சனி, நவம்பர் 27, 2010

இசைகுயில்களின் இசை மழையில்

இசைகுயில்களின் இசை மழையில்

என்னை தொடர் பதிவு எழுத அழைத்திருந்த பாலா அவர்களுக்கு நன்றி

பாடல்களை பற்றி எழுது என்றவுடன் நான் பாட்டுக்கு பாடல்களை கணக்கெடுத்து இது நல்லாருக்கும் இல்லே இல்லே இது தான் நல்லாருக்கும் என்று ஏதோ என்னால் முடிந்த எனக்கு பிடித்த இசை குயில்களின் பாடல்களில் பத்து எடுத்து தொகுத்து தந்திருக்கிறேன் .நடுநடுவே என்னை விட்டுட்டியே இந்த பாட்டை மறந்துட்டியே என்று மனசு வேறு படுத்தி எடுத்து விட்டது ஒரு வழியாக நான் தேர்ந்தெடுத்த பத்து இசை குயில்களும் அவர்களது இனிய குரலில் பாடிய கீதங்களும் இதோ உங்கள் பார்வைக்கு




P. சுசீலா
பாடல் மாலை பொழுதின் மயக்கத்திலே
படம் பாக்யலட்சுமி

சுசீலா அவர்களின் இந்த பாடல் என் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்த பாடல் ஏன் தோழி என்று அவர் பாடும் போது பதில் சொல்லியாக வேண்டும் என்பது போல் மனம் பரபரக்கும் பாடலில் தொடர்ந்து இழையோடும் ஏக்கம் எப்பொழுது கேட்டாலும் எனை ஈர்க்கும்


S.ஜானகி
பாடல் கண்ணன் வந்து பாடுகின்றான்....
படம் ரெட்டைவால் குருவி

ஜானகியின் குரல் இனிமை பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. எத்தனையோ பாடல்களில் அவர் குரல் நமை ஈர்த்தாலும் இந்த பாடலில் ஒரு இனிமை உண்டு. இந்த இனிமை தொடர்ந்து கேட்க வேண்டும் போல் எனை தூண்டும்

எல் .ஆர். ஈஸ்வரி
பாடல் பட்டத்து ராணி பாடும் .........
படம் சிவந்த மண்

கணீரென்ற இவரது குரலில் வந்த பல பாடல்களில் எனை கவர்ந்தது இப் பாடல்


வாணி ஜெயராம்
பாடல் மேகமே மேகமே ....
படம் பாலைவனச்சோலை


இவரது குரலில் இருக்கும் கம்பீரம் என்னை கவர்ந்த ஒன்று இது எல்லா பாடலிலும் சோகம் இழையோடும் இந்த பாடலிலும் அந்த கம்பீரம் வீற்றிருக்கும் . நான் எப்பொழுது கேட்க நேர்ந்தாலும் எனை வியப்பில் ஆழ்த்தும் இது

ஜென்சி
பாடல் இதயம் போகுதே ....
படம் புதிய வார்ப்புகள்

இவர் பாடியது சில பாடல்கள் தான் என்றாலும் ஒவ்வொரு பாடலும் இவரது குரலால் எனை கவர்ந்திருக்கிறது இந்த பாடல் எனை மிகவும் கவர்ந்திருக்கிறது

எஸ்.பி .ஷைலஜா
பாடல் ஆசையை காத்துலே தூது விட்டு ....
படம் ஜானி

இவரது பாடல்களில் நான் விரும்பி ரசிக்கும் பாடல் இது
இந்த பாடலில் எனை கவர்ந்தது.இசையும் இசையோடு சேர்ந்து வரும் இவரது குரல் இனிமையும்

சித்ரா
பாடல் நானொரு சிந்து ....
படம் சிந்து பைரவி


சின்ன குயில் சித்ரா என்ற பெயர் பெற்ற இவரது பாடல்களில் நானொரு சிந்து பாடலில் அவர் பாடியிருக்கும் விதம் ஒரு தனி அழகு தான்

ஸ்வர்ணலதா
பாடல் மாலையில் யாரோ மனதோடு பேச
படம் சத்ரியன்

இவரது
குரல் இனிமை யில் வந்த பாடல்கள் அனைத்தும் ஒரு இனிமை தான் அதிலும் இந்த பாடல் தருவது தனி இனிமை தான். இப்பாடல் எப்பொழுது கேட்டாலும் மனதோடு பேசுவது போல் தான்
தோன்றும் எனக்கு
(இவரது மறைவு இசைத்துறைக்கு ஒரு இழப்பு தான்)

