மாப்பிள்ளை விற்பனைக்கு (அல்ல) ....
எனக்கென்று என் வீட்டில் பார்த்த பெண்ணே, செல்வி காயத்ரி
நான் நலமில்லை நீயேனும் நலமா ? நான் சிறு வயது முதல் என் தாத்தாபாட்டி அவர்களால் நல்லபடியாக நல்லவனாக வளர்க்கப்பட்டவன். நான் படித்து முடித்து நல்ல வேளையில் நல்ல சம்பளத்தில் அமர்ந்த போது கல்யாண மார்கெட்டில் என் ரேட் உயர்ந்து தான் போனது. பூரித்த என் பெற்றோர் எனக்கான வரன் தேட ஆரம்பித்தனர்.அப்போது என் பெற்றோரிடம் நான் சில நிபந்தனைகளை உறுதியாக தெரிவித்தேன் .
வரதட்சனை எதையும் பெண் வீட்டில் கேட்டு பெற கூடாது. திருமண செலவில் பாதியை நாமும் ஏற்க வேண்டும். பெண் வீட்டில் எனக்கென்று எந்தபொருளையும் எதையும் கேட்டு பெற கூடாது. என்று. இதற்கு என் பெற்றோர் மறுத்து அடம் பிடித்தனர். நானும் திருமணத்திற்கு மறுக்கவே வேறு வழியின்றி என் கொள்கைக்கு வடம் பிடித்தனர்.
கல்யாண ப்ரோக்கர் மூலம் வந்த முதல் வரன் நீ. நான் பார்க்கும் முதல் பெண்ணும் நீ தான். உன்னை பார்க்க வந்த முதல் மாப்பிள்ளை யும் நான் தான். நம்மை நாம் பார்த்ததும் நமக்கு பிடித்து போனது நம்மை நாம் சம்மதம் தெரிவித்தவுடன் நம் இரு வீட்டாரும் கல்யாண விசயங்களை பேச ஆரம்பித்தனர்.
என் நண்பர்கள் உன்னுடன் போனிலும் நேரிலும் பேச சொல்லி எனை நச்சரித்தனர். நான் மறுத்தேன் "கல்யாணத்திற்கு அப்புறம் பேச வேண்டியது நிறைய இருக்கு கல்யாணம் வரை பேசாமல் இருக்கும் இந்த த்ரில் வாழ்க்கையில் பின்னால் கிடைக்காது" என்றேன். இருந்தாலும் ,நாம் தினமும் சாலையில் வேலைக்கு வண்டியில் செல்லும் போது தினமும் எதிரெதிரே சந்தித்து கொண்டோம். கண்களால் நலம் விசாரித்து கொண்டோம் நம் ஆசைகளை பரிமாறி கொண்டோம்.
இப்படியே செல்கையில் ஒரு நாள் என் தந்தை "அந்த பெண் வேண்டாம்" என்று சொன்னார் ஏன் என்றேன் அதிர்ச்சியில். ஒத்து வரவில்லை என்றார் ஒரே வார்த்தையில்.ஏதோ நடந்திருக்கிறது என்று நான் ப்ரோக்கரிடம் விசாரித்த போது, என் பெற்றோர் எனக்கென்று கார் வேண்டும் வரதட்சணை பணம் வேண்டும் , சொந்த செலவில் திருமணம் லண்டனில் ஹனி மூன் என்று லிஸ்ட் கொடுத்ததாகவும் மேலும் ,இதையெல்லாம் நாங்கள் கேட்டதாக இல்லாமல் நீங்களே செய்வது போல் செய்ய வேண்டும் மாப்பிள்ளை க்கு இது தெரிய கூடாது என்று சொன்னார்களாம். அதற்கு உன் தந்தை "பையனை கல்யாணம் பண்ணி கொடுக்க போறிங்களா இல்லை எங்களுக்கு விற்க போறிங்களா "என்று சத்தம் போடவே அத்தோடு முறிந்து விட்டது நம் திருமண பேச்சு வார்த்தை .
இதை தாங்க முடியாமல் கோபமாய் வீடு வந்து என் தந்தை தாயிடம் சண்டையிட்டேன். அதற்கு என் தாய் "பெண்ணை பார்த்ததும் மயங்கி விட்டாயோ" என்றும் என் தந்தை "கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இப்படி சப்போர்ட் பண்றியே கல்யாணம் ஆனப்புறம் எங்களை யார் என்று கேட்பாய் போலிருக்கிறதே "என்றும் என்னுள் வார்த்தை கத்தியை இறக்கினர் "புனிதமான திருமணத்தை வியாபாரமாக்கும் உங்களை யார் என்று கேட்பதில் தவறேதுமில்லை" என்றேன் வார்த்தைகளை கேடயமாக்கி
உனக்கு எங்களை விட அவள் முக்கியமாகி விட்டாள் இல்லையா "என்றனர் இருவரும் கோரசாய்
"எனக்கு என் கொள்கையே முக்கியம் காந்தியை புத்தரை ,இயேசுவை ,ராமாயணத்தை ,மகாபாரதத்தை போதித்த நீங்கள், இப்போது என் உத்தியோகம் அதனால் வந்த பணம் கண்டு மாறி போய் விட்டாலும் நான் என் கொள்கையிலிருந்து மாற மாட்டேன் " என்றேன் உறுதியாக
"அப்படியென்றால் இந்த வீட்டில் உனக்கு இடமில்லை வெளியில் போ"என்றனர்.
