சனி, நவம்பர் 19, 2011

இளமை எழுதும் கவிதை நீ .... 5



இளமை எழுதும் கவிதை நீ .... 5






அன்பே உன் சொந்தங்களால் எனை நீ கூறு போட்டாலும்
என் ஒவ்வொரு கூறும் உன் பெயர் சொல்லும்



உமா வகுப்பறையிலிருந்து வெளிவந்து செல் போனில் தன் தந்தையிடம் விவரம் சொல்லி அவரை கல்லூரிக்கு உடனே வர சொன்னாள். அவர் வந்து சேர்வதற்கு முன் நாம் கொஞ்சம் பிரின்சிபால் ரூம் சென்று வந்து விடுவோம்

கோபமுடன் கிளம்பிய பேராசிரியர் பிரின்சிபாலிடம் சென்று நடந்த விவரங்களை கோபமுடன் தெரிவித்தார்

"எப்படி சார் இங்க வேலை பார்க்க முடியும் "என்றார்

அதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்த பிரின்சிபால்

"என்ன பண்றது பிரச்னை இல்லாத இடம் ஏது நமக்கு முக்கியம் காலேஜ் தான் சேர்மனும் சரி மினிஸ்டரும் சரி ரொம்ப நல்லவங்க அவங்களுக்காக தான் நாங்க இங்கே வேலை பார்க்கிறோம் நாங்க அவங்களை கண்டுக்கிறதில்லை நீங்களும் கண்டுக்காதீங்க நாளைக்கு சேர்மன் வரார் அவர்கிட்டே சொல்லுவோம் அப்புறம் அவர் பாத்துக்குவார் நீங்க அவர் வர வரைக்கும் அந்த கிளாஸ் போக வேண்டாம் "

என்று சமாதானம் செய்தார்

சுப்ரமண்யன் ஒரு பெருமூச்சுடன் தனது அடுத்த வகுப்பு என்ன என்று பார்த்து அங்கே செல்ல ஆயத்தமானார்.


தொடரும்

ஆர்.வி.சரவணன்

6 கருத்துகள்:

  1. அருமையாக கதையை நகர்த்திக் கொண்டு போகிறீர்கள்
    நல்ல திரைக்கதையைப் படித்தது போல் இருக்கிறது
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. // என்றவாறு உள் நழைந்தார்//
    இந்த இடத்திலேயே தொடரும் போட்டிருக்கலாமே?!?

    பதிலளிநீக்கு
  3. கதையில் நிறைய நெளிவு சுளிவுகளை காண முடிகிறது ...
    கதையின் பயணத்தில் எங்களையும் கூட்டிச்செல்கிறது ...
    அடுத்து என்ன ....அடுத்து என்ன ... என்ற ஆவலை தூண்டுகிறது ....
    வாழ்த்துக்கள் சார் ....

    பதிலளிநீக்கு
  4. சுவ‌ராஸ்ய‌ம் கூடுது..தொட‌ருங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்.. க‌ட்டாய‌ம் ப‌டித்திட‌னும் முடிவை..

    பதிலளிநீக்கு
  5. முதலில் சுவாரசியம் இல்லாமல் தான் படித்தேன். படிக்க படிக்க அட போட வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்