லதா மங்கேஷ்கர்
பாடல் ஆராரோ ஆராரோ....
படம் ஆனந்த்


இசை குயில் பாடிய வளையோசை கல கல .... பாடல் எனக்கு விருப்பமான ஒன்று. சோலோ சாங் எனும் போது ஆராரோ ஆராரோ பாடல் கேட்கும் போதெல்லாம் எனை தாலாட்டும் இன்றும்

நித்யஸ்ரீ
பாடல் கண்ணோடு காண்பதெல்லாம்....
படம் ஜீன்ஸ்

நித்யஸ்ரீ பாடும் இப்பாடல் எனக்கு எனக்கு மிகுந்த விருப்பமான ஒன்று


ஆர்.வி.சரவணன்



11 கருத்துகள்:

  1. 1 , 4 , 6 , 8 , 10 எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  2. மிக மிக இனிமையான பாடல்களின்
    சுவையான தொகுப்பு சரவணன்!

    பதிலளிநீக்கு
  3. நல்ல தெரிவுகள்..
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சைவ கொத்து பரோட்டா

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலையன்பன்

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹரிஸ்

    பதிலளிநீக்கு
  5. இனிமையான பாடல்கள், அருமையான தேர்வுகள்!

    பதிலளிநீக்கு
  6. நல்ல தேர்வுகள். எனக்கு எல்லா பாடகர், பாடகிகளும் பிடிக்கும். குறிப்பிட்டு யாரையும் சொல்வது கொஞ்சம் கஷ்டம்.

    பதிலளிநீக்கு
  7. நீங்க வரிசைப் படுத்தி இருக்க எல்லாமே சூப்பர் சாங் தான்.. இருந்தாலும் அதில்,

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே..... சூப்பர் சாங் தான்... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

    மாலையில் யாரோ மனதோடு பேச...... ரொம்ப அழகான மெலடி... (பாடியவங்க.. இப்ப இல்லன்னு இன்னமும் நம்ப முடியலை)

    கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா.... எஸ் எஸ்.. இதுவும் சூப்பர் சாங். ரொம்ப பிடிக்கும்...

    பகிர்வுக்கு நன்றிங்க.. :-))

    பதிலளிநீக்கு
  8. அருமையான தொகுப்பு நண்பரே,

    தொடரட்டும் உங்கள் பணி
    நம்ம ராகதேவனின் பாடல்கள் அதிகம் எதிர்பார்க்கிறேன்

    உங்கள் ரசனையில் தொடருங்கள்.....

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. நண்பரே வெகு நாட்களுக்கு பிறகு இப்பொழுதுதான் இணையத்தில் உலாவும் வாய்ப்பு கிடைத்தது. அதனால்தான் லேட். மன்னிச்சுக்கங்க.

    என்னுடைய அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  10. 80- களில் இளையராஜாவால் இரு இனிய இசை மலர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் ஜென்சி மற்றவர் SP.ஷைலஜா. இவர்கள் இருவரின் குரல்களில் வித்தியாசமான
    ரசனை உண்டு.
    ஜென்சி பாடிய............என் வானிலே ஒரே வெண்ணிலா .....................
    ஷைலஜா பாடிய ....மலர்களில் ஆடும் இளமை புதுமையே ...................
    இரண்டு பாடல்களும் வித்தியாசமான இனிமைதான் . இருவரின் குரல்களில் ஒரு குழைந்தை தனம் இருக்கும் .
    இருவரும் சேர்ந்து பாடிய ... ஆயிரம் மலர்களே மலருங்கள் .............பாடலும் இனிமைதான்
    இவ் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலில் ..............
    ஆரம்ப ஹம்மிங் SP . ஷைலஜா ஹா ஹா ..........என்று பாட தொடர்ந்து ஜென்சி ஆயிரம் மலர்கள் ...........என்று பாட அழகாக இருக்கும் . தொடர்ந்து ஜென்சி ...வானில்லே வெண்ணிலா .................என்று பாடுவார் .அதை தொடர்ந்து அடுத்த சரணம் SP .ஷைலஜா
    கோடையில் மழைவரும் வசந்த காலம் ....................என்று பாடி முடிப்பார் . இருவரின் குரல்களும் இரு வேறு இனிமை
    80 - களில் வானொலியில் ஜென்சி , ஷைலஜா பாடல்கள் வலம் வந்ததை மறக்க முடியவில்லை. இப்பொழுது கேட்கும் பொழுது பசுமை . காலத்தால் அழியாத இரு இசை குரல்கள் ஜென்சி , SP.ஷைலஜா
    சமீபத்தில் நண்பிகளான ஜென்சி யும் SP.ஷைலஜா வும் - "இரு பறவைகள் " எனும் இசை நிகழ்ச்சியில் கலந்து இருவரின் 80-களில் உருவான இனிய பாடல்களுடன் - ஆயிரம் மலர்களே மலருங்கள் ...............பாடலையும் பாடினார்கள் .

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்