செவ்வாய், செப்டம்பர் 28, 2010

புது பைக் வேண்டும்


புது பைக் வேண்டும்
உமா பிறந்த வீட்டுக்கு வருகிறாள் என்றாலே எல்லோருக்கும் உதறல் எடுக்கும் இன்று அவள் வருகிறேன் என்று போன் செய்தவுடன் அப்பா, அம்மா, அக்கா, தங்கை அனைவரும் என்ன புது பிரச்னையுடன் வருகிறாள் என்று தெரியாமல் மனசுக்குள் குமைந்தார்கள் என்ன பிரச்னையுடன் வருகிறாள் என்று தெரியவில்லையே என்று யோசித்து கொண்டிருக்கும் போதே வந்து விட்டாள்

வந்தவுடன் டூ வீலர் வாங்கி தர சொல்லி மாமியார் பிடுங்குவதாக புலம்ப ஆரம்பித்தாள்

அம்மா, "இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு இருக்கு அதுக்கு செலவு பண்ணனும் உன் அக்கா வீட்டுக்காரர்இருக்கார் மூத்த மாப்பிள்ளை.அவருக்கே வாங்கி தராத போது உன் புருசனுக்கு மட்டும் எப்படிம்மா வாங்கி தர முடியும்"


"இதை நான் சொல்லாமே இருப்பேனா சொல்லியாச்சு அதுக்கு எங்க மாமியார் சொல்றாங்க அவங்களுக்கு கேட்க துப்பில்லை அதுக்காக நாங்க கேட்காமே இருக்க முடியுமா னு சொல்றாங்க"


" கல்யாணம் பேசறப்ப இதெல்லாம் பேசவே இல்லையே உமா
பின்ன எப்படி அவங்க கேட்கலாம் " இது அப்பா

" அப்பா நீங்க இங்க உட்கார்ந்து கிட்டு ஆயிரம் பேசலாம் அங்க நான் படற அவஸ்தை எனக்கு தான் தெரியும்"

"இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு நிக்குதம்மா "இது அக்கா

"என்னோட கல்யாண வாழ்க்கையே நின்னு போயிடும் போல இருக்குக்கா"


"மாப்பிள்ளை என்ன சொல்றார்."இது அப்பா

"என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில் நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்."

"முடிவா என்ன தான் மா சொல்லியிருக்கே"

"வந்தா வண்டியோட வரேன் இல்லேன்னா என்னை தலைமுளுகிடுங்க னு சொல்லிட்டு வந்திருக்கேன்"

"அவங்க சொல்லலேன்னாலும் நீயே அவங்களுக்கு எடுத்து கொடுப்பே போலிருக்கு " இது தங்கை

"சும்மாருடி அவமானப்பட்டு வந்திருக்கிறது எனக்கு தான் தெரியும் உனக்கென்ன"

வேறு வழி இல்லாமல் உமாவின் அப்பா மாப்பிளையை கடைக்கு வர சொல்லி அவருக்கு பிடித்த பைக்கை பணம் செலுத்தி வாங்கி கொடுத்தார்.

உமாவின் புகுந்த வீட்டில் எல்லோருக்கும் வாயெல்லாம் பல்
"பரவாயில்லை இப்பவாவது வாங்கி கொடுக்குனும்னு மனசு வந்துதே உங்கப்பாவுக்கு "என்றார் மாமியார் பெருமூச்சுடன்

"கூடவே புது வண்டி வந்திருக்கு ரெண்டு பெரும் கோயிலுக்கு போயிட்டு வாங்க" என்று சொன்னார் மாமனார்.

உமாவின் கணவன் சந்தோசமாய் " வா உமா போயிட்டு வரலாம்" என்றான்.

"உமா நான் வரலைங்க நீங்க போயிட்டு வாங்க"

"ஏன் அப்படி சொல்றே"

"எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசுலே வந்த இந்த பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே

"உங்களுக்கு மாமனார் வாங்கி
கொடுத்த வண்டிலே போறது தான் கௌரவம்"
ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் "

என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும் அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.

ஆர்.வி.சரவணன்

16 கருத்துகள்:

  1. சிறிய கதையில் பெரிய கருத்து!! நல்லா இருக்கு சரவணன்.

    பதிலளிநீக்கு
  2. //"உங்களுக்கு மாமனார் வாங்கி
    கொடுத்த வண்டிலே போறது தான் கௌரவம்"
    ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம்''//

    அருமையான பதில்

    பதிலளிநீக்கு
  3. இறுதி வ‌ரிக‌ள் க‌ன்ன‌த்தில் அறைப‌வை... ந‌ல்லா இருக்கு ச‌ர‌வ‌ண‌ன்.

    பதிலளிநீக்கு
  4. மனசு விட்டு பாராட்டலாம் உங்களை சரவணன்..என்ன ஒரு கதை படிச்ச இந்த நிமிடத்திலிருந்து உங்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகுது..வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. நல்ல கருத்தைச் சொல்கிறது கதை.

    பதிலளிநீக்கு
  6. gunalakshmi commented on your story 'புது பைக் வேண்டும்'

    'இன்றும் பல பெண்களின் நிலைமை இதுதான்...
    உண்மை எதிரொளிக்கிறது.
    நீங்க இப்படி இருக்கமாட்டீங்கன்னு நம்பரேன்... தோழரே..'



    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி
    கதாநாயகி உமா சொல்வது போல் சொந்த உழைப்பில் வாழ்வது தான் கெளரவம் என்று நினைப்பவன் தான் நானும் நன்றி

    r.v.saravanan

    பதிலளிநீக்கு
  7. பணம் பிடுங்கும் மாப்பிள்ளைகளுக்கு நன்றாக் உறைக்கட்டும்.........நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
    ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
    தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

    வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

    பதிலளிநீக்கு
  9. நன்றி வானதி
    நன்றி சைவ கொத்து பரோட்டா
    நன்றி தேவதர்ஷன்
    நன்றி ஸ்டீபன்
    நன்றி இர்ஷாத் உங்கள் அனைவரின் ஊக்கம் தான் என்னை எழுத வைக்கிறது
    நன்றி மாதேவி
    நன்றி குமார்
    நன்றி நிலாமதி

    நன்றி ராதிகா உங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. Nice story to remember for ever. There are two types of failures in life. 1. Those who think and never do, and 2. those who do and never think. Among us so many people think, to do so many things in the life but never done it. Saravanan had done it. An appreciable short story writer - Rajaram, Mumbai

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்