திங்கள், பிப்ரவரி 27, 2012

வெற்றியை எட்டும் வரை எட்டு....






திருவண்ணமலையில் நான் க்ளிக்கிய சில படங்கள்


வெற்றியை எட்டும் வரை எட்டு....

நான் திருப்பூரில் டையிங் யூனிட்டில் மேலாளராக வேலை பார்த்த போது நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்

அங்கு தினமும் அனைத்து வேலையாட்களும் வேலை ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பு இறைவனுக்கு ஒரு உறுதிமொழி எடுப்பார்கள் அனைவரும் வரிசையில் நிற்க நாங்கள் எதிரில் நின்று ஒருவர் சொல்ல அதை மற்றவர்கள் சொல்வார்கள். அந்த உறுதிமொழி முழு வெள்ளை தாள் அளவுக்கு ஒரு பக்கம் இருக்கும்.

அதே போல் ஒவ்வொரு வியாழனும் அனைத்து துறைகளின் மேலாளர்கள் பங்குபெறும் மீட்டிங் நடைபெறும் அதில் கலந்து கொள்ள எம். டி வருவார் எங்களது யூனிட்டுக்கு முதலாளியின் மனைவி தான் பொறுப்பாளர் (ஜெனரல் மேனேஜர்) கம்பெனி நிர்வாகம் ஊழியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறது என்று எம் .டி எடுத்துரைப்பார் அதே போல் ஊழியர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஒவ்வொரு துறையின் மேலாளரும் எடுத்துரைப்பார்கள் அடுத்த மீட்டிங்கில் இதை சரி செய்து தர வேண்டும் என்ற ஒப்புதலுடன் இரு சாராரும் உறுதி எடுக்கும் இந்த மீட்டிங் அங்கே ஊழியர்கள் முதலாளி அனைவரும் ஒன்றே என்பது தான் அந்த மீட்டிங் கின் சிறப்பம்சம்

அந்த மீட்டிங் நடைபெறும் போதும் இந்த இறைவனுக்கு உறுதிமொழி எடுப்பது நடைபெறும் ஒருவர் சொல்ல மற்ற அனைவரும் திருப்பி சொல்வோம் இதில் முதலாளி என்ற பாகுபாடில்லாமல்
எம்.டி .யும் எழுந்து நின்று கை கட்டி சொல்வார் எங்களை போலவே சொல்வார். அன்று அதே போல் அந்த உறுதிமொழி பேப்பரை படிக்க எடுத்த தன் மனைவியிடம் அவர் பேப்பரை வைத்து விட்டு பார்க்காமல் சொல் என்று உத்தரவிட்டார் அவர் மனைவி (எங்கள் யூனிட் ஜெனரல் மேனேஜர்) எனக்கு தெரியாது என்று சிரித்த படியே மறுத்தார் .இவ்வளவு நாள் படிக்கிறே இன்னுமா மனப்பாடம் ஆகவில்லை உனக்கு என்று கேட்டார்.

பின் எங்களை பார்த்த எம் .டி வேறு யாருக்கு பார்க்காமலே சொல்ல தெரியும் என்றார் எல்லோரும் உடனே என்னை பார்த்தார்கள் ஏனெனில் ஏற்கனவே ஊழியர்களுடன் நான் உறுதிமொழி எடுக்கும் போது மற்றவர்கள் பார்த்து படிக்க நான் மட்டும் பார்க்காமலே சொல்வேன் ( எந்த ஒரு விசயமும் சில முறை கேட்டால் எனக்கு மனப்பாடம் ஆகி விடும் ) சரவணனுக்கு தெரியும் என்றார்கள் எங்கே சொல் என்றார் எனக்கு கொஞ்சம் பயமாகி விட்டது ஏனெனில் ஏதும் சொதப்பி விட போகிறோமே என்று தான் இருந்தும் வேறு வழி. நான் சொல்ல ஆரம்பித்தேன் நான் சொல்ல சொல்ல எம்.டி உள்பட அனைவரும் அதை திருப்பி சொன்னார்கள் உறுதிமொழி சொல்லி முடித்தவுடன் எம் .டி கை தட்டினார் வெல்டன் சரவணன் எல்லோரும் என் மனைவி உட்பட கடமைக்கு தான் அதை சொல்லியிருக்கிறார்கள் நீ மட்டும் தான் அதை ஆத்மார்த்தமாக சொல்லியிருக்கிறாய் அதனால் தான் உன்னால் மனப்பாடம் செய்ய முடிந்திருக்கிறது கண்டிப்பா நீ நல்ல நிலைக்கு வருவே என்று சொன்னார் அன்று முழுவதும் நான் சந்தோசத்தில் மிதந்தேன் என்று சொல்லவும் வேண்டுமா

