்றேனும் நானும் சிகரம் எட்டுவேன் என்ற நம்பிக்கையை கொடுத்திருப்பது என்
தளமும் பதிவுலக நண்பர்களும் தான்.யோசித்து பாருங்கள் நான் மட்டும் அன்று இந்த தளத்தை தொடங்கவில்லை என்றால் இதெல்லாம் நான் அடைத்திருக்க முடியுமா.
இப்படி மகிழ்வான தருணங்கள் பலவற்றை எனக்களிக்க காரணமான,
என் தளத்தை தொடங்கிய அந்த வினாடி கண்டிப்பாக ஒரு மகிழ்வான
தருணம் தான்.
ஆர்.வி.சரவணன்
வலைச்சரத்தில் தங்களுடைய கருத்துக்கு என்னுடைய பதில் கருத்தே இங்கு எனது கருத்து....
பதிலளிநீக்குமைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒரு வசனம் வரும்...
ஊர்வசி: கிராமும் குக்கு... நீங்களும் குக்கா....
அதே போல்...
என் பேரும் சரவணன், உங்க பேரும் சரவணனா....
என் முதல் பதிவும் திருப்பதி பற்றியது.... உங்க பதிவுமா...
ஹா ஹா ஹா...
நன்றி சரவணன்
நீக்குமகிழ்வான தருணங்கள் பலவற்றை எனக்களிக்க காரணமான,
பதிலளிநீக்குஎன் தளத்தை தொடங்கிய அந்த வினாடி கண்டிப்பாக ஒரு மகிழ்வான
தருணம் தான்.
வாழ்த்துகள்..!
தங்கள் வாழ்த்திற்கு நன்றி
நீக்குஉங்கள் மகிழ்வை அழகாக பகிர்ந்து இருக்கிறீர்கள் அண்ணா.... இன்னொரு தொடர்பதிவு பாக்கி இருக்கு...
பதிலளிநீக்குஎழுதுகிறேன் குமார் தங்கள் வருகைக்கு நன்றி
நீக்குபயணத்தைத்தான் தொடங்கிவிட்டீர்களே, நிச்சயம் ஒரு நாள் சிகரத்தை எட்டுவீர்கள்.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சார்
நீக்குஅருமையான தருணங்கள் சார்.. விகடன் பாக்யா என்று அணைத்து முன்னணி பத்திரிக்கையிலும் எழுத களம் அமைத்துக் கொடுத்தது வலைபூ என்று நினைக்கும் பொழுது சந்தோசமாய் உள்ளது
பதிலளிநீக்குநன்றி சீனு
நீக்குமகிழ்வான தருணத்தை அழகாக தந்துள்ளீர்கள். அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.
பதிலளிநீக்குநன்றி சசிகலா
நீக்குஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துரைத்து
பதிலளிநீக்குசிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த
இனிய அன்பு நன்றிகள்..!
இப்படி மகிழ்வான தருணங்கள் பலவற்றை எனக்களிக்க காரணமான,
பதிலளிநீக்குஎன் தளத்தை தொடங்கிய அந்த வினாடி (vinovaga irukalam) கண்டிப்பாக ஒரு மகிழ்வான
தருணம் தான்
நன்றி தேவராஜ்
நீக்குஉங்கள் மகிழ்வான தருணங்கள் மிக அழகான இனிமையான தருணங்கள்தான். அது எனது எழுத்துப் பயணத்தின் ஆரம்பத்தை நினைவூட்டியது, எனது இணைய தளம் ஆரம்பித்து எனது எழுத்தைப் பதிவு செய்த அந்த நாள். நீங்கள் இன்னும் பல வெற்றிப்படிகளைக் காண எனது வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குஉங்கள் மகிழ்வான தருணங்கள் மிக இனிமையான அழகான தருணங்கள். உங்கள் பதிவு எனது இணையதளம் ஆரம்பித்து எனது கருத்தையும், சிந்தனயையும் என் எழுத்தார்வத்தால் பதிவு செய்த அந்த மகிழ்வான தருணத்தை நினைவுகூர வைத்தது. நன்றி. நீங்கள் இன்னும் பல பல வெற்றிப் படிகளை எட்ட எனது வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குநன்றி துளசிதரன் சார்
நீக்கு"இதை எழுதி விட்டு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ப்ளாக் ஓபன் செய்து எத்தனை பேர் படித்தார்கள் என்று பார்த்தது தனி கதை"
பதிலளிநீக்கு:-)) இது போல செய்து இராதவர்கள் எவருமே இருக்க மாட்டார்கள்.. குறிப்பாக வந்த புதிதில். நம்மையும் யாரோ கவனிக்கிறார்கள் என்ற எண்ணமே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்.
சரவணன் தொடர்ந்து பட்டையக் கிளப்புங்க.. உங்களோட குறும்படம் எடுக்கும் முயற்சிக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
நீங்கள் எழுதும் பதிவுகளில் மீள் பதிவுகளை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். நல்ல எழுத்த நடை உடையாக உங்களால் இன்னும் பல சுவாரசியமாக எழுத முடியும்.
தங்கள் வாழ்த்திற்கு நன்றி கிரி
நீக்குதளம் தொடங்கிய புதிதில் நான் எழுதி அப்போது அவ்வளவாக யாரும் படித்திராத பதிவுகள் சிலவற்றை மட்டுமே வெளியிடுகிறேன் இனி மீள் பதிவு இல்லாமல் பார்த்து கொள்கிறேன்
குடந்தையூர் உருவான வரலாறு;
பதிலளிநீக்குபடிக்கவே மிக சுவாரஸ்யம்.
படிப்படியாக தாங்கள் முன்னேறிய கதை;
நன்றாக வெளிப்படுத்தினீர்கள் அதை!
வாழ்த்துகள் சரவணன்.... நாங்கள் ஊக்கம் தந்திருக்கலாம்.. ஆனால் முயற்சி உங்களுடையதே.
பதிலளிநீக்குநான் எவ்வளவு பிரபலமான நபரது தளமாக இருந்தாலும் போய் வாசிப்பதில்லை. வாய்ப்புக் கிடாத்தால்தான். ஆனால் உங்களைப் போன்ற நண்பர்கள் எழுத்தை ரசித்துப் படிப்பேன். ஒரு இளைய சகோதரன் எழுத்தை அருகிலிருந்து ரசிப்பதைப் போன்ற உணர்வு.
முயற்சி உடையார் புகழ்ச்சிய்யையே அடைவார்!
அன்புடன்
-வினோ