மனம் கவர்ந்த பாடல்கள் 2
மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை .........
இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல
இந்த படத்தில் இடம் பெற்ற மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை .........
இந்த பாடல் ஆரம்பத்தில் ஜானகி ஆ.....ஆ....ஆ..... என்று ராகம் இசைக்க தொடர்ந்து வரும் இசை நம்மை கொண்டு செல்லும் இடம் ஒரு பகல் நேரத்து மதிய வேளையில் ஒரு கிராமிய ஆற்றங்கரையோரம்அந்த பாடல் முடிந்த பின்னும் அதே இடத்தில் இருந்து வர மனம் மறுக்கும்
இந்த பாடலில் உன்னிப்பாய் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இந்த பாடல் ஆரம்பிக்கும் போது டு...டு...ட்டு...டு... என்று உடுக்கை ஒலி போல் கேட்க ஆரம்பிக்கும் அது பல்லவி முடிந்து அதை தொடர்ந்து வரும் இசையிலும் சரணத்திற்கு பின் வரும் பல்லவியிலும் இது வரும் பல்லவி வரும் இடத்தில் மட்டும் இந்த உடுக்கை ஒலி வரும் எத்தனையோ முறை நான் இந்த பாடலை கேட்டிருந்தாலும் சமீபத்தில் இந்த பாடலை கேட்ட போது இந்த ஒலியை கவனித்தேன் நீங்களும் கவனியுங்கள் பாடல் முடிந்த பின்னும் இந்த ஒலி நம்முள் கேட்டுகொண்டே இருக்கும்
இந்த பாடலில் வரும் வரிகளில் கோடையில் நான் ஓடை தானே வாடையில் நான் போர்வை தானே .......... எனக்கு பிடித்த வரிகள்
எப்பொழுது கேட்டாலும் நம்மை அமைதியின் சிகரத்திற்கு அழைத்து செல்லும் இந்த ராக தேவன் இளையராஜா வின் இசை வார்ப்பை என்னவென்று சொல்ல ....
நாயகன் நாயகி சூப்பர் ஸ்டார் ரஜினி ராதா
இந்த பாடல் எழுதியது வைரமுத்து
பாடல் பாடியவர்கள் S.P.பாலசுப்ரமணியம் ,S. ஜானகி
தயாரிப்பு கவிதாலயா (கே.பாலச்சந்தர்)
இயக்கம் S.P.முத்துராமன் படம் வெளியான ஆண்டு 1984
ஆர்.வி.சரவணன்
பாட்டு எங்க சார் ?
பதிலளிநீக்குநான் விரும்பிக் கேட்கும் பாடல் இது. ஆனால் உடுக்கை ஒலி கேட்கும் என்பது நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன். இனி கேட்கும் போது கவனிக்கிறேன்.
பதிலளிநீக்குமனதை மயக்கும் மெல்லிசை!!
பதிலளிநீக்குநானும் கேட்டிருக்கிறேன், ரெம்ப நல்லா இருக்கும்.
பதிலளிநீக்குநான் கவனித்ததில்லை. இனிமேல் கவனித்து கேட்கணும்.
பதிலளிநீக்குஅழகான.... இனிமையான பாடல்.. :-)
பதிலளிநீக்குyoutube link for the song..
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?v=_nM2IrWvQJ0
எனக்கும் இந்த பாட்டு பிடிக்கும் சரவணன்..
பதிலளிநீக்குநன்றி பத்மா
பதிலளிநீக்குவீடியோ லிங்க் கொடுக்கவில்லை இனி வீடியோ லிங்க் கொடுக்க முயற்சிக்கிறேன்
நன்றி ஸ்டீபன்
நன்றி சைவ கொத்து பரோட்டா
நன்றி ஆனந்தி வீடியோ லிங்க் முகவரி இட்டமைக்கு நன்றி
நன்றி குமார்
நன்றி இர்ஷாத்
நன்றி வானதி
அழகான பாடல் மீண்டும் ஞாபக படுத்தியதற்கு நன்றி!
பதிலளிநீக்குமிக மிக அருமையான பாடல்.... இனிமையான பாடல்.. ரஜினி கொள்ளை அழகு... அந்த வானவில் தோன்றும் காட்சி காண கண் கோடி வேண்டும்...
பதிலளிநீக்குஇளையராஜா இசையை பற்றி நான் புதிதாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை...
முதலில் படத்திற்கு “நான் காந்தி அல்ல” என்று வைத்து, பின் “நான் மகான் அல்ல” என்று மாற்றப்பட்டது ஒரு செய்தி...
வீடியோ லிங்க் அளித்த ஆனந்தி அவர்களுக்கு என் நன்றி....
///நன்றி ஆனந்தி வீடியோ லிங்க் முகவரி இட்டமைக்கு நன்றி ///
பதிலளிநீக்கு///வீடியோ லிங்க் அளித்த ஆனந்தி அவர்களுக்கு என் நன்றி....///
Thank You for the beautiful song :-)