சனி, செப்டம்பர் 04, 2010

இன்க்ரீமென்ட்





இன்க்ரீமென்ட்

"சார் சார் கொஞ்சம் பார்த்து போடுங்க சார் விலைவாசி ஏறிடுச்சி"

"நோ நோ இதுக்கு மேல கண்டிப்பாக முடியாது "

கெஞ்சுவது கிளார்க் சேகர்
மிஞ்சுவது ஜெனரல் மேனேஜர் பரத்

அன்று அலுவலகத்தில் இன்க்ரீமென்ட் பேசி கொண்டிருந்தார்கள் . எல்லா ஊழியர்களும் எப்படியாவது நாம் நினைக்கும் இன்க்ரீமென்ட் வாங்கி விட வேண்டுமென்று மிகுந்த ஆர்வமாய் இருந்தனர் . மேனேஜர் முதலாளி சொல்லியிருப்பது போல் இழுத்து பிடித்து இன்க்ரீமென்ட் போடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

சேகரும் விடாபிடியாய் 500 இன்னும் கூட வாங்கி விட வேண்டும் என்று போராடினான். முடியாமல் ஏமாற்றமாய் வெளி வந்தான்.

மேனேஜர் M.D அறைக்குள் நுழைந்தார். சொன்னதை நிறைவேற்றிய திருப்தியுடன் .

"சார் நீங்க சொன்னது போல் பேசி முடிச்சிட்டேன் எல்லாருக்கும். சேகர் தான் கொஞ்சம் முரண்டு பிடிச்சார் "என்றார்.

"சில பேருக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாதுன்னு தான் சொல்வாங்க நீங்க அதை கண்டுக்காதீங்க" என்று மேனேஜர் கொடுத்த பேப்பர் வாங்கி பார்த்தவர்
"குட் குட் சரியான மேனேஜர் தான் எனக்கு வந்துள்ளீர்கள்" என்று பாராட்டினார்

இப்போது பரத்திற்கு இன்க்ரீமென்ட் எழுதி கொடுத்தார்.
அதை பார்த்த மேனேஜர் அதிர்ச்சியாய், " சார் இதை நான் எதிர்பார்க்கலே
எனக்கு ஒரு 2000 ஆவது கூட போட்டு கொடுங்க ப்ளீஸ் "என்றார்.

"நீங்களும் அவங்களை போல் கேட்காதீங்க பரத்"

சார் சார் கொஞ்சம் பார்த்து போடுங்க சார் விலைவாசி ஏறிடுச்சி

நோ நோ இதுக்கு மேல கண்டிப்பாக முடியாது
இப்போது

கெஞ்சுவது மேனேஜர்
மிஞ்சுவது M.D

ஆர்.வி.சரவணன்

14 கருத்துகள்:

  1. ஒருவ‌ருக்கு வைக்கும் ஆப்பு க‌ண்டிப்பாக‌ ந‌ம‌க்கும் திரும்பும்.. ஹா..ஹா.. ந‌ல்லா இருக்கு ச‌ர‌வ‌ண‌ன்.

    பதிலளிநீக்கு
  2. நாம் ஓன்று நினைக்க மேனஜர் ஓன்று நினைப்பார்...

    நல்லா இருக்கு...

    பதிலளிநீக்கு
  3. ஹாஹா
    பூனைக்கு ஒரு காலம் போல் யானைக்கும் ஒரு காலம் ..

    பதிலளிநீக்கு
  4. நல்லா இருக்குங்க..

    "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்."
    அருமையா சொல்லி இருந்தீங்க.. :-)

    பதிலளிநீக்கு
  5. பனியில் உறைந்த செர்ரி பழம் படம் ரொம்ப அழகா இருக்கு...!
    (ஆனா செர்ரி வீணாக போச்சேன்னு பீலிங்க்ஸ்.. )

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஸ்டீபன்

    நன்றி சைவ கொத்து பரோட்டா

    நன்றி பத்மா

    நன்றி ஆனந்தி

    நன்றி ஜெயந்த்

    நன்றி வானதி

    பதிலளிநீக்கு
  7. ஒரே கதை எப்படி ஆளாளுக்கு மாறுதுன்னு சொன்ன விதம் அழகு

    பதிலளிநீக்கு
  8. ஹி,.ஹி.ஹி. ,,,, இந்த மேனஜருக்கு ஆப்பு ரெடியா இருக்கும் நான் ஆபவே நினைச்சேன்

    பதிலளிநீக்கு
  9. நன்றி குமார்

    நன்றி இர்ஷாத்

    நன்றி ஜெய்லானி

    நன்றி மங்குனி முதல் வருகைக்கும் கருத்துக்கும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்