சனி, மார்ச் 03, 2012

என் காதல் சொல்ல நேரமில்லை....



என் காதல் சொல்ல நேரமில்லை....

நான் இளையராஜா பாடல்களின் தீவிர ரசிகன் எப்போதும் பழைய பாடல்களே எனது விருப்பமாக இருந்தாலும், புதிய பாடல்களும் அவ்வப்போது என்னை மயிலிறகு போல் வருடும் அப்படி என்னை வருடிய பாடல் பற்றிய பகிர்வு தான் இது

என் காதல் சொல்ல தேவையில்லை என்பது பாடலின் வரிகள். ஆனால் பாடல் பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். நா முத்துகுமாரின் காதல் வரிகளுக்கு யுவனின் இசை கை கோர்க்க லிங்குசாமியின் இயக்கத்தில் இந்த பாடலுக்கான விசுவல் என்னை மிகவும் கவர்ந்தது .




தமன்னா காபி அருந்த கார்த்தி அவரையே அருந்துவது போல் பார்க்க, அவர் பேருந்தில் ஏற இவருக்கு தன் மனதுக்குள்ளே அவர் நுழைவது போல் தோன்ற, அவர் உலர வைத்த துணிகளுக்கு கிளிப் போட கார்த்திக்கு தன் மனதையே வாங்கி தன் மனதோடு சேர்த்து கிளிப் போடுவது போன்று அவருக்கு தோன்றுகிறதோ இல்லையோ நமக்கு தோன்ற வைக்கும் காட்சிகள்


கார்த்தி, தமன்னா குளியலறையில் தாழ்பாள் சரியில்லை என்று சொல்லும் போது அதை சரி செய்து கொடுத்து விட்டு இங்கே இவர் காதலில் நனைவார்.

தமன்னா குளித்து முடித்து வெளிவந்து நடக்கையில் உருவான கால் தடங்கள் பார்த்து தன் மனத்தினில் காதலின் தடங்கள் விழுந்ததை போன்று சந்தோசமாய் அதை பின் தொடர்ந்து செல்வார்.

தமன்னா செய்யும் மோனோ ஆக்டிங் பார்த்து ஆச்சரியமும் அவர் துவண்டு விழுவது கண்டு அதிர்வதும் அவர் எழுந்து சிரித்தவுடன் சிரிப்பதும் என்று கார்த்தி யின் முக பாவங்கள் அருமையாய் வெளிபட்டிருக்கும்.

பக்கத்துக்கு வீட்டில் தம்பதியின் உல்லாசத்தை பார்த்து இருவரும் கண்களால் காதல் பரிமாறி கொள்வதும் சிறுவர்கள் கிரிக்கெட் பந்து கேட்டு வர கார்த்தி தமன்னாவை கேட்குமாறு சொல்ல தமன்னா கொஞ்சம் பிகு செய்து விட்டு பின் கொடுக்குமாறு சைகை செய்ய பின் கார்த்தி தருவதும் என்று ரசிக்க வைக்கும் காட்சிகள்.

அதே போல் கார்த்தி (முதல் சரணத்திற்கு பின் வரும் பல்லவியில் ) உன் விழியாலே என்று பாடி ஆடுவார் பாருங்கள் நாமும் கொஞ்சம் ஆடுவோமா என்று தோன்ற வைக்கும் காட்சி இது

தமன்னாவின் வீட்டு அட்ரெஸ் கிடைத்து விட்டது என்று நண்பன் சொன்னவுடன் அவர் குதுகலிக்க இவர் வேதனையை உள்ளுக்குள் மறைத்து கொண்டே புன்னகைக்க என்று காதலின் பரிமாணங்களை கவிதை போன்று விசுவலில் செய்திருப்பார் இயக்குனர்
லிங்குசாமி

அதாவது லவ் பண்ணுங்க பாஸ் லைப் நல்லா இருக்கும் என்று சொல்வது போல் இருக்கும் இப் பாடல் காட்சியை எப்போது காண நேர்ந்தாலும் நான் பாடலை முழுக்க ரசித்து விட்டு தான் நகர்வேன்

எத்தனை முறை பார்த்தாலும் எனை சலிப்படைய விடுவதில்லை மாறாக எனை களிப்படைய வைக்கிறது என்றே சொல்லலாம்.

ஆமா நான் மட்டுமே சொல்றேனே உங்களுக்கு எப்படி இருக்குது இந்த பாடல்
கொஞ்சம் சொல்லுங்களேன்

ஆர்.வி.சரவணன்

11 கருத்துகள்:

  1. அந்தப் பாடலை இவ்வளவு ரசித்திருக்கிறீர்கள்.ரசிக்க வைக்கும் பாடல் காட்சிகள்தான்...இப்போ இன்னும் அதிகமா ரசிக்கத் தோணுது...லிங்குசாமி க்கு தெரிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவார்!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாமார்ச் 03, 2012 8:50 AM

    எனக்கும் இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும் ....

    பாடலும் வடிவா இருக்கும் ...கார்த்தி தமன்ன அக்டிங்கும் சுபேரா இருக்கும் ...நீங்க சொல்லி இருக்கும் விதமும் சூப்பர்


    நானும் நகர மனகொள்ளுவதில்லை டிவி யில் இந்த பாடல் கேக்கும்போது

    பதிலளிநீக்கு
  3. பாடலின் ஒவ்வொரு வரியின் காட்சியையும் குறிப்பிட்டு நினைவு கூர்ந்த விதம் சுவையாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  4. பாடலின் ஒவ்வொரு வரியின் காட்சியையும் குறிப்பிட்டு நினைவு கூர்ந்த விதம் சுவையாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. பாடலின் ஒவ்வொரு வரியின் காட்சியையும் குறிப்பிட்டு நினைவு கூர்ந்த விதம் சுவையாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  6. லிங்குசாமிக்கு தெரிந்தால் சந்தோசபடுவார் என்றால் எனக்கு அது சந்தோஷம் தான் நன்றி தென்றல் சரவணன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலை

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலையன்பன்

    பதிலளிநீக்கு
  7. நண்பரே பாடலை நன்கு உணர்ந்து கவனித்திருக்கிறீர்கள். இந்த படத்தில் மட்டுமே தமன்னா கொஞ்சம் அழகாக தோன்றுகிறார். குறிப்பாக இந்த பாடலில்

    பதிலளிநீக்கு
  8. கொஞ்சம் ஆழமான அலசல் என்றே சொல்லலாம் ..
    சார் எனக்கு நேரம் இருந்தும் காதல் தான் இல்லை ..

    முத்துக்குமாரின் முத்து வரிகள் இவை .. நன்றிங்க சார் பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு
  9. amam. enakum indha paatu romba pidikum. ketute irukanum pola. very nice song.

    பதிலளிநீக்கு
  10. ama enakum indha paatu romba pidikum.
    visual um sari, kekavum sari, romba nalarukum.

    பதிலளிநீக்கு
  11. அட. இவ்வளவு ஆழமாய் ரசித்திருக்கிறீர்கள். நானும் இப்ப தான் ரசித்தேன் ( நானும் ராஜா, யுவனின் ரசிகன்)
    நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்