ஞாயிறு, மார்ச் 22, 2015

வலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா




வலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமான் என்ற புண்ணிய ஸ்தலம். இங்குள்ள  சீதளா தேவி மகாமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெறும்  பாடை காட்டி திருவிழா புகழ் பெற்ற ஒன்றாகும்.

இத் திருக்கோவில் கும்பகோணம் டு  மன்னார்குடி சாலையை ஒட்டியே அமைந்துள்ளது. முன் மண்டபம், அதனை அடுத்து மகாமண்டபம், அடுத்து அர்த்த மண்டபம், அடுத்து கருவறை என கொண்டுள்ள கோவில் அமைப்பில் கோவிலை சுற்றி வெளிபிரகாரம் உள்ளது. கருவறையில் அருள் மிகு ஸ்ரீ சீதளாதேவி மகா மாரியம்மன் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறாள். வலது மேற் கரத்தில் உடுக்கையும், இடது மேற்கரத்தில் சூலமும், வலது கீழ் கரத்தில் கத்தியும்,இடது கீழ்கரத்தில் கபாலமும் கொண்டு இரு தோள்களின் மீதும் நாகங்கள் கொண்டு அமர்ந்து அருளாட்சி தருகின்றாள். 

இந்த ஆலயத்தின் புகழ் பெற்ற பாடை காவடி திருவிழா மாசி மாத கடைசி வெள்ளிகிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. பங்குனி முதல் ஞாயிறு முதல் திருவிழா கொண்டாட்டங்கள் துவங்கி அன்று முதல் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் திரு வீதியுலா வருகிறாள். பங்குனி இரண்டாம் ஞாயிறு ஆன இன்று  (22-03-2015) பாடை காவடி திருவிழா நடைபெற்றது. 

அழகு காவடி, பால் குடம் , கரகம் போன்றவற்றுடன் நோயுற்றவர்கள் தங்கள் நோய் தீர வேண்டி கொண்டு வேண்டியது நிறைவேறியவுடன் ஈமக்ரியை செய்வது போல் பாடையில்இருந்து கொல்லி சட்டி ஏந்தி கொட்டு மேளம் கொட்டி  வந்து ஆலயத்தை வலம் வந்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.  இன்று அம்மன் திருவீதி உலாவும் செடில் சுற்றுதலும் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற   மகாமாரியம்மன் பாடை காவடி திருவிழா படங்கள் உங்கள் பார்வைக்கு 


கோவில் நுழைவாயிலில் பக்தர்கள் வெள்ளம் 



செடில் சுற்றுதல் 



ஆலயத்தை சுற்றி வரும் பாடை காவடி 





பால் குடம் 


செடில் தயார் நிலையில் 


ஆலயம் முன்னே உள்ள சூலத்தில் பூஜை 


தெருவில் தொடர்ந்து வரும் பாடை காவடி 


இரவில் மின் விளக்கொளியில் ஆலயம் 



தெருவெங்கும் பக்தர்கள் 


மாரியம்மன் திருவீதி உலா 


மஞ்சள் மாமாரிமுன்னே சொல்லுவோர் மனகுறையைப்
பஞ்சு போல் பறக்கடிப்பாள் பாடை கட்டி மாரியம்மன் 

அம்மனை வேண்டுவோம் அருள் பெறுவோம் 

ஆர்.வி.சரவணன் 

7 கருத்துகள்:

  1. அருமையான தொகுப்பு சார் வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. பாடைகட்டி மகா மாரியம்மன் – பெயரே வித்தியாசமாக இருக்கிறது. காவடிவிழா படங்களைத் தனியே கிளிக் செய்து பெரிதாக்கி பார்த்தேன். சினிமா உலக நண்பர் அல்லவா? படங்கள் பார்க்க பரவசம். அம்மனுக்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று சொல்லி இருந்தால், என்னைப் போன்று தெரியாதவர்கள் அறிந்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி இளங்கோ சார். நீங்கள் கேட்டிருந்த பெயர் காரணம் பற்றி சொல்கிறேன்

      நீக்கு
  3. பள்ளி நாள்களில் சென்றுள்ளேன். நெடு நாட்களுக்குப் பின்னர் இந்த வருடம் செல்ல திட்டமிட்டிருந்தோம். தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லமுடியவில்லை. தங்கள் பதிவு அந்த குறையைத் தீர்த்தது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்