வெற்றிக்கான விதை என் மனதில் விழுந்தது அப்போது தான் எந்த ஒரு விசயமாகினும் அதில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட வேண்டும் என்பதை கெட்டியாக பிடித்து கொண்டதன் விளைவு அவ்வபோது சில வெற்றிகளை என்னால் எட்ட முடிந்தது

இதை எதுக்கு இப்ப சொன்னேன்னா இன்னும் followers எண்ணிக்கை நூறை என் தளம் அடையவில்லை இன்னும் இருபத்தி ஐந்தாயிரம் ஹிட்ஸ் கூட நான் எட்டவில்லை இருந்தும் இது எனக்கு நுற்று எழுபத்தைந்தாவது இடுகை இதில் நான் பெருமிதப்பட ஏதுமில்லை இந்த வேலையில் இன்னும் நான் முழு ஈடுபாட்டுடன் ஈடுபடவில்லை என்பதாக தான் இதை எடுத்து கொள்கிறேன்

ஆனாலும் இந்த எண்ணிக்கையை நான் எட்டுவதற்கு நண்பர்களே என்னை தொடரும் நீங்கள் தானே காரணம்

நன்றி நண்பர்களே

ஆர்.வி.சரவணன்

20 கருத்துகள்:

  1. r.v.s.,
    வணக்கம் . தங்களின் மனப்பாடத்திறன் பாராட்டத்தக்கதே...அருமை!உங்கள் வலைப்பூ நான் விரும்பும் பூக்களில் ஒன்று என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
    தொடருங்கள்!பாராட்டுக்கள்!வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. ஈடுபாட்டோடு பணி செய்து வெற்றி எட்டியமைக்கு பாராட்டுக்கள். மென்மேலும் பெற்றிட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நண்பரே, தாங்கள் தொடர்ந்து செயல்படுங்கள்.

    வெற்றி வெகு தூரமில்லை.

    பதிலளிநீக்கு
  4. சிறிய எழுத்துப் பிழை, கவனியுங்கள்.
    நுற்று - நூற்று.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அனைத்தும் சூப்பர் நண்பரே. அதே போல வாழ்க்கைக்கான பாடத்தை, வாழ்க்கையில் இருந்து எடுத்து கூறியதும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  6. கோபுரத்துள் கோபுரம் போன்ற அழகான புகைப்படங்கள்.

    175க்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. சரவணன் ஹிட்ஸ் பாலோயர்ஸ் எல்லாம் ஒரு வகையில் நமக்கு உற்சாகம் அளிக்கும் விஷயம் தான் என்றாலும்.. அது மட்டுமே இல்லை. நீங்கள் தரமான இடுகைகள் எழுதி வந்தாலே போதும் இன்று இல்லை என்றாலும் என்றாவது நிச்சயம் கவனிக்கப்படுவீர்கள்.

    எனக்கு கூட ஒரு சில விசயங்களில் ஏமாற்றங்கள் உண்டு இருந்தாலும் அப்போதைக்கு வருத்தப்பட்டு விட்டு அதன் பின் மறந்து விடுவேன். நாம் பொறுமையாக யோசித்தால் எதில் தவறு செய்கிறோம் என்பதை எளிதாக கண்டறிந்து விடலாம் அதன் பிறகு நம்மை மாற்றிக்கொள்ளலாம்..ஆனால் சரியாக கொஞ்சம் மாதங்கள் பிடிக்கும் அவ்வளோ தான்.

