சனி, ஜூன் 23, 2012

கற்கை நன்றே கற்கை நன்றே....


கற்கை நன்றே கற்கை நன்றே....

என் கல்லூரி தோழி ஒருவர் வெளியூரில் இருக்கிறார் அவர் ஒரு நாள் காலை எனக்கு போன் செய்து என் பையனுக்கு பள்ளியில் கல்வி பற்றி கவிதை கேட்டுள்ளார்கள் இன்னைக்கே வேண்டும் நீ எழுதி கொடு என்றார். கவிதை எழுதுவதில் நான் பெரிய ஆள் இல்லை உடனே எப்படிப்பா என்றேன் . இந்த பிகு பண்ற வேலையெல்லாம் வேண்டாம் எனக்கு கவிதை தான் வேண்டும் என்றார்.சரி என்று சொல்லிவிட்டு அன்று இரவு வீடு வந்தவுடன் அமர்ந்து எழுதி அவரிடம் நான் போனிலேயே சொல்ல சொல்ல அவர் அதை எழுதி கொண்டார். அவரும் அவர் பையனும் நல்லாருக்கு என்று சொன்னார்கள்

அவர்கள் சொன்னது இருக்கட்டும் நீங்கள் சொல்லுங்கள் எப்படி என்று


கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
இது சான்றோர் மொழி


கற்கை நன்றே கற்கை நன்றே
மரிக்கும் தருவாயிலும் கற்கை நன்றே
இது எம் மொழி


கல்வியை ஐந்திலும் படிக்கலாம்
ஐம்பதிலும் படிக்கலாம்
வாழ்க்கையில் உயர
இதுவே படிக்கற்கலாம்


மனிதா நீ சேர்த்த செல்வத்தை செலவிடு
நீ கற்ற கல்வியை சொல்லி கொடு
இதை அளவிடு


செல்வம் காணாது போயிருக்கும்
அறிவோ நீக்கமற நிறைந்திருக்கும்


கல்லாதவன் கண்ணிருந்தும் குருடனே
கற்றவன் குருடனாயினும் கண்ணுடையனே


கல்லாத செல்வந்தனுக்கும் தேவை ஒரு கற்றவன்
கற்ற ஏழைக்கு தேவையில்லை மற்றவன்


கற்றது கையளவு
கல்லாதது உலகளவு

எனவே


கற்றோம்
கற்போம்
கற்பிப்போம்


ஆர்.வி.சரவணன்

இது ஏற்கனவே இத் தளத்தில் வெளியானது தான்

8 கருத்துகள்:

  1. பல்பொருள் பல்பொருள் பல்பொருள் ஆய்ந்துமெ
    நல்பொருள் நல்பொருள் கல்

    பதிலளிநீக்கு
  2. *நல்லாயிருக்குதான்!
    *"படிக்கற்க'ளா'ம்" என்று மாற்றி எழுதிக் கொடுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. //செல்வம் காணாது போயிருக்கும்
    அறிவோ நீக்கமற நிறைந்திருக்கும்//

    அதானே அருமையான கவிதை எழுதும் நீங்கள் ரொம்பதான் பிகு பண்ணியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  4. NALLA PATHIVU . KARKAI NANTRAE ENRU KOORIYATHU THENKASI SHENCOTTAI PAKUTHIYAI AATCHI SEITHA ATHI VEERA RAAMA PANDIYAN !!!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்