ஒரு பாராட்டு கடிதம்
இன்று கார்த்திகை திருநாள் .
நான் திருவண்ணாமலை சென்ற போது எடுத்த படம் இது
இந்த மலையானது 2668 மீட்டர் உயரம் கொண்டது 14 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டது. மலையை சுற்றிலும் எட்டு சிவலிங்கங்கள் உள்ளன .
**************
நான் படித்த கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தல் வந்தது . தேர்தலுக்கு நின்ற இருவருமே என் வகுப்பில் என்னுடன் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தான் . அதில் ஒருவர் கல்லூரியில் நன்கு பிரபலமானவர். நண்பர்கள் நிறைய உண்டு அவருக்கு. இருந்தும் அவருக்கு வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை.
காரணம் கட்சி சார்புடன் அவர் நின்றது எனக்கு பிடிக்கவில்லை. (மாணவ சமுதாயத்தில் அரசியல் நுழைவதை நான் விரும்புவதில்லை ).
ஆகையால் மற்றவருக்கு வாக்கு செலுத்தலாம் என்று முடிவு செய்திருந்தேன். யாருக்கு வாக்கு செலுத்த முடிவு செய்திருந்தேனோ அவர் என்னிடமும் மற்ற நண்பர்களிடமும் வாக்கு சேகரித்த போது போது எனக்கு ஓட்டு போடுங்கள் அவருக்கு போட வேண்டாம் ஏனெனில் அவர் நமது சாதியை சேர்ந்தவரில்லை என்று கூறி வாக்கு கேட்டதும் கடுப்பாகி விட்டேன் .
சாதியை முன்னிறுத்தியதால் நான் அவருக்கு போடாமல் கட்சி சார்புடன் நின்ற நண்பருக்கே போட்டேன்அவரே வெற்றியும் பெற்றார். அவர் வெற்றி பெற்றதில் நான் அடைந்த மகிழ்ச்சியை விட எனது கொள்கையின் படி நான் நடந்து கொண்டது எனக்கு மன நிறைவு கிடைத்தது (ஆண் சாதி பெண் சாதி தவிர வேறேது சாதி )
இந்த நிகழ்வை தெரிவித்து கடிதம் எழுதிநடிகர் இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழுக்கு அனுப்பினேன்.(அந்த சமயத்தில் தான் இது நம்ம ஆளு படம் வெளிவந்து ஓடி கொண்டிருந்தது ) என் கடிதத்தை பார்த்து எனக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்கள் பாக்யாவில் இருந்து .
இதை படித்து விட்டு ரொம்ப சந்தோசப்பட்டேன் .எனது முக்கிய கடிதங்களில் ஒன்றாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்
இதோ அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு
பாரதி சரவணன் னு பேர் போட்டிருக்கே அப்படின்னு குழப்பமாகாதீங்க
புனை பெயர் எல்லாரும் வச்சிருக்காங்களே நாமும் வச்சிக்கலாம் னு நினைச்சு நான் வைத்து கொண்ட பேர் அது ஹி....ஹி
ஆர்.வி.சரவணன்
கொண்ட கொள்கை சிறப்பானது... பாக்யா கடிதத்துக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஆமா... கேக்க மறந்துட்டேன்...
பதிலளிநீக்குபாரதி இப்ப எங்க இருக்காங்க...????
உங்கள் வருகைக்கு கருத்துக்கும் நன்றி குமார்
பதிலளிநீக்குஆமா... கேக்க மறந்துட்டேன்...
பாரதி இப்ப எங்க இருக்காங்க..
ஆகா எப்படில்லாம் கேட்கிறாங்க கேள்வியை
வாழ்த்துக்கள் நண்பா
பதிலளிநீக்குநல்லதுங்க, உண்மையில் சொல்லனும்னா கல்லூரிக்காலங்கள்ல நமக்கெல்லாம் சாதி எதுக்குங்கிற வெறி இருந்துகிட்டேயிருக்கும், இருக்கணும். அதுதான் மாணவப்பருவத்திற்குண்டான மரியாதை. அதை தாங்களும் கடைபிடித்ததில் சந்தோஷம். மறுபடி அந்த அனுபவக்கடிதம் அந்த இதழில் இடம்பெற்றதா? ...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சரவணன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாசி வாழ்த்து கடிதம் வந்ததோடு சரி எனது கடிதம் பாக்யா இதழில் வெளியாகவில்லை
பதிலளிநீக்குஇந்தக் கொள்கையை எல்லோரும் பின்பற்றினால் நாடு உருப்படும்.
பதிலளிநீக்குஅப்பவே இந்த சரவணனுக்குள்ளும் என்னவோ இருந்து இருக்கு பாரேன்! :-) (7 G ரெயின்போ காலனி ஸ்டைல் ல் படிக்கவும்)
பதிலளிநீக்கு