    175 க்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. உற்சாகம் கற்றுத்தரும் அற்புத பகிர்வு சார் ..
    படங்களும் , பதிவும் மனதில் பதிந்து விட்டது ..
    மேலும் தொடர்ந்து அழகிய படைப்புகள் தந்திட வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன் ..
    நன்றி ..175 க்கு அன்பு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நிசாமுதீன்

    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தென்றல் சரவணன்

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாலா

    தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மாதவி

    பதிலளிநீக்கு
  11. இந்த விசயத்தில் எனக்கு வருத்தமில்லை கிரி அப்படி ஒன்றும் சாதனை ஒன்றும் செய்து விடவில்லை நான் என்பதை குறிப்பிடும் விதமாக தான் சொன்னேன் தங்கள் வாழ்த்திற்கு நன்றி கிரி

    தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அரசன்

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு நிகழ்வு. உழைப்பின் மீது உங்களுக்கு இருக்கும் மரியாதை இதில் புலப்படுகிறது. மென்மேலும் உயர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லாமார்ச் 03, 2012 9:10 AM

    175 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லாமார்ச் 03, 2012 9:13 AM

    நீங்கள் சுபேரா எழுதுறிங்க ..என்டைக்காவது ஒரு நாள் பெரிய ஆள் ஆவீங்க உங்க எழுத்துக்களினால் ....

    நீங்க பீல் பண்ணலாம் ஒண்டுமே இல்லை ....எனது அனுபவக் கதை எல்லாம் கேட்டிங்க எண்டால் ரத்தக் கண்ணீரே விடுவேங்கோ ...

    எனது கவிதைக்கு ,இதுலாம் கவிதையா எண்டு கிண்டல் பண்ணுவார்கள் பலர் ... ப்ளொக்ஸ் எழுதப் போறேன் நு சொல்லும்போது சிரித்தவங்க தான் நிறைய பேர் ....எனக்கு ப்லோகேர்ஸ் அவார்ட் கொடுத்த போதும் நண்பர்,நண்பிகள் எல்லாம் சிரிச்சி போட்டாங்க ...

    நான் award கொடுக்கணும் நினச்ச ஒருவரிடம் கதைச்சேன் ..கலை கிட்ட வாங்கிய அவார்ட் எண்டு பெரிய எழுத்தில் உங்கட ப்ளோகில் போடணும் எண்டு ...அதற்க்கு அவர் ,"எம்மா தாயே என்னோட ப்ளொக்ஸ் க்கு வர போல்லோவேர்ஸ் திரும்படி என் ப்ளொக்ஸ் பக்கமே வரக் கூடதுன்னு நினைக்கிறியா எண்டு காமெடி பண்ணினாங்கள் ...நானும் சிரிச்சேன் ...

    கொடுக்கக் குட தகுதி இல்லையோ எண்டு மனம் வருந்தினேன் ...
    நானும் சுபேரா எழுதி பெரிய ஆள் ஆகி என்டைக்கவ்து ஒரு நாள் அவார்ட் கொடுக்கணும் அதே நண்பனுக்கு ...அப்போ அவர்கள் மானத்தை வாங்கணும் என்ட முடிவில் இருக்கான் நான் ...

    பதிலளிநீக்கு
  15. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கல்யாண் சார்
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்

    பதிலளிநீக்கு
  16. நன்றி கலை
    மேலும் தங்களை பற்றி சொல்லியிருக்கிறீர்கள் கவலை வேண்டாம் பாராட்டு பெறுபவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்கள் எல்லாம் அவமானத்தில் இருந்து மீண்டு எழுந்தவர்கள் தான் உளியின் செதுக்கலில் தான் அழகான சிற்பம் கிடைக்கும் எனவே நீங்கள் கவலைபடுவதை விட்டு விட்டு வெற்றி பெற முயற்சி மேற்கொள்ளுங்கள் நிறைய படியுங்கள் அப்போது தான் கொஞ்சமேனும் எழுத வரும் எனக்கு கூட எழுதுவதின் ரகசியம் புலபடாமல் இருந்தது பின்பு கடும் முயற்சிக்கு பின் ஏதோ கிறுக்க ஆரம்பித்திருக்கிறேன்
    கண்டிப்பாக ஜெயிப்பீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்