சனி, ஜனவரி 07, 2012

நான் சொல்வது யாதெனில் ....




நான் சொல்வது யாதெனில் ....

(பாக்யராஜ் + புத்தக காட்சி + கொலைவெறி + ஏ.ஆர்.ரகுமான்)

முதல்லே உங்க எல்லாருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சந்தோஷம் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை உளமார பிரார்த்திக்கிறேன்
(தாமதமா சொல்றதுக்கு மன்னிக்கவும் )




பார்த்தது


நேற்று என் ரத்தத்தின் ரத்தமே படம் பார்த்தேன் டிவி இல் பாக்யராஜ் நடித்த படம் இந்த படத்தில் பாக்யராஜ் தான் வளர்க்கும் சிறுவர்களுக்கு கதை சொல்வார். ஒரு ஊரில் மன்னாங்கட்டியும் இலையும் நண்பர்களா இருந்தாங்க மழை பெய்யும் போது இலை, மண்ணாங்கட்டியின் மேல் இருந்து அது கரையாமல் பாதுகாக்கும். காற்றடிக்கும் போது மண்ணாங்கட்டி, இலையின் மேல் அமர்ந்து இலை காற்றில் பறக்காமல் பாதுகாக்கும் என்று சொல்லி கொண்டிருக்கும் போது ஒரு சிறுவன் கேட்பான் காற்றும் மழையும் சேர்ந்து வந்தால் என்னாகும் என்று. அதற்கு பாக்யராஜ் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிப்பார் பாருங்கள் அது வல்லவோ பாக்யராஜ் டச். இது எதற்கு இப்ப என்கிறீர்களா

(இன்று ஜனவரி 7 பாக்யராஜ் பிறந்தநாள் ஹாப்பி பர்த்டே பாக்யராஜ் சார் )


படித்தது

புத்தக கண்காட்சி ஆரம்பமாகி விட்டது சாகித்ய அகாடமி விருது பெற்ற வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவல் வாங்க வேண்டும் சாண்டில்யனின் ஜலதீபம் வாங்க வேண்டும் என்று இருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் புத்தகம் வாங்கவில்லை என்றால் தூக்கம் வராது எனக்கு. எல்லா புத்தகத்தையும் வாங்க முடியாது என்றாலும் என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதில் எனக்கு பிரியம் ஜாஸ்தி. ஒரு ஸ்டாலையும் விடமாட்டேன் சுற்றி சுற்றி வருவேன் எப்படியும் நான் அந்த அரங்கை சுற்றி முடித்து விட்டு வெளி வர ஐந்து மணி நேரமாவது ஆகும். அந்த நேரங்களில்வெளி உலகமே மறந்து போய் விடும் எனக்கு

(புத்தகம் வாங்குறியே படிக்கிறியானு கேட்கறீங்களா நான் ஏற்கனவே வாங்கிய மன்னன் மகள், யவன ராணி இன்னும் தொட கூட இல்லை)


கேட்டது

கொலைவெறி பாடல் இந்த ஒரே பாடல் மூலம் தனுஷ் இந்தியா முழுக்க பிரபலமாகி விட்டார் எல்லாரும் இதையே சொல்றாங்களே னு நானும் இந்த பாடலை கேட்டேன். முதல் முறை கேட்ட போது ஒன்றும் இம்ப்ரெஸ் ஆகவில்லை. தொடர்ந்து கேட்டதில் பாடல் பிடித்து போய் இப்போது என் ஹம்மிங்கே இந்த பாடல் தான்

(ஒரு படத்தில் தனுஷ் பார்க்க பார்க்க தான் பிடிக்கும் னு சொல்வது போல் தொடர்ந்து கேட்க கேட்க தான் பிடிச்சுதோ)




எழுதியது

ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்ற போது நான் எனது டைரி யில் எழுதி வைத்திருந்ததை இதோ உங்களுக்காக தருகிறேன் நல்லா இல்லேன்னா திட்டாதீங்க (அப்போது நான் வலை தளம் ஆரம்பிக்கவில்லை )

ஆஸ்கர் என்பது அனைவருக்கும் ஒரு கனவானது
உனக்கோ அது இங்கே நனவானது

ஆஸ்கர் அரங்கில் உன்னால் தமிழ் பேசப்பட்டது
தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் உன் வசப்பட்டது

உன் இசை எம் இதய அரங்கில் இன்பம் வார்த்தது
உலக அரங்கையே உன் பால் ஈர்த்தது

செய்த சாதனைகளை இறைவனுக்கே சமர்ப்பிக்கிறாய்
செய்ய போகும் சாதனைக்கு உன் உழைப்பை வித்திடுகிறாய்

அடக்கத்திலும் ஆன்மீகத்திலும் இன்னொரு ரஜினி நீ
சிகரங்களை தொட முயற்சிப்பதில் இன்னொரு கஜினி நீ


(இது எதற்கு என்கிறீர்களா ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு நேற்று பிறந்த நாள்
ஹாப்பி பர்த் டே ஏ.ஆர்.ரகுமான் சார் )




ஆர்.வி.சரவணன்








7 கருத்துகள்:

  1. புத்தகக் கண்காட்சி போகனும்...முதல் நளே முதல் ஷோ போவது சினிமா ரசிகர்களுக்கு எவ்வளவு பிரியமோ அவ்வளவு பிரியம் புத்தகக் கண்காட்சி செல்வது...ஆனால் இன்னும் கிளம்பல.... நாளைக்கு?!!!...ம்ம்ம்....போகனும்.
    நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  2. ஒரே பதிவில் மூனு வாழ்த்துக்களா..? :-))

    பதிலளிநீக்கு
  3. கலந்து கட்டி, மிக்சர்போல இருந்தது

    பதிலளிநீக்கு
  4. படித்தது, கேட்டது, எழுதியது என அனைத்துமே சூப்பர்... வாழ்த்துக்கள் உட்பட!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்