அவர்களை பார்த்தேன் அவர்கள் முகத்தில் விரோதம் இருந்த அளவு பாசம் சிறிதும் இல்லை என்பது நன்றாக தெரிந்தது. "பெற்ற கடமைக்கு என் சம்பளத்தில் பாதி மாதாமாதம் வீடு தேடி வரும்" என்று சொல்லி விட்டு வெளியில் வந்து விட்டேன்
நடந்த விசயங்களை உன் தந்தை தாயிடம் சொல்ல சொல்லி கல்யாண ப்ரோக்கரை அனுப்பியுள்ளேன். உனக்கு இந்த கடிதம் எழுதும் என்நோக்கம் ஒன்றே ஒன்று தான்.
உன் தந்தை தாய் இருவரும் " இவங்களே இப்படினா இவங்க பையன் எப்படிப்பட்ட அயோக்கியனா இருப்பான் அவங்க ரத்தம் தானே அவன் உடம்பிலே ஓடும் நல்ல வேலை எங்கள் பெண் தப்பிச்சது "என்று சொன்னார்களாம்
இதை கேள்விபட்டதும் என் மனது வலித்தது. என் நிலைபாட்டை உனக்கும் உன் குடும்பத்திற்கும் தெரியபடுத்த மட்டுமே இந்த கடிதம் . நல்ல மணமகனுடன் உன் இல் வாழ்க்கை சிறப்புடன் அமைய என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்
அன்புடன் சிவா
என்று எழுதி முடித்து நிமிர்கிறேன்
வாசலில் நிழலாடியது உற்று பார்த்தேன். நான் பெண் பார்த்த இப்போது யாருக்கு கடிதம் எழுதி கொண்டிருந்தேனோ,அந்த காயத்ரி தன் பெற்றோருடன் கல்யாண ப்ரோக்கர் சகிதம், கதவோரம் சாய்ந்த படி, பெருமிதத்துடன் எனை பார்த்த படி நின்றிருந்தாள்.தனது மணமகனாய் என்னை பார்த்த படி முகத்தில் மணமகளுக்குரிய வெட்க புன்னகையை அணிந்த படி
ஆர்.வி.சரவணன்
இக் கதை நான் தளம் ஆரம்பித்த புதிதில் எழுதியது
ரசித்துப் படித்தேன் ! நன்றி !
பதிலளிநீக்குநல்ல மணம் வாழ்க!
பதிலளிநீக்குநாடு போற்ற வாழ்க!!
கதை அருமை அண்ணா...
பதிலளிநீக்குNice.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரத்னவேல் சார்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நிசாமுதீன் சார்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதவி
பதிலளிநீக்குமிகவும் பாதித்த கடிதம் நண்பா
பதிலளிநீக்குnathin உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"மாப்பிள்ளை விற்பனைக்கு (அல்ல) ....":
பதிலளிநீக்குToday News In Tamil Nadu பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் இப்போது நன்றாக குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்கள். மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக்கொள்வதற்கு, அவன் சம்பாதிக்கும் பணத்தை மகளை ஏவிவிட்டு பிடுங்குவதற்கு, பல வகைகளில் இந்த “வரதட்சணை” தடுப்புச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தினந்தோறும் வரும் நீதிமன்ற தீர்ப்புகளை கவனித்துப் பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
நண்பரே நான் இந்த கதையில் எடுத்து கொண்ட கருத்து ஒரு மாப்பிளையின் பெற்றோர் பணத்தாசை பிடித்தவராக இருந்தால் அப்போது அந்த மாப்பிள்ளை நல்லவன் எனில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்ற ஒரு பக்கத்தை மட்டும் தான் இந்த கதையில் சொல்லியிருக்கிறேன் நீங்கள் சொல்லும் பெண்ணை பெற்றவர்கள் சிலர் மாப்பிள்ளையின் பணத்தை சுரண்டி வாழ்பவர்கள் என்பது இன்னொரு பக்கம் அதற்கு பதிலடி கொடுக்கும் கதை அமையும் போது எழுதுகிறேன் தாங்கள் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு